நிறும விவகார அமைச்சகமானது நிறுவனங்களின் (திருத்தம்) சட்டம், 2015 மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒருசில விதிவிலக்குகளை அளித்து வருகின்றது. அதாவது, எந்தவொரு நிறுவனத்திற்கும் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மூலதனத்திற்கான தேவை அறவே நீக்கப்பட்டு உள்ளது.
அரசு செயல்முறை மறு பொறியியல் (GPR) முன்முயற்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் விரைவான ஒருங்கிணைப்பு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக 22.01.2016 தேதியிட்ட அறிவிப்பின் வாயிலாக மத்திய பதிவு மையம் Central Registration Centre (CRC) நிறுமங்களின் சட்டத்தின் 2013 பிரிவு 396 இன் கீழ் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தால் (MCA) நிறுவப்பட்டு உள்ளது.
ஒரு நிறுவனத்தின் பெயர், இடஒதுக்கீடு, இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை D அல்லது D+1 நாட்களுக்குள் செயல்படுத்தப் பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும் ( இங்கு ஞி என்பது கட்டண உறுதிப்படுத்தல் தேதியாகும்). முதலில், இந்த CRC ஆனது மின்-படிவம் INC -1 இன்மூலம் பெயர் கிடைப்பதற்கான விண்ணப்பங்களை செயலாக்குகின்றது. இரண்டாவாதாக, CRCயானது நிறுவனங்களை இணைப்பதற்கான மின் படிவங்களை செயலாக்கத் துவங்குகின்றது.
MCA எனும் நிறுவனங்களின் விவகார துறை அமைச்சகமானது படிவம் எண் INC -29 க்கு பதிலாக மின்னணு முறையில் நிறுவனத்தை SPICe இன் வாயிலாக மின்படிவத்தை இணைப்பதற்கான எளிமையான படிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த SPICe பயன்படுத்தி இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு PAN , TAN ஆகியவற்றை வழங்குவதற்காக CBDT எனும் மத்திய நேரடி வரிவாரியத்துடன் MCA 21 எனும் அமைப்பை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல் படுகின்றது. பங்குதாரர்கள் PAN , TAN ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை SPICe மூலம் இணைப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நேரத்தில் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது ஆகும். வருமான வரித் துறையால் ஒதுக்கப்பட்ட PAN/ TAN ஐ நிறுவனத்தின் இணைத்தல் சான்றிதழில் ஒட்டப்பட வேண்டும். பங்குதாரர்கள் முதல் இயக்குநர்கள் வரை SPICe மூலம் DIN (இயக்குநர் அடையாள எண்)க்கு விண்ணப்பிக்கலாம். இதன் விளைவாக, நமது நாட்டில் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயல் முறைகளின் எண்ணிக்கையும், நேரமும் குறைக்கப்பட்டு உள்ளன.
SPICe க்குப் பிறகு, MCA ஒரு புதிய எளிமைப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான தனித்த பெயர் ஒதுக்கீடு செய்வதற்காக R.U.N. எனும் சேவையை மின் படிவம் INC -1 க்கு பதிலாக அறிமுகபடுத்தி உள்ளது. இந்த பெயர் முன்பதிவின்போது டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) பயன்படுத்த வேண்டிய தேவையை இதன்மூலம் அறவே நீக்கி உள்ளது. இது இந்தியாவில் எளிதாக வணிகத்தை செய்வதற்கான மற்றொரு மதிப்பு கூட்டல் நடவடிக்கை ஆகும்.
மேலும், நிறுவன விவகார அமைச்சகம் LLP விதிகள், 2009 ஐ வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாளிகள் (இரண்டாம் திருத்தம்) விதிகள், 2018 மூலம் 18.09.2018 அன்று அறிவிக்கப்பட்டு 02.10.2018 முதல் நடைமுறைபடுத்தி உள்ளது. இந்த திருத்தத்தில் பெயரை முன்பதிவு செய்வதற்காக LLP படிவம் 1 இற்கு பதிலாக RUN-LLP எனும் படிவத்தையும், LLP படிவம் 2 இற்கு பதிலாக FiLLiP எனும் படிவத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது, முந்தைய LLPஇன் இணைப்புகள் அந்தந்த ROC எனும் வட்டார நிறுமங்களின் பதிவாளர்களிடம் செய்யப்பட்டன. இப்போது, இந்த செயல்முறை நிறுவனங்களுடன் இணையாகவும், இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான ஒரு பகுதியாகவும் மையப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசானது R.U.N. எண்180 (E). நாள் 06.03.2019 இன் வாயிலாக நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 இன் விதி 38 (2) ஐ திருத்தி உள்ளது. இந்த அறிவிப்பில், அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ15, 00,000 இற்குள் அனைத்து நிறுவனங்களும் MCA இல் பூஜ்ஜிய கட்டணத்துடன் பதிவுசெய்து தங்களுடைய வணிகத்தை துவங்கலாம் என குறிப்பிட்டு உள்ளது. முன்னர் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்திற்கு பதிலாக, SPICe மின் படிவத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசானது நி.ஷி.ஸி. எண்275 (E) நாள். 29.03.2019 இன் வாயிலாக நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014 ஐ திருத்தம்செய்து உள்ளது. இதில், SPICe மின்படிவத்தில் நிறுவனங்களை இணைக்கும் நேரத்தில் PFO, ESIC, GST ஆகியவற்றை பதிவுசெய்து MCA21 முறையை ஒருங்கிணைக்க விதி 38A ஐ புதியதாக கொண்டுவந்து உள்ளது.
நிறுவனத்திற்கான பெயர் ஒதுக்கீடு செய்யும் விதிகள் MCA வால் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், நிறுவனங்கள் (இணைத்தல்) ஐந்தாவது திருத்த விதிகள், 2019 இல் பெயர் இடஒதுக்கீட்டில் தெளிவற்ற தன்மையைத் தவிர்ப்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் விளைவாக, பெயர் நிராகரிப்பு விகிதம் மற்றும் ஒப்புதலுக்கான நேரம் குறைந்துள்ளது. இதனால், விரைவாகவும், அதிக வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும், செயல்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 8இன்கீழ் பதிவுசெய்யபட்ட நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பு விதிகளை MCA திருத்தி உள்ளது. 07.06.2019 தேதியிட்ட G.S.R. எண் 411 (E), இன்படி அந்த நிறுவனங்களின் உரிமமும் இணைப்பதற்கான விண்ணப்பமும் ஒரே வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதாவது, SPICeஐ அறிமுகபடுத்துவதற்கு முன் அத்தகைய உரிமம் அந்தந்த ROCகள் / RD களில் இருந்து மின்படிவம் INC-12 மூலம் பெறப்பட்டது. இது, இப்போது SPICe உடன் இணைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை பிரிவு 8இன் கீழ் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கால அளவைக் குறைத்து உள்ளது.
– முனைவர். ச. குப்பன்