தங்கம் விலை தொடர்ந்து உயர்வு !

 

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது.

எனினும் நிலைமை சீரடைந்து வருவதால் தங்கத்தின் விலை சற்று இறங்கி வந்தது. எனினும் பொங்கல் பண்டிகை முடிந்து திருமண சீசன் தொடங்குவதால் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.3882க்கும், பவுன் ரூ.160 ரூபாய் குறைந்து ரூ.31056க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32608 க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ.51.40க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here