Monday, September 27, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

வியப்புகளும் விபத்துகளும்

ஐஸ் பாய், காக்கா ஆட்டை, கில்லி தாண்டல், பம்பரக் கட்டை, லக்கோரி, ஓடு பந்து, பட்டம் விடுதல், குண்டு ஆட்டை, பாம்பான், பல்லாங்குழி, பூ பறிக்க வருகிறோம், கிச்சு கிச்சு தாம்பூலம், நொண்டி ஆட்டை – என பல வகையான நாட்டுப் புற விளையாட்டுகள் எல்லாம் அப்படியே தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு விளையாட்டு உச்சத்தில் உள்ள போது, அதில் இன்னொரு விளையாட்டு குறுக்கே வராது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு சீசன் இருக்கும்.

- Advertisement -

ஒரு தெருவில் பம்பர விளையாட்டைத் தொடங்கி விட்டாலே போதும். அது, அப்படியே இன்னொரு தெருவுக்குப் பரவி விடும். அப்படியே, அதுவரை இருந்த பழைய விளையாட்டுகள் மறைந்து போய், இந்த புதிய விளையாட்டு களத்தில் இறங்கி விடும். இனி, அடுத்த விளையாட்டு களத்தில் இறங்கும் வரைக்கும் இப்போது களம் இறங்கிய விளையாட்டு தான் ராஜா.

இந்த வெர்ஷன் எப்போது முடிந்தது அடுத்த, புதிய வெர்ஷன் எப்போது அப்டேட் ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த அந்த காலக் கட்டத்திற்கு ஏற்ப அந்தந்த வெர்ஷன்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன.

பம்பரக் கட்டை விளையாட்டை “ஃபஸ்ட் அபீட்”, “செகெண்ட் அபீட்”- என்று சிறுவர்கள் சலிக்கும் வரைக்கும் ஆடுவார்கள். பிறகு, மாலையில் பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வரும் வழியில் பார்த்தால் சில சிறுவர்கள் “திடீர்”- என கில்லி – தாண்டல் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். இதற்கான சாஃப்ட்வேரை மாற்றி புதிய வெர்ஷன் ஆப்பை யார் கொண்டு வந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், விளையாட்டு மட்டும் மாறிக் கொண்டே இருக்கும்.

இதில், பட்டம் விடுதல் விளையாட்டு மட்டும் விதிவிலக்கு பெற்றது. காற்று அடிக்க தொடங்கிய உடனே, வவ்வால் பட்டம் வானத்தில் பறக்கத் தொடங்கி விடும். வவ்வால் பட்டத்தில் தொடங்கி, அச்சுப் பட்டம், கதவுப் பட்டம் என காற்றின் வேகத்தைப் பொறுத்து பட்டத்தின் அளவும், அதனை பறக்க விடுகின்ற ஆட்களும் மாறி விடுவார்கள்.

இது போன்ற விளையாட்டுகள் அனைத்துமே, நாமாக முடிவெடுத்து, நாமாகவே விளையாடிய விளையாட்டுகள் ஆகும். இதில் ஆனந்தம், உடல்நலம், குழு மனப்பான்மை, கூடிக் கலைவது போன்ற பல வெவ்வேறு பண்பு நலன்கள் மறைந்து நின்று ஒளி வீசிக் கொண்டு இருந்தன. இவை எல்லாம் அன்றைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் கூட, இன்றைக்கு அது வியப்பாகத் தெரிகிறது.

ஆனால், இந்த அத்தனை வகையான விளையாட்டுகளையும் ஒரே அடியில் வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் இன்றைக்கு ஆபத்துகள் நிறைந்த கம்ப்யூட்டர் விளையாட்டுகள் தான் அமர்ந்து உள்ளன. இவை அத்தனையுமே மனித உணர்ச்சிகள் அற்ற இயந்திர விளையாட்டுகள் ஆகும்.

இவை, தொடக்கத்தில் குழந்தைகளின் ஐக்கியூ அறிவுகளை வளர்ப்பது போலத் தெரியும். ஆனால், பின்பு படிப்படியாக வன்முறைகளை சிறுவர்களுக்குள் விதைக்க தொடங்கி விடுகின்றன.

இந்த ஆபத்தான விளையாட்டுகள் முதலில் வீடியோ கேம் பார்களில் தொடங்கி பின்பு வீடியோ விளையாட்டாக வீட்டிற்குள் புகுந்தன. இன்றைக்கு, “பப்ஜி” “சப்ஜி” என நம்முடைய குழந்தைகளின் மூளைக்குள் புகுந்து விட்டன.

நம்முடைய ஒவ்வொருவருடைய குழந்தைகளும் இன்றைக்கு தனிமையில் அமர்ந்து கொண்டு, எங்கோ தொலைவில் உள்ள மற்றொரு தனிமையான குழந்தையுடன் விளையாடிக் கொண்டு உள்ளார்கள். அதனை நாமும் கண்டும், காணாமல் கடந்து போய் விடுகின்றோம்.

விடாதே, பிடி, அடி, குத்து, கொல்லு, என கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடும் குழந்தைகள் இன்றைக்கு பெருகி விட்டார்கள். இதே குழந்தைகள் தான் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு, குழு வன்முறையில் இறங்குகிறார்கள். அல்லது, அந்த கும்பல் வன்முறைகளை நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த ஆபத்தான விளையாட்டுகளுக்கு வெர்ஷன் அப்டேட் செய்வது நம் கையில் கிடையாது. இதன் சூத்திரங்களைப் போடுவது நீங்களோ, நானோ அல்ல. கண்ணுக்குத் தெரியாத கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் இதன் சூத்திரதாரிகளாக உள்ளார்கள். இவர்களின் வருமான வேட்டைக்கு நாம் அனைத்தையும் இழந்து வருகிறோம். ஆனால், இந்த இழப்புகள் அனைத்தும் நம்முடைய ஒப்புதல் படியே நடந்தேறி வருகின்றன. நம் கையில் உள்ள செல்போன்களின் வழியாகவே வந்து, நம் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கும் இந்த நவீன அரக்கர்களின் நச்சுக் கரங்களை எப்போது வெட்டி எறியப் போகிறோம் ?

– அஸ்கர் அலி

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.