Tuesday, January 19, 2021

பழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா?

இப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...

Latest Posts

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

எங்களுக்கான மார்க்கெட்டிங் இதுதான்

படித்து முடித்தவுடன், சொகுசான வேலையை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில், தன்னுடைய அப்பா திரு. தீனதயாளன் அவர்கள் நடத்திவரும் தீனன் எலக்ட்ரிக்கல்ஸ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான லைட்டிங் சப்ளே செய்வது, ஜெனரேட்டர் சப்ளே செய்வது, மேடை அமைத்து கொடுப்பது, நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஃபர்னிச்சர் -களை ஏற்பாடு செய்வது, விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு களை செய்து தருவது போன்ற சேவைகளை வழங்கிக் கொண்டு இருக்கும் இளம் தொழில் முனைவோரான திரு. யுகேஷ் கிருஷ்ணா அவர்களை, அவர்களுடைய நிறுவனத்தில் வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம், அவரிடம் பேசியதில் இருந்து,

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பி.பி.ஏ. படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்துவிட்டு பிறகு சென்னை சைதாப்பேட்டை யில் எனது தந்தை நடத்தி வரும் தீனன் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்தேன். தொழில் முனைவோர் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்ததால் எதிர்காலத்தில் நாமும் ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே இருந்தது. அதற்கான வாய்ப்பும் எளிதாகவே கிடைத்துவிட்டது. எனது அப்பா இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பாக சைக்கிள் கடை நடத்தி வந்தார். அதன் பிறகு, சிறிதாக தொடங்கப்பட்டது தான் தீனன் எலெக்ட்ரிக்கல்ஸ். நாங்கள் நிகழ்ச்சிகளுக்கு தேவையான லைட்டிங், சாமியானா, டேபிள் போன்ற அனைத்து பொருட்களையும் ஏற்பாடு செய்து தருகிறோம். எங்களது நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது. சைதாப்பேட்டையில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் தான் தொடர்பு கொள்வார்கள். தொடக்க காலகட்டத்தில் ஜி கே மூப்பனார் அவர்களுடைய கூட்டத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருக்கிறோம். அது தவிர பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் எங்களது நிறுவனத்தில் இருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருக்கிறோம்.

திருமண நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள், விளையாட்டு போட்டிகள், கட்சிகளின் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விழாக்களுக்கும் நாங்கள் அடிப்படை ஏற்பாடுகளை செய்து தருகிறோம். பெரும்பாலும், வெளியில் நடக்கின்ற அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் எங்களுடைய நிறுவனத்தின் பங்களிப்பானது அத்தியாவசிய தேவையாகும். மேடை அமைப்பதில் இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துத் தருவது வரையிலும் எங்களது சேவை அமையும். வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கான தேவை என்ன என்பதை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவோம். எங்களிடம் ஒருமுறை அவர்களுக்கு தேவையானவற்றை உறுதி செய்துவிட்டுச் சென்றாலே போதுமானது. அவர்கள் கூறிய நேரத்தில் சரியாக அந்த வேலைகளை செய்துவிடுவோம். அப்படி சரியான நேரத்தில் செய்து கொடுப்பதால் வாடிக்கையாளர்களே நாங்கள் பேசிய பணத்தைவிட அதிகமாக தந்துவிட்டு செல்வார்கள். மேலும், அவர்களுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் எங்களை பரிந்துரை செய்கிறார்கள். எங்களுக்கான மார்க்கெட்டிங் இதுதான்.

எங்களிடம் 12 பேர் இப்போது வேலை பார்க்கிறார்கள். வடமாநில நபர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. இந்தத் துறையில் மனித வளம் எனப்படுகிற மேன் பவர் தான் மிகவும் இன்றியமையாதது ஆகும். மனித வளம் சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் இல்லை என்றால் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது. எனவே நாங்கள் எப்போதும் நிறைய நபர்களை அவ்வப்போது வேலைக்காக பயன்படுத்திக் கொள்வதுண்டு. எங்களுடைய துறையில் புதுமையை புகுத்தி தொழிலை தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்வதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.

Also read: மனைவிக்காக ஒரு ஈவன்ட் தொழில்

வேலை செய்துவிட்டு பணம் வாங்குவது தான் மிகவும் சவாலாக உள்ளது. நாங்கள் சேவைத் துறையில் உள்ளதால் ஒரு வேலையை முடித்துவிட்டு திரும்புவதற்குள், அடுத்த வேலை தயாராக இருக்கும். எனவே, வேலை! வேலை! என்று அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலநேரங்களில் பணத்தை வாங்காமல் விட்டது உண்டு. ஆனால் அதில், கவனமாக இருக்க வேண்டும் என இப்போது உறுதியாக இருக்கிறோம். பணத்தைவிட நம்முடைய நிறுவனத்தின் நம்பகத்தன்மையும் பெயரும்தான் பெரியது என கருதுபவர்கள் நாங்கள். எனக்கு ஒருவரின் கீழ் பணிபுரிவதற்கு இயல்பாகவே விருப்பம் இல்லாமல் இருந்தது. நம்முடைய தொழிலில் எந்த அளவிற்கு உழைப்பை செலுத்துகிறோமோ, அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அதற்கு, அந்த துறையில் போதிய அனுபவமும், அதன் மீது தீராத ஆர்வமும் இருக்க வேண்டும்.

புதிதாக அந்தத்துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் துறையை நேசித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதை என்னுடைய மூன்றாண்டு காலம் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒருமுறை எனது ஆசிரியர் ஒவ்வொருவரையும் அவர்களுடைய அப்பா பெயர் மற்றும் அவர் செய்யும் வேலை பற்றியும் கூற சொன்னார். நானும் என்னுடைய அப்பா நிகழ்ச்சிகளுக்கு தேவையான லைட்டிங் சப்ளே செய்கிறார் என்று எங்களுடைய தொழில் பற்றி கூறினேன். அப்போது, வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட என்னை சற்று குறைவாக மதிப்பிட்டு பார்ப்பதை உணர்ந்தேன். ஓராண்டுக்கு முன்பு, அதே பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்காக அவர்களுக்கு தேவையான பணியை செய்து கொடுத்துவிட்டு, அதே ஆசிரியரை சந்தித்து, நான் உங்கள் மாணவன்தான் சார் என்றேன். அவரிடமிருந்து பதில் வரவில்லை. நம்முடைய வெற்றி என்பது சொல்லில் இல்லை செயலில் இருக்கிறது. இப்போது, அந்த பள்ளியின் மொத்த விழாக்களையும் நாங்கள் தான் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் புதிது புதிதாக சந்தைக்கு வரும் எங்களது துறைசார்ந்த பொருள்களில் முதலீடு செய்வதை பழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். ஒருமுறை முதலீடு செய்தால் அந்த பொருளின் தரத்தை பொறுத்து இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு அந்த பொருளில் இருந்து லாபத்தை சம்பாதித்துவிட முடியும். எனவே புதுப்புது பொருட்களை தேடிக் கொண்டே இருப்போம். இதைவிட சிறப்பாக அடுத்த முறை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிக்கும் போதும் என்னுடைய மனதில் தோன்றுவது உண்டு. சென்னை முழுவதும் நாங்கள் எங்களது சேவையை செய்து கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இதை, தமிழகம் முழுவதும் மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 நிகழ்ச்சிகள் வரை செய்து விடுவோம். எம் என் சி நிறுவனங்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுகள், ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் எங்களிடம் பெரும்பாலும் வருகின்றது.

பத்தாயிரம் ரூபாய் கொண்ட வாடிக்கையாளர் வந்தாலும் சரி ஒரு லட்சம் கொண்ட வாடிக்கையாளர் வந்தாலும் சரி எங்களுடைய சேவையை சிறப்பாக செய்து தர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கும். பிறகு அந்த 10000 ரூபாய் கொண்டுவந்த வாடிக்கையாளர் பத்து லட்சம் ரூபாய் அளவிற்கு நிகழ்ச்சி நடத்தும் வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளும் எங்கள் நிறுவனத்தில் உண்டு.

இந்த துறையில் தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்றால் அனுபவம் என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். எனது தந்தையின் தொழில் என்பதால் எனக்கு சிறுவயது முதலே இந்த தொழில் மீது ஆர்வம் இருந்தது. எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது இந்த துறையில் வேலை செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால், அதிலிருந்து நுணுக்கங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் தான் கற்றுக்கொண்டேன். விடாமுயற்சி என்றும் வெற்றியை பரிசாகத் தரும் என்பதை உணர்ந்து உள்ளேன். என்றார் திரு. யுகேஷ் கிருஷ்ணா (95662 28171).

– ரவி. தினேஷ்குமார்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

Don't Miss

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.