SVLDRS, 2019 என சுருக்கமாக அழைக்கப்படும் SABKA VISHWAS (LEGACY DISPUTE RESOLUTION) SCHEME, 2019 எனும் புதிய சட்டசிக்கல் தீர்வுதிட்டத்தின் குறிக்கோள்களாவன:
மத்திய கலால்வரி சேவை வரிதுறைகளின் கடந்தகாலத்தில் ஏற்பட்ட சட்ட தகராறுகளை தீர்வுசெய்வதற்கான ஒரு முறைமட்டுமான நடவடிக்கை, இணக்க வரி செலுத்துவோருக்கு தன்னார்வமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
அதாவது, இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் பழைய சேவை வரி, கலால்வரி ஆகியவற்றின் அடிப்படையிலான வழக்குகளில் முடக்கப்பட்டு உள்ள ரூ. 3.75 லட்சம் கோடி தொகையை சச்சரவுகளில் இருந்து வியாபாரிகளை விடுவித்து, தங்களுடைய வியாபார பணிகளை முழுமையாக தொடர அனுமதிப்பதாகும். எனவே, சேவை வரி, மத்திய கலால் வரி வழக்குகள் தொடர்பான நிலுவையில் உள்ள சச்சரவுகளை தீர்வுசெய்வதற்கு அதனால் பாதிக்கப்படுபவர் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனை தொடர்ந்து அவ்வாறான சச்சரவுகள் அனைத்தும் இந்த திட்டத்தின் வாயிலாக தீர்வுசெய்யப்பட்டு விடுவதால் அனைவரும் புதிய ஜிஎஸ்டியை நடைமுறைபடுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடியும்.
இந்த தீர்வு திட்டத்தின்கீழ் இரண்டு அடிப்படையான முக்கிய கூறுகள் உள்ளடங்கி உள்ளன:
தகராறுகளுக்கான தீர்வு: மத்திய கலால்வரி, சேவை வரி ஆகியவற்றின் கீழ் தகராறுகள் ஏதேனும் ஏற்கனவே உருவாகி பல்வேறு மேல்முறையீட்டு மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமூகமான தீர்வினை கொண்டு அதனை அறவே கைவிடுவது.
பொது மன்னிப்புதிட்டம்: இதன்படி, வரி செலுத்துவோர் நிலுவையில் உள்ள வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்துவதற்கும் சட்டத்தின் கீழ் வேறு எந்தவொரு விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கும் ஒருமுறை மட்டுமான வாய்ப்பை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான சிறப்பு என்ன என்றால், இது அனைத்து வகை வழக்குகளுக்குமான வரி நிலுவைகளில் கணிசமான நிவாரணம் அளிக்கின்றது. அத்துடன் வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றை முழுமையாக தள்ளுபடி செய்கின்றது. பழைய மத்திய கலால்வரி, சேவை வரியின் கீழான எந்தவொரு தருணங்களிலும் எழுந்த அனைத்து தகராறுகளின், வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றின் வேறு எந்தப் பொறுப்பும் இருக்காது. மேலும், அவ்வாறான வழக்குகளில் இருந்து முழுமையான பொது மன்னிப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
பின்வரும் வழக்குகளுக்கு இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ் தீர்வு பெறமுடியும்
சேவை வரி, மத்திய கலால்வரி தொடர்பான ஜூன் 30, 2019 அன்று நிலுவையில் உள்ள காரணம் கோரும் அறிவிப்பு அல்லது மேல்முறையீடுகள்.
சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பான வரித்தொகை செலுத்தாமல் நிலுவையாக உள்ளத் தொகை.
ஜூன் 30, 2019 அன்று அல்லது அதற்கு முன்னர் சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக விசாரணை, புலனாய்வு விசாரணை அல்லது தணிக்கை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு நிலுவையில் உள்ள வரித்தொகை.
சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக தானாகவே முன்வந்து செய்யப்படும் ஒரு தன்னார்வ வெளிப்பாடு.
இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்திலிருந்தான விதி விலக்குகள்
மத்திய கலால்வரிச் சட்டம், 1944 இன் நான்காவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ள பொருட்களின் வழக்குகள் (இதில் புகையிலை , பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்).
வரி செலுத்துவோர் மத்திய கலால் வரிச்சட்டம், 1944 அல்லது நிதிச் சட்டம், 1944 இன் கீழ் தண்டனை பெற்ற வழக்குகள்.
இந்த சட்டத்தின்கீழ் தவறாக பணத்தைத் திருப்பி வழங்கியது தொடர்பான வழக்குகள்.
இந்த சட்டத்தின்கீழ் தீர்வாணையத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்குகள்.
இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ்கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு
வட்டி, அபராததொகை (fine) , தண்டத்தொகை (penalty) ஆகியவற்றை மொத்தமும் தள்ளுபடி செய்வது.
வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பது.
தீர்ப்பு அல்லது மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்பு உடைய வரித் தொகையானது 50 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 70% நிவாரணமும் வழக்குகளில் தொடர்பு உடைய வரித் தொகையானது 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 50%நிவாரணமும் கிடைக்கும்.
இந்த வரி தொடர்பான விசாரணை மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட வழக்குகளுக்கு வரிசெலுத்தும் கோரிக்கையானது 2019 ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ள வரித்தொகை மட்டும் இதன்கீழ் நிவாரணம் கிடைக்கும்.
வரி செலுத்தவேண்டிய தொகை செலுத்தாமல் நிலுவையாக இருந்தால், அவ்வாறு செலுத்தவேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டத் தொகையானது 50 லட்சம் அல்லது 50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 60% நிவாரணமும், மற்ற தருணங்களில் அதாவது அவ்வாறு செலுத்தவேண்டும் என உறுதிப்படுத்தப்பட்ட தொகையானது 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 40% நிவாரணமும் கிடைக்கும்.
தன்னார்வமாக வெளிப்படுத்தப்பட்ட தருணங்களில், இவ்வாறு அறிவித்தவர் வெளிப்படுத்திய வரி செலுத்தவேண்டிய கடமையின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் பிற சிறப்புகள்
ஏற்கனவே, இந்த வரிசெலுத்துவதற்காக செலுத்தப்பட்ட வைப்புத்தொகையை சரிசெய்து கொள்ளும் வசதி.
இந்த தீர்வு திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையினை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு, செலுத்தப்பட்ட தொகை பின்னர் உள்ளீட்டு வரிவரவாகப் பெற முடியாது.
கேள்விக்கு உரிய நடவடிக்கைகளின் முழுவதுமாகவும், இறுதியாகவும் முடிவுக்கு கொண்டுவருதல். ஒரே விதிவிலக்கு என்னவென்றால், பொறுப்பை தானாக முன்வந்தால், ஒரு வருட காலத்திற்குள் தவறான அறிவிப்பை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் கடந்த கால மற்றும் எதிர்கால வரிவரவுகளுக்கான முன்னோடியாக கருதப்பட மாட்டாது. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் இறுதி முடிவு கொண்டு வரப்படும்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தனிப்பட்ட விசாரணைக்கு வாய்ப்பு இல்லாமல் இறுதி முடிவு இல்லை.
இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முழுமையாக தானியங்கியாக செய்யப்படும்.
– முனைவர். குப்பன்