- Advertisement -
3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பெசாஸ் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை டிஜிட்டல் மயமாக்க இங்கு 1 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெசாஸ் கூறும்போது, “21ம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாகப் போகிறது. இதில் முக்கியமான கூட்டணி இந்திய-அமெரிக்கக் கூட்டணியாகும்” என்றார்.
மேலும் 2025-ம் ஆண்டு வாக்கில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மேக் இன் இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமேசான் சி.இ.ஓ பெசாஸின் 3 நாள் இந்தியப் பயணம் புதனன்று தொடங்கியது, முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார் பெசாஸ்.
- Advertisement -