- Advertisement -
- தங்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை கூகுள் தேடுதலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள். அவை போலியானதாகவோ, மால்வேர் உள்ளதாகவோ இருக்கலாம்.
- இணையதள வங்கி சேவையை கூகுள் தேடலில் செய்யாதீர்கள். அவை பணம் இழப்பை ஏற்படுத்தலாம்.
- வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்களை தேடாதீர்கள் அவைகளில் போலி எண்களும் மறைந்திருக்க கூடும்.
- மருந்துகள் விவரம் நோய்களின் அறிகுறி ஆகியவற்றை தேடுவதைத் தவிருங்கள். அவற்றை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
- தனிப்பட்ட நிதி மற்றும் பங்கு சந்தை அறிவுரைகளை தேடுவதை அறவே விட்டொழியுங்கள்.
- அரசு இணையதளங்கள் தேடுவதில் சில இணையதளங்கள் அரசு இணையதளங்கள் போலவே உருவாக்கப்பட்டிருக்கும். ஆதலால் அதனையும் தவிருங்கள்.
- சமூக வலைத்தள முகவரிகளை கூகுள் டேலில் லாகின் செய்து தேடுவதை செய்யாதீர்கள்.
- இ-காமர்ஜ் வலைத்தளங்கள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகளை தேடுவதை தவிருங்கள்.
- இலவச ஆன்டி-வைரஸ் அப்ளிகேஷன்களை கூகுள் தேடல் வாயிலாக பதிவிறக்கம் செய்தால் உங்கள் கணினி பழுதடைய வாய்ப்பிருக்கிறது..
- கூப்பன்களின் கோட் மூலம் தள்ளுபடி பணதேவையை கூகுள் தேடல் வாயிலாக செய்வதை தவிருங்கள்.
- பிறகென்ன ? நீங்கள் வலைத்தளத்தில் சிறந்தவராக மாறி விடுவீர்கள்.
– கே. அசோகன், மும்பை
- Advertisement -