இணைய பாதுகாப்புக்கு..

ஆன்லைன் என்றாலே சிறப்புதான், ஆனால் அதனால் இழப்புகளும் அதிகம். சோசியல் மீடியா கணக்குகளில் (பேஸ்புக், டிவிட்டர்) கொடுக்கப் பட்டு இருக்கும் தொலை பேசி எண்ணோடு கூடுதலாக தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியும் அப்டேட்டாக வைத்திருங்கள். இவைகள் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை வேறு யாராவது செய்தால் அதை அலார்ட் ஆக அறிவிக்கும். முன் எச்சரிக்கைக்கு முதன்மை தாருங்கள்.

பாஸ்வேர்ட் பாதுகாப்பாக வைத்திருக்க பாஸ்வேர்ட் மேனேஜர் பயன்படுத்துதல் இணைய பாதுகாப்பிற்கு கூடுதல் நன்மை அளிக்கும்.

Also read: முகநூலில் யூடியூப் சேனல் இணைப்பது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் -9

மென்பொருள்களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அது தொடர்பாக தகவல்கள், அறிவிப்புகள் வந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல், தாமதப்படுத்தாமல் உடனே மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்துவதும், தாமதப்படுத்து வதும் தவறுக்கு துணை நிற்கும்.

இரண்டு அடுக்கு சோதனை முறையை (Two step verification) பயன்படுத்த பெரும்பாலும் தயங்குவீர்கள். தயக்கத்தை தள்ளி விட்டு அதை மேற்கொள்ளுதல் இணையத்திற்கும், நம் பண நலத்திற்கும் கூடுதல் சிறப்பாகும். மேலும் பாதுகாப்பை அளிக்கும்.

கூகுள் செக்யூரிட்டி சோதனையை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். நம் தகவல்கள், விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என அவை உறுதி செய்யும், தவறு இருந்தால் அவற்றை எச்சரிக்கும்.

நாம் பயன்படுத்தும் ப்ரவுசர்களில் அதிகமாக பயன்படுத்தும் தேவையற்ற அப்ளிகேஷன்களை நீக்கி விடவும். சில அப்ளிகேஷன்கள் தீங்கு விளைவிக்கும் மால்வேர்கள் கொண்டதாக இருக்கலாம்.

Also read: சமூக ஊடகங்கள்

நம் கூகுள் கணக்கு பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு, பாஸ்வேர்ட் அலர்ட் பயன்படுத்தலாம். குரோம் ப்ரவுசர் பயன்படுத்தும் போது தானியங்கி அலார்ட் -ம் பயன்படுத்தலாம்.

நீண்ட காலம் பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால், கணினி மற்றும் ஆண்ட்ராய்ட் அலைபேசியில் இருக்கும் கணக்குகளை லாக்-அவுட் செய்து விடுவது மிகவும் பாதுகாப்பான ஒன்று ஆகும்.

– கே. அசோகன், மும்பை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here