முகநூலில் யூடியூப் சேனல் இணைப்பது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் -9

முகநூலில் தொழில் பக்கம் -2

உலகில் முகநூல் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. ஏறக்குறைய 30 கோடி மக்கள் இந்தியாவில் முகநூல் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், நம் தொழிலை முகநூல் பயன்படுத்தி சந்தைப்படுத்தினால் விரைவாக வாடிக்கையாளரை நோக்கி செல்லமுடியும்.

கடந்த இதழில் முகநூலில் தொழில்பக்கம் (business page) உருவாகும் முறைகளில் சில வழிமுறைகளை பார்த்தோம். இதில் அவற்றை எப்படி சிறப்பாக மாற்றுவது என்பதை பற்றி பார்ப்போம். தொழில் பக்கத்தில் புரோஃபைல் படத்தின் கீழ் ADD page button என்பதை தேர்வு செய்தால் அங்கு make a booking with you, contact you, learn more about your business, shop with you என்று நான்கு தேர்வுகள் இருக்கும்.

உங்களுடையது டிக்கெட் விற்பனை தொழில் என்றால் முதல் பட்டனை தேர்வு செய்து கொள்ளுங்கள். இரண்டாவதில் உங்கள் மொபைல் எண் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்ள பயன்படும். நீங்கள் யூடியூப் -ல் சேனல் உருவாக்கி அதில் வீடியோ வழியாக தொழில் செய்பவர் என்றால் (சான்று-வகுப்பு எடுப்பது, சமையல் செய்து காட்டுவது) மூன்றாவது பட்டனை தேர்வு செய்யலாம். ஆன்லைன் வழியாக பொருட்கள் விற்பனை செய்பவராக இருந்தால் நான்காவது பட்டனை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரு பட்டன் மட்டுமே தேர்வு செய்யமுடியும். ஆனால், எப்போது வேண்டும் என்றாலும் edit option மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

Also read: முகநூலில் தொழில் பக்கம் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் 8

முகநூல் தொழில் பக்கத்தில் செட்டிங்ஸ் என்பதை பார்ப்போம். பக்கத்தின் மேல்புறம் வலது பக்கம் செட்டிங்ஸ் இருக்கும். அவற்றை தேர்வு செய்துகொள்ளுங்கள். அங்கு general, Page info, Messaging என்று இடதுபுறம் நிறைய டேப் -கள் இருக்கும். ஒவ்வொன்றும் முக்கியமானதாகும். செட்டிங்ஸ் சென்றால் அங்கு general என்பது தேர்வு ஆகி இருக்கும். மேலும் வலதுபுறம் நிறைய இருப்பதை பட்டன்கள் இருப்பதை பார்க்கலாம். அதில் முதலாவதாக பேஜ் விசிபிலிட்டி என்று இருக்கும். அதில் Page Published என்று இருக்கிறதா பாருங்கள். அதில் Unpublished என்று இருந்தால் அவற்றை மாற்ற வேண்டும். இல்லையென்றால் தொழில் பக்கம் மக்களுக்கு தெரியாமல் போகும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் தொழில் பக்கத்தை மறைத்துக்கொள்ள முடியும். தேவைப்படும்போது pubilsh செய்துக் கொள்ள முடியும்.

இதே போல், எந்த வயதுக்காரர்கள் உங்கள் பாகத்தை பார்க்கலாம், எந்த நாட்டில் இருப்பவர்கள் பார்க்க கூடாது, யாரெல்லாம் உங்கள் பக்கத்தில் பதிவு எழுதலாம், உங்கள் பதிவு வேறு மொழியில் மொழியாக்கம் செய்யும் முறை இதே போல் நிறைய ஆப்ஷன்கள் அங்கு இருக்கும். அதில், உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். இவை தொழில் பக்கம் என்பதால் முடிந்த அளவு தொழில் தொடர்பாக இருக்கும். அனைத்தையும் தேர்வு செய்தால் மக்கள் நம் பக்கத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

உருவாக்கிய தொழில் பக்கத்தை வேண்டாம் என்று தீர்மானித்தால் அவற்றை நீக்க இதே general-லின் கீழே ரிமூவ் பேஜ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் பேஜ் டெலிட் என்பதைக் கிளிக் செய்தால் நீக்கிவிடலாம். இரண்டும் மேற்பட்ட பக்கங்களை உருவாக்கி கொள்ளலாம். ஆனால், தினமும் இவற்றில் பதிவு எழுத வேண்டும். அப்போது தான் நம் பொருள், வாடிக்கையாளர்களை நோக்கி சென்று கொண்டே இருக்கும்.

உங்கள் தொழிலுக்கென்று ஒரு யூடியூப் -ல் சேனல் உருவாக்கி, அதில் தொழில் தொடர்பான வீடியோக்களைப் பதிவு ஏற்ற வேண்டும். அப்படி பதிவு ஏற்றப்படும் வீடியோக்களை உங்கள் முகநூல் பக்கத்தில் வர வைக்கலாம். இதன் மூலம், உங்கள் வீடியோக்கள் பெரும்பாலான மக்களை சென்று சேரும் அதன் வழியாக உங்கள் பொருட்களும் விற்பனையாகும்.

Also read: சோஷியல் மீடியா | டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 7

முகநூல் search -ல் யூடியூப் tab என்றுத் தேடுங்கள். பின், அதில் வரும் யூடியூப் tab ஐ தேர்வு செய்தால் உங்கள் தொழில் பக்கத்தில் அது டவுன்லோட் ஆகும். பிறகு, உங்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தால் எந்த பக்கத்தில் யூடியூப் இணைக்க வேண்டும் என்று கேட்கும். அதில், விருப்பமான பக்கத்தை தேர்வு செய்து யூடியூபை சேர்த்துவிட்ட பிறகு, சேனல் id கேட்கும். கொடுக்க வேண்டும். பின், சேனல் சென்று, கீழ் இருக்கும் யூடியூப் முகவரியை (UCL என்பதில் தொடங்கி ig என்று முடியும் வரை, அதாவது youtube.com/channel/ UCLFFatWFdqd2r4erS8DRKig) காபி செய்து அங்கு பேஸ்ட் செய்யவும். இப்போது உங்களை முகநூல் பக்கத்தில் யூடியூப் -ல் இருக்கும் அனைத்து வீடியோக்களும் பார்க்கலாம்.

முகநூலில் தொழில் பக்கத்தை சிறந்த முறையில் பயன்படுத்த தெரிந்து கொண்டால் மக்கள் முன் உங்கள் தொழிலை வேகமாக கொண்டு சென்று சேர்க்கலாம். அடுத்து, முகநூலில் பணம் செலவு செய்து எப்படி ஒரு விளம்பரம் செய்வது என்று பார்க்கலாம். மேலும், ட்விட்டரில் எப்படி தொழில் கணக்கு தொடங்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

– செழியன். ஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here