அப்டேட் தரும் பயன்கள்

ஆண்ட்ராய்டில் வாட்சாப்பில் குவியும் தகவல்களை அழிப்பதற்கு டெலிட் ஃபார் எவரி ஒன் என்பதை அழுத்து வதற்கு முன்பு வாட்சாப் அப் டேட்டாக இருக்கிறதா என அறிந்து டெலிட் செய்யுங்கள்.

நாம் அனுப்பும் தகவல்கள் பெறும் பயனர்கள் வாட்சாப் அப்ளிகேஷனை ஐஃபோனில் பயன்படுத்தினால் அவர்கள் படங்கள், வீடியோக்கள் ஆகிய வற்றை ஐஃபோனில் சேமித்து வைத்திருக்க கூடும். நாம் டெலிட் ஃபார் எவரி ஒன் என்று அழுத்தினாலும் அவர்களது ஐஃபோனில் சேமிப்பில் இருக்கும்.

Also read: வெப் சைட் – சில அடிப்படைகள்

தேவையான படங்கள், வீடியோக் களை வாட்சாப்பில் டெலிட் செய்வதற்கு முன்பு அவற்றை கேலரியில் சேமித்து வைக்கவும். அது அலைபேசி கொள்ளளவுப் பொறுத்தது ஆகும்.

நீங்கள் தகவல்களை அழித்த பின்பு அவை வெற்றிகரமாக முடிக்கப் பட்டதா என்பதை தகவலாக வருவதை உறுதி செய்து கொள்ளவும். அவ்வாறு தகவல் வரவில்லை என்றால் பின்னர் முயற்சி செய்யவும்.

– கே. அசோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here