இன்றைக்கு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து செயல் பாடுகளுக்கும் வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்று என்று ஆகி விட்டது. இதற்குக் காரணம், வெப் சைட் எனப்படும் இணைய தளம் மூலமாக இருபத்து நான்கு மணி நேரமும் நம் நிறுவனத்தைப்பற்றி உலகில் எங்கு இருந்தும் அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, வணிக வாய்ப்பையும் அதிகரிக்கின்றன என்பதுதான்.
ஆனாலும் சில வணிகர்களுக்கு இந்த நுட்பம் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதால், இணைய தளம் தொடர் பான தயக்கம் இருக்கிறது. வெப் சைட்டுகளை வடிவமைத்துத் தரும் பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல நாணயமாக செயல்பட்டாலும், சில நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் அறியாமையைப் பயன்படுத்தி நியாயத்துக்குப் புறம்பாக அதிக கட்டணம் பெறுவது, தொடர் சேவை அளிக்காமல் அலைக்கழிப்பது போன் றவற்றை செய்து வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
வெப் சைட் உருவாக்கல், இப்போது எளிதானதாக மாறி விட்டது. ஒரு இணைய தளம் உருவாக்கும் போது முதலில் பிக்ராக் போன்ற டொமைன் பதிவாளர்களை அணுகி டொமைன் பெயர் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்து இருக்கும் வகையில் அமைய வேண்டும். நாம் தேர்ந்து எடுக்கும் பெயரை இணைய வடிவமைப்பாளர்களே பதிவு செய்து தந்து விடுவார்கள்.
இணைய தள வடிவமைப்புக்கான தொழில் நுட்பங்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தியே இணைய தள வடிவமைப்பாளர்கள் நமக்கான இணைய தளத்தை உருவாக்கித் தருகிறார்கள்.
இணைய தள வடிவமைப்ப £ளர்களிடம், முதலில் இணைய தள உருவாக்கத்துக்கான கட்டண விவரங்களைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் நம் நிறுவனத்தைப் பற்றி வாடிக்கை யாளர்களுக்குத் தெரிய வேண்டிய முதன்மை யான செய்திகள், பொருத்தமான படங்கள் போன்றவற்றை இணை தளய வடிவமை ப்பாளர்களுக்குத் தர வேண்டும். நாம் செய்திகளைக் கொடுத்தால், கட்டணம் பெற்று அவற்றை சிறப்பாக எழுதித் தரும் கன்டென்ட் ரைட்டர்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
என்னென்ன தலைப்புகளில் தகவல்கள் இடம் பெறலாம் என்ற ஆலோ சனைகளையும் இணைய தள வடிவமைப்பாளர்களிடம் இருந்து பெறலாம். தங்கள் தொழில் சார்ந்த மற்ற இணைய தளங்களைப் பார்த்தாதும் தெளிவு பெறலாம்.
நம் இணைய தளத்தின் வாயிலாகவே பொருட்களை வாங்கும் வசதியும் இருக்க வேண்டும். இதற்கான பேமன்ட் கேட்வே- யையும் இணைய வடிவமைப்பாளர்களே இணைத்துத் தந்து விடுவார்கள்.
வெப் சைட்டின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை இணைய வடிவமைப் பாளர்களிடம் தவறாமல் பெற்று ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பின்னர் வேறு யார் மூலமாகவாவது இணைய தளத்தில் மாறுதல் செய்ய வேண்டி இருந்தால் இந்த யூசர் நேம், பாஸ்வேர்ட் கண்டிப்பாக தேவைப்படும்.
-எவ்வி