Saturday, January 23, 2021

வணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்

தொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை வலைப் பின்னல் (1G ) 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பின்பு தொழில் நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தில் 2G, 3G மற்றும் தற்காலத்தில் நம் பயன்படுத்தும் 4G தொழில் நுட்பமும் மிக விரைவான இணையதள சேவையை வழங்கினாலும் அடுத்த தலைமுறை நெட் ஒர்க்குக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அவ்வாறான அடுத்த தலைமுறை நெட்ஒர்க் ஆக 5ஜி அமைந்து உள்ளது.

5G நெட்ஒர்க்
5G நெட்ஒர்க் நான்காம் தலைமுறை நெட்ஒர்க்கின் விரிவாக்கமாக செயல்படுகிறது., இது பல்வகைப்பட்ட (heterogeneous) நெட்ஒர்க்குகளின் தொகுப்பாக செயல்பட்டு மிகப் பெரிய வலைப் பின்னலாக தோற்றுவிக்கப்படுகிறது.

5G தொழில் நுட்பம் மூலம்,
> மிக விரைவாக 1Gbps தரவுகளையும், மென்பொருள்களையும், படங்களையும், வீடியோ காட்சிகளையும் தரவிறக்கலாம்.
> மிக அதிக தொலைவு வரை நெட்ஒர்க் சிக்னல்கள் கிடைக்கின்றன.
> தகவல் பதிவிறக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம் மிகக் குறைந்த நேரத்தில் (low latency) நடைபெறுகிறது
> அலைக்கற்றை (bandwidth)  மற்றும் தகவல்கள் தொகுப்புமிக (payload) எளிதாக பயன்படுத்தப்பட்டு அதிக பயனர்களுக்கு சென்றடைகிறது .
> 5G அலைக்கற்றையின் வேகம் நான்காம் அலைக்கற்றையின் வேகத்தை விட ஆயிரம் மடங்காக செயல்படுகிறது .
> 5G தொழில் நுட்பத்தின் நேர தாமதம் 1 மில்லி வினாடிக்கு குறைவாகவே (low latency) உள்ளது .இதுதான் நெட்ஒர்க் ஸ்லைஸ் (network slice)தொகுப்பாக பயன்படுகிறது
> பயன்படுத்தும் திறன் 99.99 சதவிகிதம் 5G தொழில்நுட்பத்தில் கிடைக்கப்பெறுகின்றது . > மின்திறன் அளவு  90 % ஆக குறைக்கப்பட்டு திறன் சேமிக்கப்படுகிறது.
> நெட்ஒர்க் நெரிசல் உருவாகாமல் (congestion control) கட்டுப்படுத்தப்படுகின்றது.
> வலைப்பின்னல்களின் தொலைவுகளை (Location Awareness) கண்டுபிடிக்க 5G தொழில் நுட்பம் மிக அதிகமாக உதவுகின்றது.
5ஜி, ரேடியோ நெட்ஒர்க்  (Radio Access Network) மூலம் அமைக்கப்பட்ட வலைப்பின்னல் ஆகும். இதிலும் பல அடிப்படை நிலையங்கள்(base station), நெட்ஒர்க் கோபுரங்கள் (Network Towers), gnodeB  ரஎன்று சொல்லப்படுகின்ற அடுத்த தலைமுறை அடிப்படை நிலையமாக Next Generation nodeB  செயல்படுகிறது. இதுதான் 5 Gதொழில் நுட்பத்தின் அடிப்படை நிலையமாகும்.
மேலும் 5நி தொழில் நுட்பத்தில் நெட்ஒர்க் மெய்நிகர் செயல்பாடு (Network Function Virtual) தொகுப்பு பல்வேறு வகையான நெட்ஒர்க் தொகுப்புகளை மெய்நிகர் வலைப்பின்னலாக (Virtual Network) தோற்றுவித்து ரேடியோ தொழில் நுட்ப வலைப்பின்னலாக பயனர்களுக்கு உதவுகிறது. இதுதான் IOT என்று சொல்லப்படுகின்ற தொழில் நுட்பத்தில் தானியங்கி வாகனங்களுக்கும் (Automatic Car), வேளாண் துறையில் பயன்படும் கருவிகளுக்கும், மருத்துவத்துறை, மற்றும் கணினி துறைக்கும் பயன்படுகின்றன. ஆகவே 5G யில் NFV மிக முக்கிய தொகுப்பு ஆகும்.

5G அமைப்பு
மேற்கண்ட 5G தொழில் நுட்பத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் நெட்ஒர்க் பிரிவில் பயனர் கருவிகள் (user devices) இணைக்கப்பட்டு உள்ள பிரிவில் அனைத்து வகை கணினிகளும், மொபைல் ஃபோன்களும், மற்ற நெட்ஒர்க் சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு, அவை enodeB மற்றும் ரேடியோ நெட்ஒர்க், க்ளவுட் கணினி மற்றும் எட்ஜ் கணினி (edge computing) க்ளவுட் மூலம் இணைக்கப்பட்டு மைய நெட்ஒர்க் (core network)  உடன் இணைக்கப்பட்டு 5G அமைப்பு உருவாக்கப்படுகிறது .
5G மொபைல் எட்ஜ் கணினி (Mobile Edge Computing )
இந்த தொகுப்பின் மூலம் ஆன்லைன் நெட்ஒர்க் நெரிசல் குறைக்கப்பட்டு நெட்ஒர்க் செயல்பாடுகள் விரைவில் பயனருக்கு சென்று அடைகிறது.
இனி வரும் காலங்களில் 5G தொழில் நுட்பம் ஆற்றல் மிகுந்த (dynamic environment) சூழல் நுட்பமாக செயல்பட்டு பல்வேறு வகை வலைப் பின்னல்களை ஒருங்கே இணைக்கப் பயன்படும்.
நெட்ஒர்க் சிக்கல்களை (Network Complexity ) தீர்க்கப் பயன்படுகிறது,
பல தானியங்கு (automated ) தீர்வுகளுக்கும் இது மிக பெரிய அளவில் பயன்படும்.

– சி. இராம்பிரகாஷ், கணிப்பொறியியல்  துறை, அண்ணா  பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரி, திருக்குவளை.

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

Don't Miss

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.