Friday, October 30, 2020

ஓவியங்களில், டிசைன்களில் பயன்படுத்தப்படும் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வோம்

ஓவியத்துக்கு அடிப்படைக் கலைக் கூறுகளாக கோடு, வடிவம், இடப்பரப்பு, வண்ணம், தகை நேர்த்தி, இழைநயம் போன்றவைகள் எவ்வாறு இன்றி அமையாதவை ஆக இருக்கின்றனவோ, அவற்றைப் போலவே, ஓவியத்தின் பண்புக் கூறுகளாக சமநிலை (பேலன்ஸ்),...

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

ஸ்டார் அப் செயல் திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தொடங்குவதற்கான விதிகள்

இந்தியாவில் ஸ்டார்அப் செயல் திட்டத்தின் படி, ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான தகுதி பெறுவதற்கு பின்வரும் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் எனில் தொடங்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும். மற்றவை எனில் தொடங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 7 வருடங்களுக்குள் இருக்கவேண்டும்.

முந்தைய நிதி ஆண்டுகளில் வருடாந்திர வருவாய் ரூ.25 கோடிக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஸ்டார்அப் எனும் செயல்திட்டத்தின் படி, தொடங்கும் நிறுவனமானது தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் சொத்துக்களால் இயக்கப்படும் புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக இருக்க வேண்டும்.

இந்நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஒரு வணிக நிறுவனத்தை பிரிப்பதன் மூலமோ அல்லது புணரமைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.

இது போன்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இடைநிலை அமைச்சக வாரியத்திடம் இருந்து சான்றிதழைப் பெற வேண்டும்.

Also read: வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டேன்!

ஸ்டார்அப் எனும் செயல்திட்டத்தின் படி, தொடங்கும் நிறுவனமானது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த ஸ்டார்அப் எனும் செயல்திட்டத்தின் படி தொடங்கும் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் வரி விலக்குகள் பின்வருமாறு,

ஏப்ரல் 1, 2016 க்குப் பிறகு ஸ்டார்அப் நிறுவனமாக பதிவு செய்யப் பட்ட அல்லது தொடங்கப்பட்ட ஸ்டார்அப் நிறுவனம் எந்தவொரு நிதியாண்டிலும் வருடாந்திர வருவாய் ரூ.25 கோடியைத் தாண்டாமல் இருந்தால், தொகுப்பான ஏழு வருடங்களில் மூன்று வருட காலத்திற்கு 100% வரிச்சலுகை பெற தகுதி உடையதாகும்.

ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் 54 EE கீழ் நீண்ட கால மூலதன லாபத்திற்கான வரிவிலக்கு அனுமதிக்கப்படுகின்றது. அதாவது, சொத்து பரிமாற்ற நாளில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் நீண்ட கால முதலீடாக 3 வருட காலத்திற்கு குறிப்பிட்ட நிதியில் அதிகபட்ச தொகை ரூ .50 லட்சம் வரை முதலீடு செய்யப்படவேண்டும். இவ்வாறான முதலீட்டு தொகையை 3 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டால், தொகை திரும்பப் பெறப்பட்ட ஆண்டில் இருந்து வரிவிலக்கு ரத்து செய்யப்படும்.

தகுதிவாய்ந்த ஸ்டார்அப் நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்கின்றது. இத்தகைய முதலீடுகளில் இந்திய குடியுரிமை ஏஞ்சல் முதலீட்டாளர்கள், குடும்பம் அல்லது துணிகர மூலதன நிதிகளாக பதிவு செய்யப்படாத, செய்த முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், சந்தை மதிப்புக்கு மேல் இன்குபேட்டர்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

Also read: வீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு!

மீச்சிறு, சிறு, நடுத்தர நிறுவனச் சட்டம், 2006 இன் கீழ் வரையறுக்கப்பட்டு உள்ளபடி, சிறு அல்லது நடுத்தர நிறுவனங்களில் நீண்ட கால மூலதன லாபங்கள் முதலீடு செய்யப்பட்டால், அதாவது 54GB இன்கீழ் குடியிருப்பு சொத்து ஒன்றின் விற்பனை மீதான நீண்டகால மூலதன லாபங்களுக்கான தொகையை தகுதியான start-ups நிறுவனங்களின் 50% அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகள் வரை முதலீடு செய்தால் வரிவிலக்கு அனுமதிக்கப் படுகின்றது. அத்தகைய பங்குகள் 5ஆண்டிற்குள் விற்கப்படவோ அல்லது மாற்றவோ கூடாது.

ஆண்டின் கடைசி நாளில் வாக்களிக்கும் சக்தியைக் கொண்ட பங்குதாரரின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகளையும், மூலதன லாபங்களையும் முன்னோக்கி கொண்டு சென்று சரிசெய்து (Set Off Carry forworded) கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.

– முனைவர். ச. குப்பன்

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

Don't Miss

மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி?

இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய்...

கோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்!

கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்!...

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...

உலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது?

உணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...

மனிதன் படைப்பிலேயே சிறந்தது எது?

மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.