பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் சாக்லேட்டுகளுக்கு இடையே வீட்டில் இருந்தபடியே சுவையான சாக்லேட்டு களை செய்து விற்பனை செய்து வளர்ந்து வரும் தொழில் முனைவோரையும் ஆங்காங்கே காண முடிகிறது. குறிப்பாக பெண் தொழில் முனைவோர் முன்னெடுப்பிலேயே இத்தகைய சாக் லேட் தயாரிப்பு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் புதுச்சேரியில் உள்ள திருமதி. பிரியா, தன் வாழ்விணையர் திரு. வ. பு. தமிழ்ச் செல்வன் துணையுடன், தங்கள் வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து “பிரியம் சாக்லேட்கள்” என்ற பெயரில் சந்தைப் படுத்தி வருகின்றனர். அவர்களிடம் பேட்டி கண்ட போது-
“சாக்லேட் என்பது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. இதனா லேயே பேரங்காடிகள் முதல் சிறு கடைகள் வரை சாக்லேட்கள் இருப் பதைப் பார்க்க முடியும். இங்கே இருப்பவை எல்லாம் பெரிய நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் இனிப்பு வகைகள்.
அதே நேரத்தில் வீட்டில் தனித்த சுவைகளுடன் தயாரிக்கப்படும் சாக்லேட் டுகளுக்கும் சந்தை வளர்ந்து வருகிறது. குறிப்பாக இதை தொழில் கண் காட்சிகளில் காண முடியும். இத்தகைய சாக்லேட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு மக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்வதைக் காண முடியும்.
எங்களுக்கும் சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் மீது ஆர்வம் பிறந்தது. எனவே முயன்று வீட்டிலேயே செய்யத் தக்க சாக்லேட்டுகளைச் செய்ய கற்றுக் கொண்டோம். பலமுறை செய்து பார்த்த பிறகு நேர்த்தியான சாக்லேட்டுகளை செய்யும் வழிமுறைகளை அறிய முடிந்தது.
பின்னர், நாங்கள் செய்த சாக்லேட்டுகளின் மாதிரிகளை அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள், தெரிந்த வர்கள் வீடுகளுக்கு கொடுத்தோம். அவற்றை சுவைத்துப் பார்த்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டு களைக் குவித்தனர். மேலும் சாக்லேட்டு களை வாங்க விரும்பினர்.
அவர்களின் தேவைகளை நிறைவேற்ற கூடுதலாக தயாரிக்கத் தொடங்கினோம். பல சுவைகளில், பல வடிவங்களில் செய்யப்பட்ட எங்களின் சாக்லேட்டுகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. தனிப் பட்ட முறையில் விற்பனை செய்தது போக கடைகளுக்கும் விற்ப னைக்குக் கொடுக்கத் தொடங்கினோம். ஒரு முறை வாங்கிய குழந்தைகள் தொட ர்ந்து வாங்கத் தொடங்கி னார்கள். இதனால் எங்களுக்குத் தொடர் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.
பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட எங்கள் தொழில் இன்று இலட்சங்களைத் தொட்டு விரைவாக வளர்ந்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு மட்டுமின்றி தமிழ் நாட்டில் உள்ள பல மாவட்டங் களுக்கும் பிரியம் சாக்லேட்களை அனுப்பி வருகிறோம். ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். புதிய முகவர்களையும் நியமித்து வருகிறோம்.
கோன், பட்டர் ஸ்காட்ச், லாலி பாப், ஃபியூஷன் கிரென்ச் என்று பல வகைகளில் சாக்லேட்களை தயாரிக் கிறோம். எங்களுடன் சேர்ந்து கூடுதலாக ஐந்து பெண்களும் பணியாற்றி வரு கின்றனர்.
சாக்லேட் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பி வரும் தொழில் முனைவோருக்கு பயிற்சியும் அளிக்கி றோம்.” என்றனர், இருவரும்.
திரு. தமிழ்ச் செல்வனின் பெற்றோர் திருமதி பானுமதி, திரு. செ. வ. புகழேந்தி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களும் பிரியம் சாக்லேட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர் (9543772554).
பெற்றோர் திருமதி பானுமதி, திரு. செ. வ. புகழேந்தி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களும் பிரியம் சாக்லேட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர் (9543772554).
– செ. வ. இராமாநுசன்