கூச்ச சுபாவத்துக்கு பயம் ஒரு காரணம்.
தவறாக ஏதுவும் பேசி விடுவோமோ என்ற பயம்.
அதற்காக கிண்டல் செய்வார்களோ என்ற பயம்.
தான் பேசுவதை காது கொடுத்து கேட்க மாட்டார் களோ என்ற பயம்.
கேட்காத போது அதை அவமானமாக நினைத்து விடக் கூடிய பயம்.
இப்படி பயம் முதன்மையான காரணமாக இருக்கும்போது, அதை போக்கிக் கொள்வது எப்படி என்று சிந்தித்தே ஆக வேண்டும்.
பரமசிவம் ஒரு பிசினஸ்மேன். அவர் பிற வியாபாரிகளைப் போல கல கலப்பாகப் பேசவே மாட்டார். கலகலப்பாக என்ன, பேசவே மாட்டார். கிட்டத்தட்ட மவுன விரதம் இருக்கிறவர் மாதிரி நாற்காலியிலேயே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருப்பார். வருகிற வாடிக்கை யாளர்கள் அவரிடம் ஏதாவது கேட்க வந்தால் கூட, சற்றுத் தள்ளி அமர்ந்து இருக்கும், ஊழியரைக் கைகாட்டி விடுவார்.
ஏதோ பணத்தைப் போட்டு பிசினஸ் தொடங்கி விட்டாரே தவிர, எல்லா வியாபாரிகளையும் போல, பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய நேரத்தில் பேச மாட்டார். காரணம்,
பயம்!
நமது அறியாமையை வெளிப்படுத்தி விடுவோம் என்ற அநாவசியமான பயம். இத்தனைக்கும் ஓரளவுக்கு கல்வி அறிவு பெற்ற பிறகுதான் பிசினஸ் துறைக்கே வந்தார். ஆனாலும் என்ன? இயல்பிலேயே மிகவும் பயந்தவராக இருந்ததால் அவரால் தமது பயத்தைப் போக்கிக் கொள்ளும் முயற்சிகள் எதிலும் ஈடுபட முடியவில்லை.
வியாபாரம் தொடர்பான அரசாங்க அலுவலகங்களுக்கு போக வேண்டும் என்றால், கூடவே ஒரு ஊழியரையும் கையோடு அழைத்துக் கொண்டுதான் போவார்.
தன் அறியாமை காரணமாக எதையாவது சொல்லி விடுவோமோ என்ற பயம்.
ஆனால் வியாபார நுணுக்கங்கள், வழி முறைகள் எல்லாமே அவருக் குத் தெரியும். ஆனாலும், பயம்.
ஒரு தடவை அவருக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. மருத்துவர் அவரை மருத்துவ மனையில் உடனடியாகச் சேரச் சொல்லி விட்டார்.
பரமசிவம் பயந்து போய் விட்டார். தான், அலுவலகத்தில் இல்லாமல் என்னவெல்லாம் நடந்து விடுமோ என்ற கவலை அவரை அரிக்கத் தொடங்கியது.
ஆனால் வேறு வழி இல்லை. அவர் மருத்துவ மனையில் சேர்ந்த பிறகு, அலுவலகத்தைத் திறக்கவும், வேலைகள் சரிவர நடக்கிறதா என்று பார்க்கவும், மாலை ஏழு மணி வாக்கில் அலுவலகத்தைப் பூட்டவும் யாரை ஏற்பாடு செய்வது?
”நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்றார், பரமசிவத்தின் மனைவி.
”நீயா?” என்று வியப்புடன் கேட்டார், பரமசிவம்.
”ஏன்..? நான் போய் அலுவலகத்தில் உட்கார்ந்து, வேலைகள் சரியாக நடக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறேன். மருத்துவ மனையில் காலையிலும், இரவிலும் வந்து பார்க்கிறேன். நர்ஸ் எப்படியும் உங்களைக் கவனித்துக் கொள்ளப் போகிறார். வேண்டுமானால் உங்கள் அக்காவை வரவழைத்து உங்களுடன் மருத்துவ மனையில் இருக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
பரமசிவத்தால் நம்ப முடியவில்லை. முன்பின் அலுவலகத்துக்கே வந்திராத மனைவி எப்படி அலுவலகத்தைக் கவனித்துக் கொள்ள முடியும்? படித்தவள் தான். ஆனாலும் முற்றிலும் பழக்கம் இல்லாத வேலையை எப்படிச் செய்ய முடியும்?
”நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் எல்லா வற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சமாதானம் செய்தார். பரமசிவம் தயத்துடன் ஒப்புக் கொண்டார்.
இப்படிச் சொல்ல மனைவியிடம் இருந்தது, தைரியம்.
அதே போல, பதினைந்து நாட்களுக்கு அவர் மருத்துவ மனையில் இருந்த போது, அலுவலகத்தை நடத்திச் சென்றது, அவர் மனைவிதான்.
அவருக்கு பயம் இருக்கவில்லை. யார்யாரிடம் என்னென்ன வேலைகள் வாங்க வேண்டும் என்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொண்டார். அதன்படியே, மேனேஜர் முதல் கடைசி எடுபிடி ஆள் வரை அவரவர் வேலைகளைச் செய்கிறார்களா என்று கவனித்தார்.
வருகிறவர்களிடம் துணிச்சலாகப் பேசினார். தெரியாததை பிற ஊழியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் அளித்தார். அவர்களும் முதலாளியின் மனைவி என்ற இடத்தை உயர்வாக மதித்து அவர்களுக்கு உதவினார்கள்.
அரசாங்கம் தொடர்பான அலுவல்கள் ஒன்றிரண்டைச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்ட போதும் அச்சப்படவில்லை. கூடவே தொடர்புள்ள ஊழியரையும் அழைத்துக் கொண்டு போய்ப் பேசி விட்டு வந்தார்.
நாள்தோறும் வீட்டுக்குப் போவதற்கு முன்னால், மருத்துவ மனைக்குச் சென்று, அன்றைக்கு நடந்த பிசினஸ் பற்றி, நிதி நிர்வாகம் பற்றி, தான் அவர்களிடன் பேசி நடந்து கொண்ட விதம் பற்றி விவரமாக எடுத்துச் சொன்னார்.
நாள்தோறும் மனைவி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார், பரமசிவம். முறையான மருத்துவமும், தகுந்த மருந்துகளும் மெல்ல மெல்ல அவர் நோயைக் குணப்படுத்தி வந்தன. இரண்டு வாரங்களில், அவர் நோயில் இருந்து முழு குணம் பெற்று வீடு திரும்பினார்.
இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்த பின், மூன்றாம் நாள் அலுவலகம் சென்றார். பழைய பரமசிவமாக அல்ல, புதிய பரமசிவமாக. பயம் அனைத்தும் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தன.
இதில் வியப்பு அடைய எதுவும் இல்லை; தான் எதற்கு பயந்தோம் என்ற கேள்வி அவரிடம் எழுந்து இருந்தது.
தன் மனைவி, முற்றிலும் புதுமையான சூழலில் செயல்பட்டவர், எந்த வித அச்சமும் இல்லாமல் தன் அலுவலக வேலைகளை எளிதாக நடத்தி இருக்கிறபோது, தான் எதற்கு தேவை இல்லாமல் பயந்தோம் என்று தன்னைத்தானே கேட்டு, பயத்தில் இருந்து படிப்படியாக விடுபட முயன்று, அதில் வெற்றியும் பெற்றார்.
வாய் திறந்து அதிகம் பேசவே பேசாத பரமசிவம், நோய் நீங்கி அலுவலகம் வந்த நாள் முதல் அடியோடு மாறிப் போனார். அவருக்கு வந்திருந்த வைரஸ் காய்ச்சல் மட்டுமல்ல, அவர் உள்ளுக்குள்ளேயே குடிகொண்டிருந்த பயம் என்ற நோயும் அவரிடம் இருந்து போயிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தனியே செல்ல அவரிடம் இருந்த தயக்கம் நீங்கி விட்டது. வியாபாரம் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு தனியே சென்று தயக்கமில்லாமல் பேசி முடித்து விட்டு வந்தார்.
ஊழியர்களுக்கும் கூட நம்ப முடியாத அளவுக்கு வியப்புதான். ஆனால் கடந்த பதினைந்து நாட்களில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்தார்கள். அவருக்கு காய்ச்சல் வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர் மனைவிக்கு மனதுக்குள் நன்றி சொல்லிப் பாராட்டினார்கள்.
இதுதான் ”மாற்றம்” என்ற உண்மையான நிலை. காரணம் எதுவும் இல்லாமலேயே வீண் அச்சம் கொண்டிருந்த அவருக்கு, அதன் பிறகு தன் நிலை புரிந்து போயிற்று. பயம் கூச்சத்துக்கு அடிப்படைக் காரணமாக இருந்ததால், அவரிடம் பயம் அகன்றதும், கூச்சமும் போயிற்று. கூச்சம் அகன்றதும் அவர் தன்னம்பிக்கை அதிகரித்தது. தன்னம்பிக்கை கூடியதும், அவராகவே தம் அலுவல்களைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினார். உதவியாளர் எவரின் உதவியும் இல்லாமலேயே அவரால் அரசு தொடர்பான அதிகாரிகளைக் கூட சந்தித்துப் பேச முடிந்தது.
ஆனால், இப்படி மாற்றம் நிகழும் வரை, கூச்சத்தோடு காத்திருக்க வேண்டாமே!
கூச்ச சுபாவத்தைப் போக்க, வம்புச் சண்டைக்குப் போக வேண்டாம். நெரிசலான போக்குவரத்தின் இடையே ஆட்டோக்காரரை நிறுத்தி கூக்குரல் எழுப்ப வேண்டாம். எங்காவது வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது, யாராவது குறுக்கே புகுந்தால், அவரிடம் கோபப்பட்டு சண்டைக்குப் போகாமல் மென்மையாக அந்த சூழ்நிலையைக் கையாளலாம். முடிந்தவரை எல்லா இடங்களிலும் வாக்குவாதத்தை தவிர்க்கலாம்.
ஆனால் கூச்ச சுபாவம் உள்ளவராக இருக்கையில், இம்மாதிரி நேரங்களில் எதிராளி உங்கள் மீது ஆனாவசியமாக பழி சுமத்தவோ, வம்புக்கு இழுக்கவோ செய்யும்போது என்ன ஆகும்?
உங்களால் ஒரு சொல் கூட பேச முடியாது. எதிர்த்துச் சொல்ல முடியாது. எதிராளி பக்கம்தான் நியாயம் போலிருக்கிறது என்று பக்கத்தில் உள்ளவர்கள் நினைத்து விடக் கூடிய அளவுக்கு நிலைமை காட்சி அளிக்கும்.
உங்கள் நிலைமையோ தர்ம சங்கடமாக இருக்கும். ”நாம் எதுவும் தப்பு செய்து விட வில்லையே, எதற்கு நம்மீது இவர் பாய்கிறார்?” என்று கேட்கத் தோன்றும். ஆனால் கெட்ட வாய்ப்பாக கூச்ச சுபாவம் உள்ளவர் திரும்பக் கேட்க மாட்டார்.
நிலைமையைப் புரிந்து கொண்டு, தன் நிலையை எடுத்துச் சொல்ல கூச்ச இயல்பு தடுக்கும். சொற்கள் கோர்வையாக வராது. பரிதாபமாக சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, எல்லா வற்றையும் கேட்டுக் கொண்டு வர வேண்டியதுதானா?
வம்பு தும்புக்குப் போக வேண்டாம். ஆனால் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்காவது, கூச்ச இயல்பு இல்லாமல் இருக்க வேண்டியது, தேவை அல்லவா?
வீதியில் கூவி விற்கும் பழம், பூ வியாபாரிகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு கூச்ச சுபாவமே இல்லாமல் தங்கள் வணிகத்தைப் பார்ப்பதை சாதாரணமாக எல்லோராலும் பார்க்க முடியும். இதற்குக் காரணம் தாங்கள் விற்கும் பழங்களை அல்லது பூவை கூவித்தான் விற்க வேண்டும். அதற்கு குரல் நன்கு ஒத்துழைக்க வேண்டும். நான்கு பேருக்குக் கேட்கும்படியாக இருந்தால்தான், என்ன பொருளை விற்கிறோம் என்ற செய்தி வீட்டுக்குள் இருப்பவர்களுக்கும் கேட்கும்.
தங்கள் பொருளைப் பற்றி சத்தமாக ஒலி எழுப்பாவிட்டால், அதற்கு கூச்சப்பட்டுக் கொண்டிருந்தால் பிழைப்பு நடக்காது.
சிலர் ஒரு நிகழ்ச்சிக்குப் போகும்போது, முதல் வரிசையில் இருக்கைகள் இருந்தாலும் அவற்றில் போய் அமர மாட்டார்கள். பின்னால் இருக்கும் இருக்கைகளில்தான் அமர்வார்கள். முன் னால் அமர்ந்து விட்டால் எத்தனையோ பேர்கள் தன்னைக் கவனிக்கக் கூடும். அவர்களில் சிலர் தன்னிடம் பேசவும் முற்படலாம். அது ஆபத்தாயிற்றே! அவர்கள் என்ன பேசுவார்களோ, என்ன கேட்பார் களோ, என்ற அச்சம். அதற்கு, தான் பதில் சொல்லி ஆக வேண் டும். அதில் தனது குறைபாடு எதுவும் வெளிப்பட்டு விட்டால்..?
சிலர் தாமதமாக வந்து, தம்மைப் பலரும் கவனிக்க வேண்டும் என்றே முன்னால் வந்து அமர்ந்து கொள்வார் கள். பிறகு தம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களைப் பார்த்து சிரித்து, கைகுலுக்கி நலம் விசாரிப்பார்கள். தம்மைப் பிறர் கவனிக்கிறார்கள் என்றோ, இப்படிச் சற்றுத் தாமதமாக வந்து அமர்கிறோமே என்றோ அவர்களுக்குத் தோன்றவே தோன்றாது. அந்த நிலைமையை கூச்சம் இல்லாத ஒருவரா லேயே கொண்டு வர முடியும். அதற்கான துணிச்சல், அவர்களிடம் இயல்பாகவே அமைந்து இருக்கும்.
இதை அவைக் கூச்சம் உள்ளவர், அல்லது இயல்பாகவே கூச்சம் உள்ளவர் செய்ய முயல்வாரா? அப்படிச் செய்தால் ஏதோ சவுக்கடி கொடுத்து தண்டித்து விடுவார்கள் என்பது போல கற்பனை அச்சத்துடன் தயங்குவார். பக்கத்து நாற்காலியில் அமந்திருப்பவரை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டார்.
இந்த இரண்டு வகை மன இயல்பு உள்ளவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கவனித்தால், உடனே தெரிந்து போய்விடும், கூச்ச இயல்பு உள் ளவர் யார் என்று!
இந்த மாதிரி இடங்களில் கூச்சம் எதற்கு?
அதுவோ பொது இடம். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டு மானாலும் அமர்ந்து கொள்ளலாம். யார் பக்கத்தில் வேண்டுமானாலும் உட்காரலாம். அப்படி உட்கார்ந்தால் யாரும் சண்டைக்கு வரப்போவது இல்லை.
கூச்ச இயல்பு உள்ளவர், தம் குறைகளையே பெரிது படுத்திக் கொள்கிறார் என்று சொல்கிறார்கள். குறைகளை உணர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அந்த குறைகள் என்னென்ன, பயமா, கவலையா, எத்தகைய பயம் என்பதை அலசி, ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, அந்தக் குறைகள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்கி நிற்பதில் பயன் ஏதும் இல்லை.
தன்னால் மற்றவர்களைப் போல இயல்பாகவும், இயற்கையாகவும் பேசு முடியும் என்ற நம்பிக்கை மிகத் தேவை. இந்த நம்பிக்கை வாய்ப்புகளை எதிர் நோக்க உதவும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்போது வெற்றி தானாக வருகிறது.
வசதிகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது என்பதில் அக்கறை கொள்ள வேண்டும். திருப்பு முனையாக ஏதாவது நிகழ்ந்துதான் கூச்ச இயல்பு மறைய வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது.
பேச்சுத் திறமையோ, வாதத் திறமையோ அவசியம் இருந்துதான் ஆக வேண்டும் என்பது இல்லை. கலந்துரையாடலில் இயல்பாகச் சேர்ந்து கொண்டு, பேசக் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திப் பேச வேண்டும். தன்னாலும் தனிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்பி உரையாட வேண்டும்.
வது சொல்லி விடுவோமோ என்ற பயம்.

-சாருகேசி