Latest Posts

கணக்குப் பதிவில் இருக்கிறது வளர்ச்சி!

- Advertisement -

”கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால் மட்டுமே, நாடு உயரும். அதற்கு கிராமத்து மனிதர்களின் பொருளாதாரம் உயரவேண்டும். இதற்கு கிராமத்தில் உள்ளவர்கள் கணக்கு எழுதிப் பழக வேண்டும். கணக்குப் பதிவுப் பழக்கம் தனி மனிதர்களின் மற்றும் நிறுவனங் களின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பயன்படும். இதற்கு கிராமங்கள் தோறும் ஆடிட்டர்கள் உருவாக வேண்டும். ஆடிட்டர்கள், தனி மனிதர்களுக்கும், தொழில் துறையினருக்கும் கணக்குகளை சரியாகக் கையாள உதவ வேண்டும்.” என்கிறார், ஜான் மோரிஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர், ஆடிட்டர் திரு. ஜான் மோரிஸ். மேலும் அவர் கூறியதாவது,


கன்னியாகுமாரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு அங்கேயே இளங்கலை படிப்பு படிப்பை முடித்து, சென்னயில் சி.ஏ(சிகி) படிப்பதற்காக வந்தேன். படிப்பை முடித்து அதன் தொடர்பான தொழிலை செய்து வரும்பொழுது சில ஆராய்ச்சி செய்ததில் நம் நாடு உயரவேண்டும் என்றால் கிராமங்கள் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்று தெரிந்தது. அதற்கு கிராமத்திற்கு ஒரு பட்டய கணக்காளர் நிச்சயம் உருவாக்க வேண்டும்.


கணக்கு எழுதும் முறை என்ன மாற்றத்தை எற்படுத்தும் என்பதற்கு ஒரு சான்றைச் சொல்கிறேன். சி.ஏ படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு செய்வதற்க்காக மார்த்தாண்டம் சென்று இருந்த பொழுது, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம், வீட்டின் சூழ்நிலையால் படிப்பை முடித்து, அடுத்த வருடம் ரப்பர் பால் அறுக்க சென்றுவிடுவேன். ஆனால் எனக்கு சி.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசை என்று கூறினார். நான் கூறினேன், உங்கள் வீட்டு வரவு-செலவு கணக்கை சிறு நோட்டில் எழுதி வையுங்கள். சான்றாக அப்பா செலவுக்கு பணம் எடுத்தால் இவ்வளவு எடுத்தார் என்று மட்டும் எழுதுங்கள். மற்றும் அதே போல் ஒவ்வொரு செலவையும் எழுதி வரும்படி சொன்னேன். ஒரு நோட்டில் வலது, இடது பக்கத்தில் எப்படி வரவு செலவு எழுத வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தேன்.


மூன்று மாதம் பிறகு மீண்டும் அந்த பள்ளிக்கு சென்று பேசிய பொழுது அந்த மாணவி எழுதி வைத்திருந்த வரவு-செலவு நோட்டை கொண்டு வந்து கொடுத்தார். கூடவே அந்த மாணவியின் அம்மா, அப்பாவும் வந்திருந்தார்கள். வரவு செலவைப் பார்த்த பொழுது மாணவியின் அப்பா மட்டும் வீட்டின் மொத்த பண வரவான பதினைந்தாயிரம் ரூபாயில், ஏழாயிரம் வரை செலவு செய்வது தெரிய வந்தது. ஆக வீட்டின் இருக்கும் ஒருவர், வரவில் பாதி பணத்தை செலவு செய்தால் அந்த வீடு பொருளாதாரத்தில் ஏற்றம் காண முடியாது. மாணவியின் பெற்றோருக்கு விளக்கி சொல்லி புரிய வைத்தபொழுது மாணவியின் அப்பா ஏற்றுக் கொண்டார். அடுத்து என்னுடைய ஆலோசனைக்கு ஏற்ப அப்பா தனது தேவையற்ற செலவுகளைக் குறைத்தார். மீதியை சேமித்தார்கள். இப்பொழுது அந்த மாணவி மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் வரவு செலவு கணக்கு எழுதி வைத்துப் பார்ப்பதால் ஏற்படும் பயன் ஆகும்.


கணக்கு எழுதாமல் விடுவதால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எந்த செலவை குறைக்கவேண்டும் போன்றவை தெரியாததால் வீட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு மனிதரும் கணக்குப் பதிவு நோட்டில் வரவு செலவு கணக்குகளை எழுதி வைக்க வேண்டும். அதன் மூலம் தேவையில்லாத செலவுகளை குறைத்து பொருளாதார வளர்ச்சி அடையமுடியும். கணக்குப் பதிவு நுட்பங்கள் தொழில் முனைவோருக்கு பெரிய அளவில் கைகொடுக்கும்.


தொழில் முனைவோர் தங்கள் குழந்தைகளை சிஏ படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். நம் நாட்டில் இருக்கும் உயர் படிப்புகளில், சி.ஏ படிப்பும் ஒன்று ஆகும். இந்த படிப்பின் மூலமாக தங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இன்றைக்கு பல பெரிய தொழிலதிபர்கள் சிஏ படித்தவர்களாக இருப்பதைக் காணலாம்.


சிஏ படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகளும் அதிகம்; சொந்தமாக ஆடிட்டராகவும் தொழில் புரியலாம்.
இன்று எங்கு நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கிறதோ, அங்கு நிறைய செயல்கள் நடைபெறுகின்றன. பணச் சுழற்சியும் அங்கு நிறைய இருக்கிறது. அங்குதான் ஆடிட்டர்களும் இருக்கிறார்கள். ஆக பணம் இருக்கும் இடத்தில் ஆடிட்டர் இருக்கிறார். சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்கள் தவிர்த்து மற்ற நகரங்களில் ஆடிட்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே சிஏ படிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நான் சிறு நகரங்கள், கிராமங்கள் சென்று சிஏ படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பரப்புரை செய்து வருகிறேன்.


என் சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம், மார்த் தாண்டத்தில் இதற்கென ஒரு பயிற்சி நிறுவனத்தை தொடங்கி உள்ளோம். அங்கு இருநூறு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தது வருகிறோம். ஆடிட்டர்களின் தொழில் வாய்ப்பு என்பது நம் நாட்டுடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை. உலகம் முழுவதும் வாய்ப்புகள் உண்டு. அதனால் ஆடிட்டர் கள் உலகம் முழுவதும் தொழில் செய்யமுடியும்.


அமெரிக்காவிற்கு அடுத்து அதிக ஆடிட்டர்கள் உடைய நாடு இந்தியாதான். இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஆடிட்டர்கள் உள்ளனர். ஆடிட்டர் தொழில் தொடர்ந்து முன்னேற்றம் அடையக் கூடிய தொழிலாகும்.


‘சி.ஏ படிப்பது மிகவும் கடினமானதாகும். படிப்பவர்கள் அனைவராலும் தேர்ச்சி அடைய முடி வது இல்லை என்ற பொதுவான ஒரு நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு தவறான நம்பிக்கை. எல்லா படிப்பையும் போலவே உழைப்பைக் கொடுத்தால் இதிலும் கண்டிப்பாக தேர்ச்சி அடைய முடியும். இன்றய மாணவ, மாணவிகள் அதிக நேரத்தை முகநூலிலும், வாட்சாப் போன்றவற்றிலும் வீண்டிக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் கவனத்தை வேறு எங்கும் திருப்பாமல் முழுவதும் படிப்பில் செலுத்தினால் சிஏவிலும் சாதிக்கலாம். எங்கள் அலுவலகத்தில் தினமும் காலை ஏழு மணிக்கு படிக்கும் மாணவர்களை வரவைத்து பயிற்சி கொடுக்கிறோம்.


படிப்புகளிலேயே மிக குறைந்த கட்டணம் உள்ள படிப்புகளில் சி.ஏ படிப்பும் ஒன்றும் ஆகும். மொத்தம் ஐம்பதாயிரம் செலவு செய்தால் போதும். படிக்கும் பொழுதே வேலையும் செய்ய முடியும். அதன் மூலமும் வருமானம் வரும். சிஏ முடித்தவர்கள் எந்த ஊருக்கு, எந்த மாநிலத்திற்கு சென்றாலும் பணம் சம்பாதிக்க முடியும்.


சி.ஏ படிப்பவர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் பல கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளோம். சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல் பல கல்லூரிகளில் சிஏ தொடர்பான பயிற்சி கொடுக்கிறோம்.


இரண்டு விதமாக சிஏ படிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நேரடியாக சிஏ படிக்கலாம் அல்லது ஒரு டிகிரி படித்துக் கொண்டே படிக்கலாம். சென்னை போன்ற நகரத்தில் இருக்கும் மாணவர்கள் நேரடியாக பன்னிரெண் டாம் வகுப்பு முடித்து சிஏ படிக்க வருகிறார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்கள் இப்படி நேரடியாக சிஏ சேர்வதற்கு பதில் ஒரு இளங்கலை பட்டப் படிப்பை படித்துக் கொண்டே சிஏ படிப்பது நல்லது.


இப்பொழுது அரசாங்கமும் இருபத் தைந்தாயிரம் மாணவர்களுக்கு சிஏ பயிற்சி கொடுத்து வருகிறது. இது ஒரு பாராட்டத் தகுந்த முயற்சி ஆகும்.” என்றார், திரு. ஜான்மோரிஸ்.

-செழியன். ஜா

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news