இனிவரும் வணிக வாய்ப்புகள் பெரும்பாலும் நெட்வொர்க்கின் (வணிக உறவு வலைப்பின்னல்) அடிப்படையில் அமையும். அதாவது, தனக்கென பெரிய அளவிலான நெட்வொர்க்கை, அதாவது வணிக உறவுகள் பட்டியலை வைத்திருப்பவர்கள் நிலையானதொரு வருமானத்தை பெறுவார்கள். இதற்கு, பொருளாதாரத்தில் மாபெரும் வெற்றி அடைந்த பில் கேட்ஸ், டொனால்ட் ட்ரம்ப், வாரன் பஃபே, ரிச்சர்டு பிரான்சன் போன்ற பலர் சான்றாகத் திகழ்கிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நூலாசிரியரும், தொழில் முனைவருமான “திரு. ராபர்ட் கியோசாகி, இந்த 21-ஆம் நூற்றாண்டில் பண உற்பத்தியை அதிகரிக்கின்ற காரணிகளை நான்கு கால் சதுரப் பகுதிகளாக வரையறுக்கிறார். அவை,
1) ஊழியர் (Employee)
2) சுய தொழில் செய்வோர் (Self-employed) & சிறுவணிக உரிமையாளர்கள் (Small business owner)
3) பெரிய தொழில் உரிமையாளர்கள் (Business Owner)
4) முதலீட்டாளர்கள் (Investor)
இதில், 80% மக்கள் முதல் இரண்டு பிரிவுகளில் வருகிறார்கள்; 20% மக்கள்தான் இரண்டவதாக உள்ள தொழிலதிபர் & முதலீட்டாளர் பிரிவில் இருக்கிறார்கள். இவர்கள்தான் பெரும்பாலும், பொருளாதாரத்தில் மிகுந்த வலு பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.
இவ்வுலகில் உள்ள பெரும் பணக் காரர்கள் நெட்வொர்க்குகளை உருவாக்குகின்றனர். அது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது.
3காம் என்ற நிறுவனத்தின் நிறுவனரும், ஈத்தர்நெட்டின் கண்டு பிடிப்பாளர்களில் ஒருவருமான திரு. ராபர்ட் மெட்காப், நெட்வொர்க்குகளின் மதிப்பை வரையறுக்கின்ற ஒரு சமன்பாட்டை கூறுகிறார்.
V=N2
இதில், V என்பது ஒரு நெட் வொர்க்கின் பொருளாதார மதிப்பாகும். N என்பது அந்த நெட்வொர்க்கில் இருப்பவர்களின் எண்ணிக்கையாகும். மெட்காபின் விதியை எளிய சொற்களில் கூறினால், “பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை நீங்கள் அதிகரித்துக் கொண்டே போகும்போது, அதன் மதிப்பு பன்மடங்கில் அதிகரிக்கிறது.’
உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும், மிகப் பெரிய அளவிலான “வாடிக்கையாளர்” என்ற சொத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன. இதே போன்று, நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் உங்கள் வணிக உறவு வலைப்பின்னலில் உள்ள ஒவ்வொருவரும் உங்களுடைய சொத்துக்களே.
-கு. ராஜ்குமார், திட்டக்குடி (கடலூர்)