Latest Posts

கடினநீரை மென்னீராக்கும் கருவி

- Advertisement -

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிரிஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூசன்ஸ் நிறுவனம், கடின நீரை மென்னீராக்கும் கருவி களைச் சந்தைப்படுத்தி வருகிறது. இதன் இயக்குநர் திரு. எஸ். முருகேசன், அந்த கருவி தொடர்பான செய்திகளைக் கூறித்து பேட்டி அளித்தார். அப் போது, அவர் கூறியவை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.


“தண்ணீர் இரண்டு வகைப்படும். ஒன்று அமிலத்தன்மை (acidic) கொண்டது. மற்றொன்று காரத்தன்மை (alkaline) கொண்டது.


தண்ணீரில் கூடுதலான மினரல்கள் அதாவது தாது உப்புகள் இருந்தால் அதனை கடினநீர் என தரம் பிரிக்கின்றனர். குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் அதிக அளவில் இருந்தால் அவை தம்மோடு மற்ற தாது உப்புக்களையும் சேர்த்துக் கொண்டு நீரின் தன்மையை கடினமாக மாற்றி விடுகிறது.


இப்படி அளவுக்கு அதிகமாக பிற உப்புகள் சேரும் போது நீரில் உள்ள ஆக்சிஜன் படிப் படியாகக் குறைந்து விடுகிறது. இப்படியாக ஆக்சிஜன் அளவு குறைந்து விடுவதால் அந்த தண்ணீர் பயன் படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்த கடின நீராக மாறி விடுகிறது.


பொதுவாக நல்ல தண்ணீரை அளவிட, பிபிஎம் (ppm – parts per million) என்ற அலகைப் பயன்படுத்துகிறோம். இதன்படி 15 பிபிஎம்மில் இருந்து 60 பிபிஎம் என்ற அளவு வரையுள்ள தண்ணீரை மென்னீர் என்கிறோம். இந்த பிபிஎம் அளவுக்கு அதிகமாகப் போனால், அந்தத் தண்ணீரில் உள்ள நீர் மூலக் கூறுகள் சிதைவடைந்திருக்கிறது என்பது பொருள். அதாவது இயற்கையான நீர் மூலக்கூறுகளை இழந்த தண்ணீராக அது மாறிவிடுகிறது.


மழைபெய்யும் பொழுது தரையில் விழுந்து தண்ணீர் ஓடுவது போல், இயற்கை வளம் மிக்க காடுகள், பாறைகள், மலைகள், மரங்கள், செடி கொடிகள் போன்றவற்றின் மீது விழுந்து ஓடுகிறது. இப்படி ஓடும் மழைநீரானது நல்ல தண்ணீரின் தன்மையை அடைகிறது.


பெருநகரங்களில் பெருகி வரும் ஊர்திகளால் ஏற்படும் புகை மாசு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வேதிக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் இன்றைக்கு பசுமைச் சூழல் குறைந்து சுற்றுச்சூழல் கெட்டு சுத்தமான நீர் கிடைப்பது என்பது வினாக் குறியாகி விட்டது.


நல்ல தண்ணீர் கிடைக்காதபோது, கடினநீரையே பெரும்பாலும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதேபோல் விவசாயத்திலும், கோழிப் பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் நல்ல தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது.


குறிப்பாக, மருத்துவமனைகள், உணவகங்கள், பால்பண்ணைத் தொழிற் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் கள், கிராமங்களில் பொது விநியோகத்திற் காக அமைக்கப்படும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் குழாய்கள் மற்றும் மின்சாதனக் கருவிகள் கடினநீர் பயன் பாட்டால் அதிக உப்பு மற்றும் பாசி படிந்து அவற்றின் வாழ்நாள் காலம் குறைந்து விடுகிறது.


பொதுவாக ஆர். ஓ. (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) முறைப்படி கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீருடன் மினரல்கள் சேர்க்கும்போது அதனை குடிநீராகவும் பயன்படுத்தலாம். ஆனால் தற்போது 99 விழுக்காடு ஆர். ஓ. தண்ணீரானது மினரல்கள் சேர்க்காமலே குடிநீராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (BIS – Bureau of Indian Standards ) மற்றும் உலக நலவாழ்வு நடுவம் (WHO) வழிகாட்டுதல்களின் படி குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள், பண்ணை கள் போன்றவற்றிற்கு தனித்தனியாக தரநிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி குடிநீருக்கு 500 பிபிஎம் என்ற அளவில் வரையறை செய்யப்பட்டு உள்ளது. இதன் படி 500 பிபிஎம் என்ற அளவிற்கு மிகாமல் உள்ள தண்ணீரையே மனிதர்கள் பருக வேண்டும்.


காட்மியம், போரான், ஆர்சனிக், நைட் ரேட், சல்பர், மெர்க்குரி, ஃபுளோரைடு போன்ற உலோகப் பொருட்கள் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக தண்ணீரில் இருந்தால் அது உடல் நலத்திற்கு கேடாய் முடியும்.


இதனை கருத்தில் கொண்டு கடினநீரை மென்னீராக்கி பயன்படுத்தும் விதத்தில் ‘வாட்டர் ஸ்ட்ரக்சர் யூனிட்’ (Water structural unit) ஒன்றை வின்யாஸ் ஹைட்ரோ டெக்னாலஜிஸ் (Vinyas Hydro Technologies) மூலம் வடிவமைத்தோம்.


இந்த மென்னீர்க் கருவி, தண்ணீரில் உள்ள மூலக் கூறுகளை அதன் இயற்கை யான கட்டமைப்பில் உருவாக்கித் தருகிறது. இது 10,000 பிபிஎம் (ppm) என்ற அளவில் உள்ள கடினநீரைக் கூட பயன்பாட்டிற்கு ஏற்றபடி மென்னீராக்கி விடும்.


இந்தக் கருவியை நீர் வழித்தடங்களில் இணைத்துப் பயன்படுத்தும் போது 10,000 பிபிஎம் வரை உள்ள கடினநீரை மென்னீராக்கித் தருகிறது. இந்தக் கருவி செயல்பட மின் இணைப்புகள் ஏதும் தேவையில்லை என்பதால், மின் செலவும் இல்லை. குழாய்களில் ஏற்படும் உப்பு படிமங்களை வேதிப் பொருட்கள் இல்லாமல் இயற்கையாக நீக்குகிறது. நீரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்திரங் கள் மற்றும் கருவிகளின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது. வீட்டில் துணி துவைக்கும் எந்திரத்தில் இந்த தண்ணீரை பயன்படுத்தும் போது துணிகள் நன்கு வெளுக்கப் படுகின்றன. பராமரிப்பு செலவுகள் இல்லை.


விவசாயத்தில் சொட்டு நீர்ப் பாசனத் தின் முக்கியமான சிக்கலாக உள்ள குழாய் களில் ஏற்படும் உப்பு அடைப்பு. இந்த மென்னீர்க்கருவியை பயன்படுத்தும் போது இயற்கையாகவே அடைப்பு நீக்கப்பட்டு விடுகிறது. இதேபோல் தொழிற்சாலைகளில் இந்தக்கருவியைப் பயன்படுத்தும்போது, ஆர். ஓ. மூலம் வீணாக்கப்படும் தண்ணீரின் அளவு 25 விழுக்காடு வரை குறைக்கப்படுகிறது. நீச்சல் குளங்களில் ஏற்படும் பாசிப் படிவை நீக்குகிறது. மேலும் அதிக அளவிலான குளோரின் பயன்பாட்டை யும் தவிர்க்கலாம்.


கடந்த ஜனவரி முதல் பல்வேறு மாவட்டங்களில் முகவர்களை நியமித்து அவர்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறோம்
தமிழகத்தில் இந்த வாட்டர் ஸ்ட்ரக்சர் தொழில்நுட்பம் பற்றி தற்போதுதான் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இந்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் 15 ஆயிரம் வாடிக்கையாளர் களைப் பெற திட்டமிட்டு செயல் பட்டு வருகிறோம். நாங்கள் வழங்கும் முகவர்களுக்கான வாய்ப்பை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார், திரு. முருகேசன். (044 -& 2565 5612/16, 94447 81692, 94440 39232)

-முத்து

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news