Latest Posts

என்னுடைய ஆர்வம் சார்ந்த தொழில்!

- Advertisement -

பாதுகாவலர் பணிக்கு பகுதி நேரமாக ஆட்களை அனுப்பித் தருவதை முதன்மையான தொழிலாக மேற் கொண்டு வருகிறார், திரு. முகம்மது உமர். பாதுகாவலர் மற்றும் மெய்க் காவலர் சங்கம் (Tamilnadu Defender & Escort Association) என்ற சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் உள்ளார். அவரிடம் வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்ட போது,


”நான் சென்னை புதுக்கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிரு;ந்த போதே ஏதேனும் புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.


எனது குடும்பம் வண்ணாரப் பேட்டையில் ஜவுளித் தொழில் பின்புலம் கொண்டது. எனது சகோதரர்கள் கல்லூரி முடிந்தவுடன் கடைக்கு சென்று வியாபாரத்தை கவனிப்பார்கள். ஆனால், என் மனதில் தனியாக வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட நான் என்னுடைய முழு கவனத்தையும் உடற்பயிற்சியின் மீது வைத்தேன். உடலை நன்றாக கட்டுக் கோப்பாக வைத்திருந்தேன். அதோடு நில்லாமல் உடற்கல்வி பயிற்றுநருக்கான முறையான சான்றிதழையும் பெற்றேன்.


பின்பு, விளையாட்டாக சில நிகழ்ச்சிகளுக்கு பாதுகாவலர் பணி களுக்காக நண்பர்களுடன் சென்றேன். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நாம் ஏன் இதைத் தொழிலாக மாற்றக்கூடாது என எண்ணினேன். நான் அந்த நேரத்தில் தயாரிப்பாளர் அண்ணன் திரு. ஆர்.கே. சுரேஷ் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி யாளராக பணியாற்றினேன். அவரது பிறந்த நாளன்று எங்களது பவுன்சர் அசோசியேசனை அவரது கையால் தொடங்கினோம்.


அதன் மூலமாக உருவானதுதான் ‘மஸ்கல் ஃபோர்ஸ் என்ற பாதுகாவலர் மற்றும் மனித வள சேவைகள் நிறுவனம். இந்நிறுவனம் தொடங்கி பத்து ஆண்டு கள் ஆகின்றன. எங்கள் நிறுவனத்தின் மூலமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் உள்ளிட்ட இடங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணிக்காக உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலா னோர் பகுதி நேரப் பணியாளர்கள்தான், கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வேறு பணிகள் கிடைக்காமல் இருக்கும் வேலையில்லாத பட்டதாரிகளும், கல்லூரி யில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் களும் எங்கள் தொடர்பில் இருக்கிறார்கள்.


இவர்களுக்கு ஒரு நாளைக்கு பணிக் காக வரும்போது ஒரு நாள் ஊதியமாக ஆயிரம் ரூபாய் வரை தருகிறேன். இவர்கள் எந்த நேரத்தில் ஈவென்ட் இருந்தாலும் சரியான நேரத்திற்கு அந்த இடத்தில் இருப்பார்கள்.


நடிகர்கள், அரசியல் தலைவர் கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எங்களு டைய சேவை இருக்கும். மேலும் பவுன்சர்ஸ் என்றாலே அடியாட் கள் என்ற மனப்போக்கு பொதுமக்களிடம் உள்ளது. அந்த மனப்போக்கு தவறானது. எங்களுடைய பணி, நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகர்களுக்கோ, அரசியல் தலைவர் களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ கூட்டங்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவதுதான். எனவே எங்களை ரவுடிகள் என்ற பார்வையில் பார்க்கத் தேவையில்லை. பவுன்சர்களை மதிக்க வேண்டும். நாங்களும் ஒரு வீட்டில் வளரும் பிள்ளைகள்தான். எனவே எங்களைப் பார்த்து பயப்படத் தேவையில்லை என்பதை உணர வைக்க வேண்டியது எனது கடமையாகும்.


எங்களுடைய பவுன்சர்களில் பெரும்பா லோனோர் படித்த இளைஞர்கள்தான். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட பொழுதுபோக்கிற்காக எங்களுடன் பணியாற்ற வருகின்றனர். என்னுடைய நிறுவனத்தின் மூலமாக திரைப் படங்களுக்கு சண்டைக் காட்சிகளில் நடிக்கவும் , நாடகங்களில் நடிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறேன்.

இப்போதுள்ள காலக் கட்டத்தில் உடற்பயிற்சி செய்வதில் பொதுவாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் கொண்டு ஒரு ஜிம் வைக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது விரைவில் அதை நிறைவேற்ற இருக்கிறேன்.


எங்கள் நிறுவனத்தில் பணிக்காக வரும் இளைஞர்களை அக்கறையுடன் நடத்து கிறேன். ஒரு ஈவென்ட்டுக்கு பெரும் பாலும் 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே செலவிட வேண்டியது இருக்கும். திருமண நிகழ்ச்சிகள் என்றால் சற்று அதிக நேரம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.


எங்கள் நிறுவனமானது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று மாறுபட்டதாகும். எங்களது ஊழியர்கள் நிகழ்ச்சிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுடனோ, நடிகர்களுடனோ, அரசியல் தலைவர்களுடனோ செல்ஃபி எடுக்க மாட்டார்கள். பாதுகாப்பு பணியில், கட்டுக் கோப்புடன் செயல்படுவதற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளேன்.


மேலும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதோ, ஃபோன்களில் மூழ்குவதோ அறவே இருக்காது. இது போன்று இருப்பதால்தான் பல்வேறு விதமான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களும், ஓட்டல் நிர்வாகமும், நடிகர்களும், முக்கியமான அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் எங்களது நிறுவனத்தை தொடர்பு கொள்கிறார்கள்.


கூட்ட நெரிசலில் அவர்களுக்கான பாதுகாப்பை திட்டமிட்டு வழங்கு வதுதான், எங்களுடைய மிக முக்கியமான பணியாகும். வாரத்திற்கு எப்படியும் நான்கு முதல் ஐந்து நிகழ்ச்சிகள் எங்களது நிறுவனத்திற்கு வருகின்றன. இந்த தொழிலை பொறுத்தவரை முழு நேரத் தொழிலாக யாராலும் தொடர முடியாது. எனவே, நான் எம்.எஃப். ஈவென்ட் மற்றும் திருமண ஏற்பாட்டு நிறுவனத்தையும் இந்த நிறுவனத்தோடு சேர்த்து நடத்தி வருகிறேன்.


இதன் மூலமாக நிகழ்ச்சி ஏற்பாடுகள், திருமண ஏற்பாடுகள், நிகழ்ச்சிக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தல் சைவ – அசைவ உணவுகள் பரிமாறுதல், நேரடி சமையல், பஃபே சிஸ்டம், பலூன் அலங்காரம், மலர் அலங்காரம், ஒப்பனை செய்தல், ஃபோட்டோ, வீடியோ, கேக், ஃபோட்டோ பூத், மெல்லிசை நிகழ்ச்சி கள், டிஜே, நடன நிகழ்ச்சிகள், மேஜிக் நிகழ்ச்சிகள், விருந்து ஏற்பாடுகள், இரு சக்கர சாகச நிகழ்ச்சிகள், திருமணத் திற்கான கார் அலங்காரம் மற்றும் சொகுசு கார்களை ஏற்பாடு செய்தல், கார்ட்டூன் பொம்மைகளின் உருவங்களில் சிலரை ஏற்பாடு செய்தல், தற்காலிக டாட்டூக்கள் வரைதல், மெஹந்தி, காய்கறி சிற்பங்கள் செய்தல், தாம்பூலப் பைகள் கொடுத்தல் போன்ற ஏற்பாடுகளை செய்து தருகிறோம்.


பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, நான் செய்வதில்லை. அவர்களிடம் அவ்வளவு எளிதாக பணி வாய்ப்பு களைப் பெற முடிவதில்லை. பணிகளைச் செய்து கொடுத்த பிறகு பணத்தை உடனே பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது.
மேலும் நான் இந்திய மீனவர் சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவராகவும் இருக்கிறேன். இராயபுரம் டாக்டர் எம். டி. தயாளன் அவர்களின் கீழ் செயல்பட்டு வருகிறேன். சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். மழை வெள்ள நேரத்தில் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு விதமான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டேன்.


எனக்கு திருமண விழாக்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்ற இல்லங்களுக்கு அனுப்புவதற்கு ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதை விரைவில் என்னுடைய நண்பர் வெங்கடேசன் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்ற இருக்கிறேன். மேலும் சமூக அக்கறை பற்றிய விழிப்புணர்வு பரப்புரை களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் சிலருக்கான படிப்பு செலவுகளையும் செய்து வருகிறேன்.

திருநங்கைகள் சமூகத் தில் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்காக பொதுமக்களி டையே அவர்கள் மீதான அன்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களைப் பற்றிய நல்ல செய்திகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன்”, என்றார் திரு. முகம்மது உமர் (99400 66724).

-தினேஷ்குமார்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news