Monday, September 27, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

புத்தகம் எழுதி பிராண்ட் மதிப்பை உயர்த்தலாம்

தங்கள் உண்மையான வாழ்க்கை வளர்ச்சிக் கதையைச் சொல்லி, தங்களது தொழில் பிராண்டை இன்னும் புகழ் பெற வைப்பது, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா நாடுகளின் தொழில் முனைவோர்களின் நுட்பங்களில் ஒன்று. அது தன் வாழ்க்கை வரலாறு புத்தகமாக இருக்கலாம்; அல்லது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வாய்ப்பை தொழில் முனைவோர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது இல்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -


விரல் விட்டு எண்ணும் அளவிற்கு, ஓரிரு தொழிலதிபர்களே, தங்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக கொண்டு வந்து பீள்ளனர். ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரை, தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகளை புத்தகமாகப் படிக்கும் அல்லது திரைப்படமாக/வீடியோக்களாக காணும் விருப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நம்மில் பலருக்கும் வெற்றி பெற்ற அல்லது சாதனை செய்த தொழிலதி பர்களின் கதைகளை படிக்கப் பிடிக்கும்/ கேட்கப் பிடிக்கும்/பார்க்கவும் பிடிக்கும். ஏனெனில் தொழிலதிபர்களின் கதைகளில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள், அவற்றை எப்படி கடந்து வெற்றி பெற்றார்கள்? பலமுறை தோல்வி கண்ட அவர்கள், அவற்றில் இருந்து மீண்டு, எப்படி வெற்றி பெற முடிந்தது? இந்த வெற்றியாளர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் என்னென்ன – முதலிய ஊக்கமூட்டும் நன்மை அம்சங்கள் நிறைந்திருக்கும்.


எனவே தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில், தொழிலதிபர்கள் தமது வெற்றிக் கதைகள் மூலம் தங்களது பிராண்டை மேலும் மேலும் புகழ் பெற வைத்துள்ளார்கள்.


எனவே தொழிலதிபர்கள் தங்களது வெற்றிக் கதைகளைச் சொல்லி தங்களது நிறுவன மதிப்பை (வேல்யூ) இன்னும் அதிகரிக்கலாம்; பிராண்டை இன்னும் பரவலாக்கலாம். இப்படி தொழிலதிபர்கள் தங்களது கதையை எழுதும் போது, அல்லது காட்சி ஊடகத்தில் தயாரிக்கும் போது, பின்வரும் நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.


கதையின் கரு மற்றும் உள்ளடக்கம்
எந்த ஒரு கதைக்கும் மூலக்கரு மற்றும் உள்ளடக்கம் மிக முக்கியமானது. அதாவது அவரின் ஒன்லைன் ஸ்டோரி என்று சொல்வார்கள். இது மிகவும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த கதையாக அமைக்க முடியும்.


மேலும் அவர் தேர்ந்தெடுக்கும் எழுத் துகள் உயிரோட்டமாக இருக்க வேண்டும். பொதுவாக அலங்கார சொற்களைப் பயன்படுத்தாமல், மனதில் இருப்பதை, நினைப்பதை வெளிப்படையாக எழுதி னாலே, அவரின் சொந்தக் கதையில் தானாகவே உயிரோட்டம் வந்து விடும். அல்லது இவர்களின் வாழ்க்கை வரலாற்றை, தொழில்முறை எழுத்தாளர்களிடம் சொல் லியும் எழுத வைக்கலாம்.


பின்புலம் சரியாக இருக்க வேண்டும் :
நாம் எழுதும் அல்லது காட்சியாகக் காட்டும் கதை, படிப்போரின், கேட்போரின் அல்லது திரைப்படமாகப் பார்ப்போரின் கவனத்தை ஈர்ப்பதாகவும், உற்சாகத்தை ஊட்டும் வகையிலும் அமைய வேண்டும். முக்கியமாக தமிழ் திரைப்படம் போல கதாநாயக பில்டப் இல்லாமல், நம்பகத் தன்மை மற்றும் உண்மைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.


தொழிலதிபர் சொல்லும் கதைக்கு தேவையான பின்புலம் இருக்க வேண்டும். சான்றாக, அந்த தொழிலதிபர் ஒரு முக்கிய மனிதரை தன் வாழ்க்கையில் சந்தித்தி ருந்தால், அவரது பாத்திரமும் அவரது உண்மையான பெயரில் அவரது கதையில் காட்டப்பட வேண்டும். மேலும் அவர் படித்த பள்ளி, கல்லூரி போன்றவைகளின் சரியான பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.


சுவையாக இருக்க வேண்டும்
எழுதும் அல்லது காட்சியாக காட்டும் வரலாறு சுவையாக சொல்லப்பட வேண்டும். திரைப்படமாக இருந்தால், அதில் வளவளவென விவரங்களைக் கொடுத்து, பார்க்கும் ரசிகர்களுக்கு தலை வலியைக் கொடுக்காமல், சுவையான படமாக உருவாக்கப்பட வேண்டும்.


எங்கே, எப்பொழுது, என்ன நடந்தது?
தொழிலதிபர்களின் சொந்தக் கதை யானது, எங்கே நடந்தது? எப்பொழுது நடந்தது? என்ன நடந்தது? அதன் பிறகு வெற்றி கிடைத்ததா? சவால்களை முறியடிக்க முடிந்ததா? – போன்ற கேள்விகளுக்கு விடை தருவதாக இருக்க வேண்டும். மேலும் அவரது வாழ்க்கைப் பயணம், தொடக்கம், நிகழ்ச்சிகள், வெற்றி தோல்வி, மகிழ்ச்சி, துயரம் போன்ற அனைத்தும் சரியான பின்புலத்துடன் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.


கதையின் தொடக்கம் சான்றாக, 1988 இல் 400 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த தொழி லின் தற்போதைய மதிப்பு சுமார் 400 மில்லியன் என்று தொடங்கப்பட வேண் டும். அல்லது 1992 இல் கொல்கத்தாவுக்கு 2000 ரூபாயுடன் என்ற இவர், இன்று 20,000 கோடிக்கு அதிபதி – என்று எழுதப் படலாம்.


என்ன செய்ய நினைத்தார்?
கதையின் அதிபர், என்ன சாதிக்க நினைத்தார், அல்லது என்ன செய்ய முனைந்தார் என்பது முக்கியமாக சொல் லப்பட வேண்டும். பொதுவாக பல தொழிலதிபர்கள் தங்களது அலுவலகத்தில் ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்று எழுதி வைத்து இருப்பார்கள். ஒரு சிலர், ‘அனைவருக்கும் கல்விப்பணி’ என்பார்கள். இன்னும் சிலர், ‘வாழு, வாழவிடு என்பார்கள். ‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே’. மற்றும் ‘எல்லோருக்கும் அறிவியல்’ மற்றும் ‘உலகம் முழுவதும் ஒரே வலையில் இணைக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்ட தொழிலதிபரின் குறிக் கோள் அந்தக் கதையில் முக்கியமாக குறிப்பி டப்பட வேண்டும்.


நாயகன் மற்றும் வில்லன்
வில்லன் இல்லாத கதைகள் வெற்றி பெறுவது கடினம். அந்த வில்லன் – பயங்கர மீசையுடன், அட்டகாசமான சிரிப்புடன், மனிதர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த தொழிலதிபரின் கடந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள், போட்டிகள், தோல்விகள், போராட்டங்கள், எதிர்ப்புகள், வறுமைகள் – போன்றவையும் அவரது கதையின் வில்லன்கள்தாம். இந்த வில்லன்களை வென்றால்தான் தொழிலுக் கும் வெற்றி. கதைக்கும் வெற்றி.


விறுவிறுப்பு
எதிர்ப்புகளை போட்டிகளை சவால் களை எப்படி முறியடித்தோம்? பலமுறை தோல்வி கண்ட பின்பு, எப்படிப்பட்ட வியூகம் அமைத்து வெற்றி பெற்றோம் போன்ற நிகழ்வுகள் விறுவிறுப்பாக எழுதப்பட்டு இருக்க வேண்டும்.


கதையின் முடிவு
கதையின் முடிவு குறிப்பிடப்பட வேண்டும். அந்த தொழிலதிபர் வெற்றி பெற்றாரா, அல்லது தோல்வி கண்டாரா? அந்த தோல்வியில் இருந்து அவர் கற்றுக் கொண்டது என்ன என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் அந்தத் தோல்வியில் அல்லது பயங்கர சறுக்கலில் இருந்து அவர் எப்படி மீண்டெழுந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.


எளிமையாக இருக்க வேண்டும்:
நமது வெற்றிக் கதை எளிமையாக இருக்க வேண்டும். எளிதில் படிக்கும் படியாகவும், எளிதில் நினைவில் கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். நாம் கையாண்ட தொழில் உத்திகள், தோல்வி களை வெற்றிகளாக மாற்றியது, எந் நேரமும் துவளாமல் செய்த முயற்சிகள் – போன்ற நிகழ்வுகளே படிப்பவருக்கு நல்ல பாடங்களைப் போதிக்கும். நமது கதை படிப்பவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தினால்தான் தாக்கத்தை ஏற்படுத்தும்.


பிராண்ட் மதிப்பை உயர்த்த வேண்டும்
நமது கதை, நம்மைப் பற்றி தெரியாதவர்களிடம் கூட, நமது பிராண்ட் மதிப்பை உயர்த்தும்.. ஒரு தொழிலதிபரின் கதை, படிப்பவரையும் தொழில் முனைய வைக்க வேண்டும். அல்லது வெற்றியா ளராக மாற்ற உதவ வேண்டும்.


முக்கியமாக நம்மைப் படிப்பவர்களும் நமது பிராண் டுகளை உடனே அல்லது எதிர்காலத்தில் பயன்படுத்தும் நமது வாடிக்கையாளராக மாற நேரிடலாம்.

-குக. நமச்சிவாயம். திருநெல்வேலி

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.