வருவாய் துறை நில ஆவணங்களில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் பொது மக்கள் பெருமளவில் அவதி பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
1985 -களில் நடந்த நிலவரி திட்ட சர்வேயின் போது பூர்வீக சொத்துகளில் சில பங்காளிகள் பெயர் மட்டும் கணக்கில் ஏறி இருக்கும். மீதி பங்காளிகள் பெயர் ஏறி இருக்காது. பட்டா தன் பெயருக்கு வந்த பங்காளி, பட்டா கணக்கில் உள்ள பெயர் ஏறாத பங்காளிக்கு இடத்தை பிரித்து ஒப்படைக்காமல் வேறு ஒருவருக்கு கிரையம் கொடுக்கும் பொழுது பல சண்டை, சச்சரவுகள், பெரிய மனுசன்கள், நீதிமன்றம், காவல் நிலயை பஞ்சாயத்து களில் காலத்தையும், பணத்தையும் உறவுகளையும் இழந்து கொண்டு இருக்கின்றனர்.
நிலவரி திட்ட சர்வே செய்யப்பட்ட கணக்கில் தனியார் ஒருவர் கிரையம் வாங்கி கிரைய பத்திரம் (பழைய சர்வே எண் இருக்கிற) வைத்து இருக்கிற அச்சொத்து புறம்போக்கு என தவறுதலாக வகைப் படுத்தப்பட்டால், பாதிக்கபட்ட மக்கள், மாவட்ட ஆட்சி யர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டாட்சியர், தாசில்தார் என நடையாய் நடக்கின்றனர்.
புறம்போக்கு என வகைப் படுத்தப் பட்டது செல்லாது என வருவாய்த் துறையினரிடம் உறுதிப் படுத்த, கம்ப்யூட்டர் EC, மேனுவல் EC, பழைய பத்திரங்கள் நகல் எடுத்தல், SLR நகல் எடுத்தல், தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ஆவண காப்பகங்களில், ஆவணங்களை தேடு வதற்கு, தங்களுடைய பணத்தையும் நேரத்தையும் இழக்கின்றனர்.
பாட்டன் பெயரில் இருக்கின்ற பட்டாவை பல ஆண்டுகளாக வாரிசுகள் பெயர் மாற்றாமலேயே இருந்து விட்டதால் இப்பொழுது மாற்ற வேண்டும் என்று பேரன்மார்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்றால், தாத்தாவின் இறப்பு சான்று, வாரிசு சான்று வாங்க வேண்டி இருக்கிறது.
இறப்பு தேதியை தேட சுடுகாட்டு ஆவணம், தாலுகா, நகராட்சி, பத்திரப் பதிவு அலுவலகங்களில் தேடு கூலி கொடுத்து தேடியும் தேதி கிடைக்கா விட்டால் நீதிமன்றம் அணுகி பரிகாரம் பெற வேண்டும். நீதிமன்றம் சென்றால், வக்கீல் ஸ்ட்ரைக், நீதிபதிகள் பற்றாக் குறை என்று நீதித்துறை வருவாய்த் துறையை விட சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிறது.
இப்பொழுது இந்த மாதிரி வாரிசு சான்று, இறப்பு சான்றுக்கு கோட்டா ட்சியருக்கு நீதிமன்றத்தில் இருந்து திருப்பப்படுகிறது. இதனால் பட்டா பெயர் மாற்றமே செய்ய வேண்டாம் என்று விட்டுச் செல்கின்ற பேரன் மார்கள் அதிகம்.
இந்த வேலைகளுக்கு கோர்ட்டுக்கு முத்திரைத்தாள் கட்டணம், முத்திரை வில்லை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் என்று கையில் இருக்கும் சேமிப்புப் பணத்தை எல்லாம் செல வழித்து மன நிம்மதியை பேரன்மார்கள் இழந்து விடுகிறார்கள்.
மேலும், விவசாய நிலங்களில் தற்போது பாடுபடுவரின் பெயர் பட்டாவில் மேற்கண்ட சிக்கல்களால் ஏறாமல் இருப்பதால், அவருக்கு கிடைக்க வேண்டிய விவசாய மானி யங்கள், கடன்கள், நிதி உதவிகள், காப்பீடு பெற முடியாமல் தவிர்க்கி ன்றனர். அலைக்கழிக்கப் படுகின்றனர்.
நிலவரி திட்ட காலத்தில் செய்யப் பட்ட சர்வே ஆவணங்களில் இருக்கும் பட்டாதாரர்கள், தங்களுடைய பெயர் மாற்றம் செய்யமலேயே இறந்து விட்டார்கள். இப்பொழுது சொத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசு கள். அவ்வாரிசுகளுக்கு பல வாரிசுகள் என சொத்து உரிமை பல பங்குகளாய் ஆகிவிட்டது.
ஆனால், யாருக்கும் பத்திரங்கள் இல்லை. செட்டில்மென்ட், தானம், விடுதலைப் பத்திரங்கள் மூலம் பத்திரம் உருவாக் கலாம் என்று நினைத்தாலும் ஒருவர் பங்கை இன்னொருவர் அடையலாம் என்று நினைத்தாலும், பத்திரப்பதிவுத் துறையின் வழிகாட்டி மதிப்பு அதிகமானது போன்ற குளறு படிகளால் யார் செலவு செய்வது என்று செலவுக்கு பயந்து பட்டா பெயர் மாற்றம் செய்யும் வேலையை கிடப்பிலேயே போட்டு விடுகின்றனர்.
மகள் திருமணம், மகன் படிப்பு போன்ற தேவைகளுக்கு சொத்தை விற்கலாம் என்று நினைத்தால், இவ்வளவு ஆவண குளறு படிகள். இவற்றை சரி செய்தால்தான் கிரையம் என்றால், இதற்கு ஆகும் கால விரயத்தை நினைத்து, சொத்தை விற்கவும் முடியாமல், மகன், மகள் நெருக்கடிகளால் சொத்தை வைத்து இருக்கவும் முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
நில அளவுகளில் துல்லியமின்மை, வேலித் தகராறு, நில ஆக்கிரமிப்பு தகராறு, எல்லை சிக்கல் என்றால் அரசு சர்வேயர் வந்து இரண்டு தரப்புக்கும் அளந்து தர வேண்டும். சர்வேயரை சிக்கலுக்கு உரிய இடத்துக்கு வர வைப்பதற்கே, பல நடைகள், பல தொலைபேசி அழைப்புகள், அதன் பின் தொடர் முயற்சிகளுக்குப் பின்புதான் வருகிறார்கள். அதனால் ஏற்படுகின்ற காலவிரயம், அலைக்கழிப்புகள் மக்களின் மனநிலையை வெறுத்துப் போக வைத்து விடுகின்றன.
பட்டாவில் இருப்பது பத்திரத்தில் இல்லை; பத்திரத்தில் இருப்பது FMB யில் இல்லை, இவை மூன்றிலுமே இருப்பது களத்தில் இல்லை! இப்படித்தான் சர்வேக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
UDR, கிராம நத்தம், நகர சர்வேக்களின் பட்டா பெயர் மாற்றம் செய்ய நினைக்கும் நடுத்தர மக்கள் தினமும் வேலைக்கு போவதால் இதற்கென்று ஒரு ஆளை சம்பளத்திற்கோ அல்லது தரகிற்கோ உதவி கோர வேண்டி இருக்கிறது. VAO, RI, DT போன்ற அதிகாரிகளை அதிக பின் தொடரல்கள் செய்ய வேண்டி இருக்கிறது.
அதிக காத்திருத்தல் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கும் மக்களின் கை யிருப்பும், காலமும் வீணாக்கப் படுகிறது. மேற்சொன்ன சிக்கல்களுக்கு தீர்வு வேண்டி அரசு அதிகாரிகளிடம் சென் றால், கால தாமதம், அலைக்கழிப்பு போன்றவற்றோடு கையூட்டும், பேரமும் இல்லாமல் வேலைகள் முடிவதில்லை.
சாதாரண மாதச் சம்பளக்காரர்கள், விவசாயிகள் பெரும் பணத்தை இதில் இழக்கிறார்கள். அண்மையில் சென்னை – ஓஎம்ஆர், துரைப்பாக்கத்தில் விஏஓ – விடம் பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன கையூட்டு தொகையை கேள்விப் பட்டதுமே மாரடைப்பு வந்து இறந்து போனார், அந்த, மாத சம்பளக்காரர். அந்த அளவுக்கு அனைவருமே வாங்கிப் வாங்கி பழகிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் தூய்மையாக சர்வே செய்யாமல், வருவாய்த் துறை ஆவணங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஆன்லைனிற்கு மாற்றுவது அடுத்த தலைமுறையினரை பெருமளவு பாதிக்கும்.
தமிழகம் முழுவதும் நிலவரி திட்ட சர்வே, 1985 -களில், நஞ்சை, புஞ்சை மானவாரி நிலங்களில் நடந்தது. 1995 களில் கிராம நத்தங்களில் நடந்தது. அதன் பிறகு, இப்பொழுது 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், தற்போதைய நிலையில் நிலத்தின் மீது பல்வேறு ஆவண மாறுதல்கள் நடந்து இருக்கின்றன.
அதற்கு ஏற்றவாறும், தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்றவாறும் நில ஆவ ணங்கள் இல்லை. பழைய நிலவரித்திட்ட சர்வேக்களில் பல்வேறு குளறுபடிகளும், இன்னும் முழுமைப் படுத்தப்படாத சர் வேக்களும் இருப்பதால் பலவிதமான கஷ்டங்களுக்கு மக்களும், அதிக வேலை பளுவை சுமக்கும் அரசு எந்திரமும், அதன் ஊழியர்களும் அவதிப் படுகிறார்கள்.
நிலவரித் திட்ட சர்வே செய்யப்பட்டதில் இருக்கும் பெயர்ப் பிழைகள், அளவுப் பிழைகள், சர்வே எண் பிழைகள் ஆகியவற்றை திருத்தம் செய்யவும், விடுபட்ட உரிமையாளர்கள், வாரிசுதாரர்கள் பெயரை சேர்க்க, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆண்டு தோறும், மனுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர்களும் RDO நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி சரி செய்து கொண்டே இருக்கின்றனர்.
UDR ஆவணங்கள் திருத்தங்கள் இல்லாத ஆவணங்கள் என்றோ, அனைத்து திருத்தங்களும் முடிந்து விட்டது என்றோ இப்பொழுது வரை யாரும் சொல்ல முடியாது.
கிராம நத்தம் பகுதிகளில் நடந்த நத்தம் நிலவரி திட்டம் சர்வேக்களில், நத்தம் தோராய பட்டா நடைமுறையும், நத்தம் தூய பட்டா நடைமுறையும், என இரண்டு நடைமுறைகள் நடைபெற்று இருக்க வேண்டும்.
ஆனால் 1995ம் ஆண்டு தொடங்கிய நத்தம் சர்வே 2018 ஆகியும், இரண்டாவது நடைமுறையான தூய பட்டாவுக்கே இன்னும் பல கிராமங்கள் வரவில்லை.
கிராம நத்த சர்வேயிலும், பல அளவு திருத்தங்கள், பெயர் திருத்தங்கள், நத்தத்தில் பொதுவழி, பொது இட சிக்கல்கள், தனியார் புறம்போக்கு என வகைப்பாடுகளில் குளறுபடிகள் என பல இருக்கின்றன. மேற்படி சிக்கல்களை சரி செய்வதற்கு மக்கள் அரசு எந்திரத்துடன் அல்லல் படுகின்றனர்.
UDR ஆவணங்களாவது கணினிமயப் படுத்தப்பட்டு விட்டது. ஆனால் கிராம நத்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும், கணினிமயப் படுத்தாமலேயே இருக் கின்றன. இதேபோல் நகர நில அளவைகளும் பெருமளவில் கணினி மயப்படுத்தாமலேயே இருக்கி ன்றன.
உலகமே கம்ப்யூட்டர், ஆன்லைன் என்று சென்ற பிறகும் நம்முடைய நில ஆவணங்கள் கம்ப்யூட்டருக்கே போகா மல் இருப்பது நம்முடைய பின்னோக்கிய இருப்பையேக் காட்டுகிறது.
அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவத்தின் அடிப்படையில் வீட்டு மனை இல்லா மக்களுக்கு இலவசமாக ஒப்படைப்பு செய்தது. இதேபோல் பழங்குடி, ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப் பட்ட ஒப்படைப்புகளும், இன்னும் UDR பட்டாவிலும், FMB யிலும் கிராம படங்களிலும் பல கிராமங்களில் ஏறாமலேயே இருக்கின்றன.
நகர உச்ச வரம்பு சட்டத்தில் தெரியாமல் வாங்கியவர் (Innocent Buyer) நிலங்களை வரன்முறைப் படுத்தி சட்டம் இயற்றி இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் வரன்முறைப் படுத்துதல் முடியாமல் இருக்கின்ற நிலைதான் தொடர்கிறது.
ஜமீன் சொத்து நிலங்கள், பஞ்சம நிலங்கள், பூதான நிலங்கள், ஆதி திராவிடர் ஒப்படைப்பு நிலங்கள் கண்டி சன் பட்டா நிலங்களை மீட்க பலவித சட்டப் போராட்டங்களை தொடர்பு உள்ளவர்கள் நடத்திக் கொண்டு இருக் கின்றனர். அவை இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை.
ஜன்ம நிலங்கள், இரு மாநில எல்லையோர நிலங்கள் போன்றவற்றில் இன்னும் சர்வேக்களே முடியாமல் இருக்கின்றன. மேலும் போலி ஆவண ங்கள், போலி பத்திரங்கள், ஆள்மாறாட் டங்கள், அது தொடர்பான வழக்குகள் என பல நிலங்கள் சிக்கல்களில் இருக்கின்றன.
விவசாய நிலங்களில் சர்வே பிழைகள் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதலோ, குறைவோ என்கிறார்கள்.
(0.1 m.m. என்பதே வெர்னியர் அளவுகோல் பிழை என்று அறிவியல் பாடத்தில் படித்து இருக்கிறோம்.) 5 சென்ட் என்பது 5×437 =2185 சதுர அடி ஆகும். இவை நவீன கருவிகள், சாட்டிலைட் உதவிகள், புதிய தொழில் நுட்பங்கள் இல்லாத போது நடந்த சர்வேயின் போது இருக்கும் சர்வே பிழைகள் ஆகும்.
வருவாய்த் துறை ஆவணங்கள்தான், அனைத்து துறைகளுக்கும் அடிப்படை ஆவணங்கள் ஆகும். இவை தப்பும் தவறுமாக இருந்தால் இதனை அடிப் படையாக வைத்து உருவாக்கப்படும் அனைத்து பத்திரப்பதிவுத் துறை, அங்கீகாரத் துறை, விவசாயத் துறை ஆவணங்களும் தப்பும் தவறுமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரிசியில் இருந்து கற்களையும், அழுக்குகளையும் பொறுக்கி எடுக்காமல் அப்படியே உலையில் போடுவது எவ்வளவு ஆபத்தோ அதேபோல் வருவாய்த் துறை ஆவணங்களில் இருக்கும் சிக்கல்களைக் களையாமல் கம்ப்யூட் டரில் இருந்து ஆன்லைன் ஆக்குவது அடித்தட்டு நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அடுத்த தலைமுறையினர் பிழையான ஆவணங்களையே சரி என்று ஏற்று கொள்ளக் கூடிய கட்டாயத்திற்கு வந்துவிடுவர்.
இவ்வாறு இருக்கும் பல்வேறு சிக்கல்களை சரிப் படுத்தாமல், மேனுவல் கம்ப்யூட்டரில் இருந்து ஆன்லைனுக்கு மாற்றுவது என்பது, புதிய மொந்தையில் பழைய கள் என்றே கருதப்படும். மேலும் தற்போது பத்திரப்பதிவுத் துறை, பத்திரப் பதிவுகளை ஆன்லைன் முறைக்கு மாற்று வதால் மேற்படி வருவாய்த் துறை, ஆன்லைன் ஆவணங்களில் இருக்கின்ற தவறுகளை பதிவுத் துறையும் அங்கீகரிக்கின்ற சிக்கல்களை உருவாக்கும்.
எனவேதான் தமிழகம் முழுதும் நிலவரி திட்ட சர்வே செய்யப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்வதால் உண்டாகும் நன்மைகள்:
இப்போதைக்கு இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள், சாட்டிலைட் உதவிகள் மூலம் நிலவரி திட்ட சர்வே செய்வதால் மிகவும் துல்லியமான அளவுகளாக நில அளவுகள் இருக்கும். பழைய நிலவரி திட்ட சர்வேயில் ஏக்கருக்கு 5 சென்ட் கூட குறைய இருக்கும் என்ற நிலையில் புதிய சர்வே ஏக்கருக்கு 1 சென்ட்டுக்கு கீழேதான் சர்வே பிழை இருக்கும். இதனால் சில நூறு ஏக்கர் நிலங்கள் மிச்சமாகும்.
புதிய கிராம படங்கள், புதிய புல வரைபடங்கள், துல்லியமாக உருவாக்கப் படுவதால் பத்திரப் பதிவுத் துறை, அங்கீகாரத் துறை ஆன்லைன் ஆகிக் கொண்டு இருப்பதால் புதிய குழப்பங்கள் வராமல் சீராக ஆன்லைன் மூலம் அரசு எந்திரம் வேகமாக செயல்படத் தொடங்கும்.
வருவாய்த் துறையின் குளறுபடிகளால் பொதுமக்கள் அடையும் பாதிப்புகள் 95% குறைந்து விடும். தற்போதைய நில உரிமையாளர்கள் யார்? பட்டா பெயர் மாறுதல், தவறுதல்கள், திருத்தங்கள் களையப்பட்டு விடும். இதனால் ஏற்கனவே UDR திருத்தம், பட்டா திருத்தத்திற்கு அளிக்கப்பட்ட மனுக்கள் தீர்வை நோக்கி நகரும்.
அரசின் நிதி உதவிகள், மானியங்கள், சரியான ஆட்களுக்கு கிடைக்கும். சர்வே தொடர்பான வேலித் தகராறுகளுக்கான களப்பணி எளிமையாகி விடும் என்பதால், பெரிய அளவில் மக்களுக்கும் அரசு அலுவலகத்திற்கும் அலைச்சலும், கால தாமதங்களும் இருக்காது.
குறைகள் களையப்பட்ட புதிய சர்வே, ஆன்லைனில் ஏற்றப்படும் போது, மக்கள் அனைவரும் தங்களுடைய பட்டா பெயர் மாற்ற கோரிக்கைகளை இணையம் மூலமே மனு செய்து சீக்கிரமே இணையம் வழியே பட்டா பெயர் மாற்றங்கள் செய்து பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகி விடும்.
கோர் பேங்கிங் போல எங்கு வேண்டுமானலும் இருந்து கொண்டு பட்டா பெயர் மாற்றங்கள் செய்யக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். இதனால் பல கோடி ரூபாய்கள் கையூட்டுகளாக செலவழிப்பது போன்ற மக்கள் பணம் மிச்சமாகும்.
சொந்த நிலங்களை விட்டு விட்டு வெளிநாடுகளில், வெளியூர்களில் இருப் பவர்கள் தங்களுடைய ஆவணங்களை இணையத்தில் பார்த்து விடுவதால், ஆவண மாறுதல்களை அடிக்கடி பார்வையிட்டு தவறுகள் நடந்தால் உடனே கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் NRI சொத்துகளின் ஆவணங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யும்போது, வழக்குகள், சிக்கல்கள், அரசு விதிகளுக்கு உட்படாத நிலங்களை தற்காலிகமாக லாக் (Lock) செய்து விட்டு, நன்முறையில் இருக்கின்ற நிலங்களை சர்வே செய்து புதிய எண்களை கொடுத்து விட்டால் உண்மையாகவே தமிழகத்தில் தூய்மையான நிலங்கள் எத்தனை சதவீதம் என்று தெரிந்து விடும்.
லாக் செய்யப்பட்ட சர்வேக்களில் உள்ள அரசு விதி மீறல்கள், போலி ஆவணங்கள், நில மோசடிகள் RDO நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடத்தி உண்மை உரிமையாளர்களை ஆவணப் படுத்தலாம். புதிய சர்வேக்கு பிறகு, போலி நில ஆவணங்கள் மோசடியில் பெருமளவு குறையும்.
தொழில் செய்யும் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள் பெரிய அளவில் நிலங்கள் வாங்கும் பொழுது லாக் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை தவிர்த்து பிற நிலங்களை வாங்க விரும்புவர்.
பழைய சர்வே செய்யும் போது DC நிலங்கள், பஞ்சம நிலங்கள் பூதான நிலங்கள் பற்றிய போதிய விழிப்பு ணர்வும் அறிவும் ஒடுக்கப்பட்ட மக்கள் இடையே போதுமானதாக இல்லை. 5 சென்ட் வீட்டுமனையை அளந்தாலும் நிலத்தை சுற்றி உள்ள வர்களின் அனைவரையும் நிற்க வைத்து அவர்கள் முன்தான் சர்வே செய்து ஆவணங்களில் குறிப்பிடுவர்.
ஆனால் 1985 -ல் தமிழகம் முழுக்க சர்வே செய்த போது ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக் களின் நிலங்களை அவர் களின் கருத்தைப் பெறாமல் UDRல் பொது நிலங்களாக வகைப்படுத்தி பதிவு செய்து விட்டனர்.
எனவே இப்போது அனைத்து மக்களையும் உள்ளடக்கி நிலங்களை மீண்டும் சர்வே செய்யும் போது நிலத்திற்கும் சமூகநீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்.
புதிதாக சர்வே செய்யும் போதே அங்கீகாரத் துறையுடன் ஒருங்கிணைந்து தமிழகம் முழுதிற்குமான மாஸ்டர் பிளான் தயாரிக்கலாம்.
எது கிரீன் சோன் (Zone), எது பிளான் சோன், எது yellow Zone என தரம் பிரிக்கலாம். பதிவுத் துறையும் கள நிலத்திற்கு ஏற்றவாறு வழிகாட்டி மதிப்புகளை சர்வே செய்யும் நிலங்க ளுக்கு வைக்கலாம்.
– சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
(81108 72672)