Saturday, July 24, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

வெண்டை – 90 நாட்களில் அறுவடை

தோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல் அவசியம். வெண்டையில் பல வகைள் உண்டு, அவை கோ 2. எம்டியு 1 அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராத்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உட்கார் ஆகியவையாகும்.

கோ .பி.எச். 1

- Advertisement -

இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4-இன் இனக் கலப்பு காய் அடர் பச்சை, இளம் குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். மகசூல் ஹெக்டேருக்கு 22 டன்.

கோ 1 (1976)

இது ஹைதராபாத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வகை. காய் இளம் சிவப்பு நிறம் கொண்டது. தொன்னூறாம் நாளில் ஹெக்டேருக்கு 12 டன் விளைச்சல் கிடைக்கும்.

கோ 2 (1987)

இது ஏ.ஈ. 180, பூசா சவானியன் இனக் கலப்பு வாடிக்கையாளர்கள் விரும்பும் வகை சந்தைக்கு சிறந்தது. மகசூல் தொன்னூறு நாட்களில் 15-16 டன்.

கோ 3 (1991)

இது பிரபானி கராந்தி மற்றும் எம்டியூன் இனக் கலப்பு: மகசூல் 16-18 டன்/எக்டர்.

வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பகுதிகளிலும் வெண்டை தல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா மண் வகை நிலத்திலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். 

மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப் பாத்திகள் (பார்சால்) அமைக்க வேண்டும்.

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின் விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும்.

நிழலில் ஆற வைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செமீ, இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செமீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

Also read: துளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்?

விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அடி உரமாக 20 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும்.

விதைத்த 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்கரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம்.

மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீ ர் கட்டுவது மிகவும் அவசியமாகும். ஒரு சதவீத பூரியா கரைசலை விதைத்து 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை இலைவழி ஊட்டம் ஆக தெளிக்க வேண்டும்

மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைக்க 30, 45 மற்றும் 6)- ஆவது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம். களைகள் முளைக்கும் முன் விதைக்க மூன்றாம் நாள் ஹேக்டேருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த 30-ஆம் நாள், ஒரு கைக்களை எடுக்க வேண்டும். கலப்பு ரகங்களுக்கு ஊட்டச் சத்தின் அளவு தழை மணி, சாம்பல் சத்து முறையே வேண்டும். பிறகு, ஹெக்டேருக்கு வெண்டை விதையை 200:100:100கிகி ஆகும். இதில் 75 மணிச்சத்தை (75 கிகி மணிச்சத்து 469 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடி உரமாக அளிக்க வேண்டும்.

மீதமுள்ள தழை, மணி, சாம்பல் சத்து 200:25:100 கிகி உரப் பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப் பாசனம் அளிக்க வேண்டும் பயிரின் ஆயுள்காலம் முழுவதும் 3 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் அளிக்க வேண்டும்.

வெண்டையில் காய்த் துளைப்பான் தாக்குதல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விடவேண்டும்

ஹெக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நிற வண்டைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி, குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இட வேண்டும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது உரத்துடன் கலந்து இட வேண்டும்.

Also read:அதிக லாபம் தரும் துவரை

அசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத் தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் மஞ்சள் நரம்புத் தேமல் நோய் வெண்டையைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும்.

இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது. இப் பச்சியை கட்டுப்படுத்த 2 மில்லி வேம்பு எண்ணையை, ஒரு லிட்டர் தண்ணிருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும்.

பார்பானி கிராந்தி அர்கா அனாமிகா, அர்கா அபஹாப் போன்ற வகைகள் இந்நோயைத் தாங்கி வளரக் கூடியவை. சாம்பல் நோய் என்பதும், வெண்டையை தாக்கும் நோயாகும் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

விதைத்த 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விட வேண்டும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 12-15 டன் வெண்டைக் காய்கள் கிடைக்கும் வெண்டைக்காய் பயிரை நடப்பு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

– மோனா

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.