Saturday, June 12, 2021

இதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது?

இதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...

Latest Posts

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்!

வயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை.
இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப் பங்கேற்கிறது.
இத்திட்டத்திற்கான தேவை
சனவரி 2016 முதல் விக்கி மூலம் (விக்கிசோர்ஸ்) தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டதின் மூலம் இதுவரை 2090 நூல்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.
இதன் மூலம் 22 ஜனவரி 2019 வரை கிட்டத்தட்ட 9588 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 70 நூல்கள் விக்கி மூலத்தில் கட்டற்ற முறையில் அனைவரும் படிக்க பதிப்பிப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நிறைய புத்தகங்கள் மெய்ப்பு செய்ய அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளன. .
கணியம் அறக்கட்டளையின் தெரிவிப்பு
இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டிற்கும் விக்கிசோர்ஸ், விக்கிப்பீடியா முதலிய தளங்களை செயல்படுத்தி வரும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
திட்டம் செயற்படும் விவரம்
மெய்ப்புப் பார்க்கும் பணியானது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல் நிலையில் மெய்ப்புப் பணி முடிந்த பிறகு, அப்பக்கம் மஞ்சளாக மாற்றப்படும். இரண்டாம் நிலை சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு அப்பக்கம் பச்சையாக மாற்றப்படும். இந்த இரண்டு பணிகளும், வெவ்வேறு திறனாளர்களால் செய்யப்பட வேண்டும். மேலும், மெய்ப்புத் தரத்தை உறுதி செய்ய, தன்னார்வ விக்கிப் பங்களிப்பாளர் ஒருவர், சரி பார்த்து, பக்கங்களை ஒருங்கிணைவு (transclusion)செய்வார்.
பணி விதிகள்
கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிப்போர் kaniyam  என்று முடியுமாறு பயனர் பெயர் ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.
{{கட்டணத் தொகுப்பு|அமர்த்துநர்=[http://www.kaniyam.com/foundation/கணியம் அறக்கட்டளை]| userbox=yes}}  – இந்த வார்ப்புருவை அனைவரும் தங்களது பயனர் பக்கத்தில் பதிவிட வேண்டும்.
தங்களுக்கு வேறு தன்னார்வ கணக்கு இருந்தால் அதன் விவரங்களையும் இப்பேச்சு பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இதனை தெரிவிக்க கீழ்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தலாம்
{{பயனர் மாற்று கணக்கு|தங்களின் தன்னார்வ பயனர் பெயர்}}

இது முழு நேர சம்பளப் பணி கிடையாது. ஒவ்வொரு நூலும் வெளியிடப்படும் அடிப்படையில் பகுதி நேர வாய்ப்பு மட்டுமே. எந்தப் பயனர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை கணியம் அறக்கட்டளை முடிவு செய்யும். அவ்வப்போது கணியம் அறக்கட்டளை அறிவிக்கும் நெறிமுறைகளை, இத்திட்டத்தின் கீழ் பங்கு அளிப்பவர்கள் கடைபிடித்து வர வேண்டும்.
மெய்ப்பு அட்டவணை மேம்பாடு
ஒவ்வொரு மெய்ப்பு அட்டவணையும், இரண்டு நிலைகளில் மேம்படுத்தப்பட்டு மின்னூல் வடிவங்களாக மாற்றப்படடும். முதல் நிலையில் மெய்ப்பு பார்க்கப் பட்டவை என்பதை ஒரு பயனர் குறிக்க வேண்டும். இரண்டாம் நிலையில், சரிபார்க்கப்பட்டவை என்பதை மற்றொரு பயனர் குறிக்க வேண்டும்.
முதல் நிலை மெய்ப்பு வழிகாட்டுதல்கள்
இத்திட்டத்தின் கீழ் மெய்ப்பு செய்ய இணைபவர், இக்கருவி காட்டும் நூல்களில் ஒன்றினை, முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், மெய்ப்பு தொடங்கும் முன் அதன் விவரங்களை இப்பக்கத்தில் முன்பதிவிட வேண்டும். கணியம் அறக்கட்டளை, சில முன்னுரிமைகளை கருதி, சில நூல்களை முதலில் மெய்ப்பு செய்ய பரிந்து உரைக்கவும் வாய்ப்பு உள்ளது.
முதல்நிலை மெய்ப்பு செய்பவர், அந்நூலின் மேலடி, கீழடி, எழுத்துப் பிழைகள், வடிவமைப்பிற்கான வார்ப்புரு இடல், (font size, bold, italic, alignment, quotation mark, placing required templates, etc)  முதலியவைகளை, அறக்கட்டளையின் வழிகாட்டுதல்படி செய்ய வேண்டும். இரண்டாம் நிலை சரி பார்ப்பவர், பார்த்துக் கொள்வார் என்று கருதாமல், அனைத்து பணிகளையும் செய்த பிறகே, இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து, மஞ்சள் நிறத்திற்கு மாற்ற வேண்டும்.
இரண்டாம் நிலை சரிபார்ப்பு வழிகாட்டுதல்கள்
முதல் நிலை முடிந்த நூல்களை, இரண்டாம் நிலையில் சரிபார்ப்பவர், கணியம் அறக்கட்டளையின் வழிகாட்டுதலோடு, ஒரு நூலை தேர்ந்தெடுத்து இப்பக்கத்தில் முன்பதிவிட வேண்டும்.
முதல் நிலை மெய்ப்பு முடித்த பக்கங்களில், சிற்சில தவறுகள் இருந்தால், அதனை சரி செய்து விட்டு மஞ்சள் நிறத்திலிருந்து, பச்சை நிறத்திற்கு மாற்ற வேண்டும்.

விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள் என்ற பக்கத்தில், இத்திட்டத்தில் இணைந்து உள்ளவர்களின் பணிகளை, விரிவாகக் காணலாம்.

Abirami kaniyam, Divya kaniyam, Booklover kaniyam, Roopa – kaniyam, Shobia kaniyam, arun kaniyam, Athithya kaniyam, தகவலுழவன், Balabarathi kaniyam, Sasi kaniyam, Deepa arul kaniyam, Kumaran kaniyam, Muthulakshmi kaniyam, Monika kaniyam, Kaleeswari kaniyam, Ramesh kaniyam, Iswarya kaniyam

மேற்கூறிய படிநிலைகள் மூலம் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டநூல்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன. இக்கணியம் திட்டம் குறித்த தகவல்களை பின்வரும் தொடர்பில், கேட்டு அறியலாம். [email protected]
ளீணீஸீவீஹ்ணீனீயீஷீuஸீபீணீtவீஷீஸீ@ரீனீணீவீறீ.நீஷீனமின்னஞ்சல் அனுப்பலாம்.
தமிழ் விக்கிமீடியப் பங்களிப்பாளர்களில் ஒருவரான, திரு.சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

– மலர்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்!

வயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...

Don't Miss

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

உன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..!

தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன? மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன? என் திறமைகள் என்ன?; என்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.