உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் தொழில்களில் முதலிடம் பெறுவது எலக்ட்ரானிக் கேட்ஜட் உற்பத்தி மற்றும் விற்பனை. அவற்றைச் சார்ந்த சிறு தொழில்களும் சொல்லத் தக்க அளவு வளர்ச்சி அடைந்து வருகின்றன.
அது போன்ற ஒரு தொழில் வாய்ப்புதான் ஸ்மார்ட்ஃபோன் டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பு. உலகெங்கும் ஸ்மார்ட்ஃபோன் சந்தை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
Also read: விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும் 3டி ஹோலோகிராம் ஃபேன்
இந்திய சந்தையில் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் 32 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (IDC) தெரிவிக்கிறது. புதுப் புது தொழில் நுட்பங்களின் வருகையால் புதுப்புது வகையான ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை தடுக்க முடியாதபடி அதிகரித்து இருப்பதால் டெம்பர்ட் கிளாஸ் தேவையும் அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு டெம்பர்ட் கிளாஸ்கள் குறிப்பிட்ட உயர் வெப்ப நிலையில் தயாரிக்கப்படுகின்றன. இதன் கடினத் தன்மைக்காக கிளாஸ் வெப்பம் ஊட்டப் பட்டு உடனே விரைவாக குளிரூட்டப் படுகிறது. பின்பு டெம்பர்ட் கிளாசின் தரச்சோதனைக்காக கடினத் தன்மையும் உடையும் தன்மையும் பரிசோதிக்கப்பட்டு சேதமடைந்த யுனிட்கள் விலக்கப் படுகின்றன.
மொபைல் ஃபோன்கள் மட்டும் இல்லாமல், சில டேப்லட், எம்பி3 டிவைஸ் களுக்கும் டெம்பர்ட் கிளாஸ்கள் தயாரிக்கப் படுகின்றன. ஸ்மார்ட் டிவைஸ்களின் டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பில் முக்கிய மூலப் பொருளான திரையுடன் ஒட்டிக்கொள்ள உதவும் பசையை சந்தையில் தரமானதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
முதலீடு:
சாதாரண வகை டெம்பர்ட் கிளாஸ் தயாரிக்கும் மெஷின் 50ஆயிரம் முதல் 1லட்ச ரூபாய் வரை ஆகும். ஆரம்பிக்கும் போது குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து, உற்சாகமான விற்ப்பனை உத்திகள் மூலம் வியாபரத்தை அதிகப்படுத்தி பின்பு பெரிய தொழிலாக மாற்ற முடியும்.
Also read: தொழில் ஆலோசனை: சத்து மிக்க, தீங்கு அற்ற இடை உணவுகளுக்கு வாய்ப்பு
விற்பனை:
விளம்பரங்களுக்கும், ஆன்லைனிலும் சிறிது தொடக்க முதலீடு செய்து இத்தொழிலை தொடங்கி டெம்பர்ட் கிளாஸ் தயாரித்து, அருகாமை ஃபோன் கடைகள் மூலமும், ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம். ஆந்திரா, குண்டூரில் உள்ள நெக்ஸ்ட் கியர் டெக்னாலஜிஸ், டெல்லியில் உள்ள ஏஇசட் இன்ஃபோலிங் பிரைவேட் லிமிடெட், தெலுங்கானாவில் உள்ள சுசீட்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்கான எந்திரங்களைத் தயாரிக்கின்றன. இணையத்தில் இதைப்பற்றிய செய்திகள் நிறைய இருக்கின்றன.
– எம்எம். பிரபு