ஒரு விலைப் பட்டியலை கணினி மூலம் உருவாக்குவதற்கு மின்னணு விலைப் பட்டியல் அல்லது எலக்ட்ரானிக் இன்வாய்சிங் என்று பெயர். எல்லா வணிகர்களும் பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தி விலைப் பட்டியல் உருவாக்குகின்றனர். அதில் உள்ள விவரம் மாதாந்திர GSTR -1 வரிப் படிவம் தயாரிக்கும் போது கையால் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த தகவல்கள் GSTR -1 ஏ வரிப் படிவத்தில் எதிரொலிக்கும். இதை பார்க்க மட்டுமே முடியும். இந்த விலைப் பட்டியலுக்கான இ-வே பில் தயாரிக்க பொருளை அனுப்புபவர் (அ) போக்குவரத்து நிறுவனம் எக்சல் (அ) JSON மூலம் கையால் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த முறையை எளிமையாக்க 35வது GST கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுபடி மின்னணு விலைப் பட்டியல் முறையை (B 2B ) 01/04/2020 முதல் நடைமுறைப் படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ரூ.500 கோடியும் அதற்கு மேலும், மொத்த வருமானம் உடைய வணிகர்களுக்கு பதிவு செய்யப்படாத B 2C விற்பனை செய்யும் போது QR கோடு இருக்கும். ஆண்டுக்கு ரூ. 100 கோடியும் அதற்கு மேலும், மொத்த வருமானம் உடைய வணிகர்களுக்கு கண்டிப்பாகவும், மற்ற தன்னர்வ அடிப்படையில் மின்னணு விலைப் பட்டியல் நடைமுறைப் படுத்துபவர்களுக்கு உடனடியாகவும், மற்ற வரி செலுத்துபவர்களுக்கு பின்னரும் இந்த விதி நடைமுறைப் படுத்தப்படும். மின்னணு விலைப் பட்டியல் தயாரிக்க குறைந்தபட்ச மதிப்பாக ரூ. 1000/- முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பயன்கள்:
ஒரு மென்பொருளால் தயாரிக்கப்பட்ட விலைப் பட்டியல், இன்னொரு மென்பொருளால் படிக்க முடியும்.
தகவல் உள்ளீடு பிழைகள் குறைக்க முடியும்.
சப்ளையர் தயாரிக்கும் மின்னணு விலைப் பட்டியல் நிகழ் நேர அடிப்படையில் இயக்கப்படுவதால், உள்ளீட்டு வரி உடனடியாக கிடைக்கும்.
வலைதளத்தில் விவரங்கள் உடனடியாக கிடைப்பதால், வரி அதிகாரிகளின் சர்வே குறையும்.
பொருந்தாத பிழைகள் குறையும். தகவல் ஒத்துபோகிறதா (Re onciliation) என்று பார்க்க வேண்டிய தேவை இருக்காது.
ஒரு வணிகத்தின் எல்லா விவரங்களும் இருப்பதால் வரிப்படிவம் பூர்த்தி செய்ய எளிதாக இருக்கும்.
Also read: சரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா?
மின்னணு விலைப் பட்டியல் செயல்படுத்தும் முறை:
மின்னணு விலைப் பட்டியலை உருவாக்க கீழ்க்கண்ட முறையை பயன்படுத்த வேண்டும். வரி செலுத்துபவர் றிணிறிறிளிலி (PEPPOL (PAN EUROPEAN PUBLIC PROCUREMENT ONLINE ) தரத்தின் படி, தன்னுடைய மென்பொருளைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இது உலக அளவிலான வணிகத்தை ஆதரிக்கும் சிறப்பு கொண்ட வலைதளம் ஆகும். மென்பொருள் சேவை வழங்குபவரை தொடர்புகொண்டு விலைப் பட்டியல் தொகுப்பை இணைக்க வேண்டும்.
பல விலைப் பட்டியலுக்கான ஜெசான்(JSON) ஃபைலை ஒன்றாக உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். வேறு மென்பொருளை பயன்படுத்துபவர்களுக்கு இணைய இணைப்பு இல்லாத கருவி (ஆஃப்லைன் டூல்) வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ. 1.50 கோடிக்கு கீழ் மொத்த வருமானம் கொண்ட சிறிய வணிகர்களுக்கு GSTN உடன் இணைக்கப்பட்டுள்ள எட்டு வெவ்வேறு கணக்கியல் மற்றும் விலைப் பட்டியல் உருவாக்கும் மென்பொருள்களில் இருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். இது சிறு வியாபாரிகளுக்கு இலவசமாக அவர்களுடைய கணினியில் நிறுவப்படும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கருவியாக இரண்டிலும் கிடைக்கும்.
இதற்கு பின், வரி செலுத்துபவர் இந்த மென்பொருளை பயன்படுத்தி சாதாரண விலைப் பட்டியல் கூட தயாரிக்கலாம். விலைப் பட்டியல் தயாரிக்க பெறுபவரின் பெயர், முகவரி, ஜிஎஸ்டி எண், பொருள் பற்றிய விவரம், விலை, மொத்த மதிப்பு, வரிவிகிதம், வரியின் மதிப்பு ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும்.
விலைப் பட்டியலில் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய விவரங்களை ஜெசான் ஃபைலை பயன்படுத்தி ஐஆர்பியில் பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த விவரத்தை நேரடியாகவோ, ஜிஎஸ்பி -களாகவோ(GSP), ஏபிஐ -யாகவோ(API) (அ) மென்பொருள் வழங்குபவர் மூலமாகவோ செய்யலாம்.
ஐஆர்பி -யை இணையம், API, YEMYEMYES, மொபைல், ஆஃப்லைன் டூல், ஜிஎஸ்பி ஆகியவற்றின் வழியாக தொடர்பு கொள்ளலாம்.
ஐஆர்பி, பி2பி விலைப் பட்டியலில் உள்ள முக்கிய விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்க்கும். பின்பு, ஏற்கனவே அந்த விலைப் பட்டியல் உருவாகி (டுப்ளிகேஷன்)இருக்கிறதா என்று சோதனை செய்யும். அதன்பின் அந்த விலைப் பட்டியலுக்கு ஒரு குறிப்பு எண்ணை தெரிவிக்கும்(IRN).
வரி செலுத்துபவர் ஏற்கனவே அந்த குறிப்பு எண்ணை உருவாக்கி இருந்தால் கூட, ஐஆர்பியில் பதிவு செய்தபின் மட்டுமே, விலைப் பட்டியல் செல்லுபடியாகும்.
ஐஆர்பி பணி:
மேற்கண்ட நடவடிக்கைகள் முடிந்தவுடன் ஐஆர்பி கீழ்க்கண்ட பணிகளை செயல்படுத்தும்.
குறிப்பு எண்ணை உருவாக்கும்.
விலைப் பட்டியலில் டிஜிட்டல் முறையில் கையெழுத்து இடும்.
சப்ளையருக்கு வெளியீடு ஜெசான்(json) ஃபைலில் QR குறியீட்டை உருவாக்கும்.
மின் விலைப் பட்டியல் உருவானதை பொருள் பெறுபவரின் இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பும். இதற்கு அவருடைய இமெயில் முகவரியை மின் விலைப் பட்டியலில் குறிப்பிட வேண்டும்.
மின் விலைப் பட்டியல் விவரத்தை ஜிஎஸ்டி போர்ட்டலுக்கு வரிப் படிவம் (ரிட்டர்ன்) தயாரிக்க அனுப்பி பில் தயாரிக்க உதவி புரியும்.
புதிய வரி படிவத்தில் உள்ள விற்பனையாளரின் Annexure -I மற்றும் வாங்குபவரின் Annexure -II ஆகியவை தொடர்பு உடைய வரிக்கான காலத்தில் தானாக பூர்த்தி செய்து கொள்ளும். இதனால், வரி செலுத்துபவர் செலுத்த வேண்டியது எவ்வளவு என்பது தெளிவாக தெரியும்.
Also read: சந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்!
ஐஆர்பிக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:
ஐஆர்பிக்கு சப்ளையரின் விலைப் பட்டியல், கிரெடிட் நோட், டெபிட் நோட் மற்றும் இதர ஆவணங்களை அளித்தால் தான் விலைப் பட்டியல் தயாரிக்க வசதியாக இருக்கும்.
மின் விலைப் பட்டியலை வரி செலுத்துபவர் எப்போதும் போல் அவருடைய நிறுவன முத்திரையுடன் அச்சிடலாம். ஆனால், ஐஆர்பி மின்னணு வடிவத்தில் அச்சிட கட்டாயப்படுத்தப் படுகிறது.
மின் விலைப் பட்டியலை ஜிஎஸ்டி போரட்டலிலோ, இ-இன்வாய்ஸ் போரட்டலிலோ, ஐஆர்பி போரட்டலிலோ உருவாக்க வேண்டியது இல்லை. வரி செலுத்துபவரில் கணினியிலே உருவாக்கலாம்.
ஏற்றுமதி செய்யும் பொருளுக்கும் விலைப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
மின் விலைப் பட்டியல் தயாரித்தாலும் இ-வே பில் கண்டிப்பாக தயாரிக்க வேண்டும்.
பொருள்/சேவை வழங்குபவர் அனைவருக்கும் ஒரே மாதிரியான விலைப் பட்டியல் பயன்படுத்தப் படும்…
சு. செந்தமிழ்ச்செல்வன்