Wednesday, November 25, 2020

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

Latest Posts

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

சிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி?

பொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். "இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ! என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...

வெண்டை – 90 நாட்களில் அறுவடை

தோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...

சரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா?

முன்னணி மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனம் நான்கு நாள்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. வியாபார மந்த நிலை காரணமாக ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நான்கு நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

முன்னதாக டிவிஎஸ் லூகாஸ் நிறுவனம் ஏற்கெனவே சில நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்து இருந்த நிலையில், குறிப்பிட்ட மூன்று பிரிவுகளைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 16, 17 ஆகிய நாட்களை வேலையில்லா நாள்களாக அறிவித்தது. டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கமான டிவிஎஸ் லூகாஸ், மோட்டார் வாகனங்களுக்கான எலெக்ட்ரிக் கருவிகளைத் தயாரித்து வருகிறது.

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரை, 8 முதல் 14 நாள்கள் தங்களது தொழிற்கூடங்களை மூடுவதாக அறிவித்ததுது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 8 நாள்களும், மாருதி சுசுகி 3 நாள்களும், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் 8 நாள்களும், அசோக் லேலண்ட் நிறுவனம் 9 நாள்களும், போஸ்ச் நிறுவனம் 10 நாள்களும், ஜம்மா ஆட்டோ நிறுவனம் 20 நாள்களும் மற்றும் வாப்கோ நிறுவனம் 19 நாள்களும் தங்களது தொழிற்கூடங்களை முடுவதாக அறிவித்து மூடின.

ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் ஐந்து இடங்களில் தொழிற்கூடங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஆறாவதாக ஒரு தொழிற்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஹீரோ நிறுவனத்தின் விற்பனை குறைந்து உள்ளது. வியாபார மந்த நிலை காரணமாக தொடர்ந்து முன்னணி நிறுவனங்கள் வேலை நாள்களை குறைத்து வருவதால் ஊழியர்களுக்கும் நேரடி மற்றும் மறைமுக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு ஜூலை மாதத்துக்கான உள்நாட்டு வாகன விற்பனை குறித்த விவரங்களை அண்மையில் வெளியிட்டு இருந்தது.
அதில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் 18.88 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 2018 ஜூலையில் 11,51,324 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 9,33,996 ஆகக் குறைந்து உள்ளது. ஒட்டு மொத்த இரு சக்கர வாகன விற்பனையில் 16.82 சதவிகித சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் கார், வர்த்தக வாகனங்கள் என அனைத்து ஆட்டோமொபைல் விற்பனையும் பெரும் சரிவைச் சந்தித்து உள்ளது.
வாகன உற்பத்திக்கான செலவுகள் அதிகரிப்பு, உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான வரி உயர்வு, அதிக ஜிஎஸ்டி போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வாகனத் துறை, விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Also read:எதிலெல்லாம் முதலீடு செய்யக் கூடாது?

அதன் தொடர்ச்சியாகவே டிவிஎஸ் லூகாஸ் நிறுவனத்தின் வேலை நாட்கள் குறைப்பு ஏற்பட்டு உள்ளது. வியாபார நிலைமை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இது குறித்து ஊழியர்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயிரக் கணக்கானோர் பணியாற்றும் சென்னையின் முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனம் வேலை நாட்களைக் குறைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மற்ற நிறுவனங்களுக்கும் தொடருமோ என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட, தொழில் வளர்ச்சி பெறும் நாட்டில் மோட்டார் வாகன சந்தை வீழ்ச்சியை நோக்கி செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இது பற்றி பொருளாதார வல்லுநர் திரு. ஜெ. ஜெயரஞ்சன், கூறியபோது,
”விற்பனையை ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுவர், அல்லது இந்த காலாண்டை இதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுவர். இப்படிப் பார்க்கும் போது கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது மோட்டார் வாகன விற்பனை குறைந்து உள்ளது. அதிலும் கடந்த 15 லிருந்து 20 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதையே வியாபார மந்த நிலை என்று கூறுகிறார்கள். மோட்டார் வாகன உற்பத்தித் துறை மட்டுமல்ல பல துறைகளும் தற்போது வீழ்ச்சி அடைந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அந்த வீழ்ச்சியின் அளவு வேறுபடுகிறது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள், அதற்கு பின் குறைந்த விலை கார்கள், அதிக விலை கார்கள், லாரி, பேருந்து, டிராக்டர் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மோட்டார் வாகன உற்பத்தித் துறை. இதில் உள்ள ஒவ்வொரு வாகனப் பிரிவுகளும் ஒவ்வொரு துறைகளை முதன்மைப் படுத்துகின்றன.

சான்றாக டிராக்டர் உற்பத்தியில் மந்த நிலை ஏற்படுகிறது என்றால் கிராமப் புறங்கள் நன்றாக இல்லை என்று பொருள். விவசாயம் செழிப்பாக இல்லை என்றால் டிராக்டர்கள் வாங்குவது குறைந்து போகும். கிராமப் புற, நகர்ப் புறங்களைச் சார்ந்த கீழ் நடுத்தர வகுப்பினரிடம் வேலை வாய்ப்பு, பணப் புழக்கம் இல்லை என்றால் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இருக்காது.
உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் குறைகிறது என்றால் கார்கள் விற்பனை குறைந்து விடும். புதிய தொழில் தொடங்கப்படவில்லை என்றால், தொழிலுக்கான முதலீடுகள் குறைந்து போனால் சரக்கு போக்கு வரத்துக்கான லாரிகள் விற்பனை குறைந்து போகும். ஆக ஒட்டு மொத்தமாக மோட்டார் வாகன உற்பத்தித் துறையின் வியாபாரம் மந்த நிலையை அடைந்ததற்கு காரணம், அனைத்து தரப்பிலும் பணப் புழக்கம் இல்லை, பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து உள்ளது.

இந்தத் துறையில் உள்ள சுமார் பத்து நிறுவனங்கள் சில நாள்கள் தொழிற்கூடங்களை மூடுவதால், அவற்றைச் சார்ந்து உள்ள நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கு பின்னாலும் ஆயிரம் சிறிய நிறுவனங்கள் உள்ளன.

சான்றுக்கு ஒரு பிரபல நிறுவனம் கார் தயாரிக்கிறது என்றால், முழு காரையும் அந்த நிறுவனம் தயாரிப்பது இல்லை. காரில் உள்ள உதிரி பாகங்கள் அனைத்தும் தனித்தனி நிறுவனங்களில் தயாராகி பெரிய நிறுவனத்திற்கு வரும். அதாவது ஒரு நிறுவனம் காரின் டயரை மட்டும் தயாரிக்கும், இன்னொரு நிறுவனம் பிரேக்கை மட்டும் தயாரிக்கும், மற்றொரு நிறுவனம் எலெக்ட்ரிக் பாகங்களை தயாரித்து அனுப்பும். காருக்கு தேவையான இரும்பு தகடுகள் ஒரு தொழிற்சாலையில் தயாராகும். அந்த இரும்பு வேறு ஒரு ஆலையில் இருந்து வரும்.
பெரிய நிறுவனம் அந்த பாகங்களை எல்லாம் சேர்த்து காரை உருவாக்கும். இந்நிறுவனம் சில நாள்கள் தொழிற்கூடத்தை மூடினால் அதற்கு பாகங்களை விநியோகிக்கும் ஆயிரம் நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்த வேண்டும். அந்த நிறுவன ஊழியர்களும் குடும்பங்களும் வேலையிழப்பை சந்திக்க வேண்டி வரும்.

Also read:சீனாவிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

இத்தகைய ஆலை மூடலால் ஏற்படும் இழப்பு ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இந்த தற்காலிக வேலை இழப்பால் பாதிக்கப்படும் லட்சக் கணக்கான குடும்பங்களின் வருவாய் பறி போகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களின் வியாபாரம் மந்த நிலையை அடையும். அதனால் அதை நம்பி உள்ள நிறுவனங்கள், அதைச் சார்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்கு நிரந்தர வேலை இழப்பு ஏற்படும். இதற்கு மல்டிபிளையர் என்று பெயர். அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுகளில் ஒன்றை அடித்தால் ஒன்று மற்றொன்றை அடித்து சாய்த்துக் கொண்டே போகுமே அப்படியானது இது.
அப்படியானால் ஒட்டு மொத்தமாக அத்தனை தரப்பையும் பதம் பார்த்து விடுமா இந்த வியாபார மந்த நிலை?
இல்லை. அதைத் தடுக்க வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு சரிந்து கொண்டே வரும் சீட்டுக் கட்டில் இடையில் இரண்டு சீட்டுகளை உருவி விட்டால் போதும், பின்னால் உள்ள சீட்டுகள் விழாமல் தடுக்கலாம். அதைப் போல் வியாபார மந்த நிலையைப் போக்க நிறுவனங்களுக்கு அரசு, வங்கிகள் மூலமாக நிதியை அளிக்க வேண்டும். மேலும் இந்த வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த மந்த நிலையை குறைக்கலாம்.

மிக முக்கியமாக கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும், அரசு அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிராமப் புறங்களில் தேக்க நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்தமாக நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கும். வாங்கும் திறன் அதிகரித்தால்தானே சந்தையில் விற்பனை இருக்கும். அதை விடுத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு சலுகைகள் அளித்தாலும் அவர்கள் தொழில் தொடங்க முன்வர மாட்டார்கள். தங்கள் பொருள்களை விற்க முடியா விட்டால் எப்படி வருவார்கள்? வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தா விட்டால் இந்த சீட்டுக்கட்டு சரிவதை நிறுத்த முடியாது.” என்கிறார், திரு. ஜெயரஞ்சன்.

– எவ்வி

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

சிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி?

பொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். "இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ! என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...

வெண்டை – 90 நாட்களில் அறுவடை

தோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...

Don't Miss

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

வாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்!

இன்றைக்கு கட்டடங்களுக்கான அடிப்படை வரைபடங்களை வரைந்து தரும் கட்டட வரைகலைஞர்களுக்கும், கட்டுமான பொறியாளர்களுக்கும் பெரும் சிக்கலை எற்படுத்திக் கொண்டு இருப்பது, வாஸ்து நம்பிக்கை. வாஸ்துவைப் பற்றிக் கவலை வேண்டாம் உலக அளவில் வளர்ந்து வரும் ஆர்க்கிடெக்சர்...

மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி?

இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.