Latest Posts

சிறிய அளவிலும் முன்பருவ பள்ளிகளை நடத்தலாம்

- Advertisement -

சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி உள்ளது. அப்பள்ளியை தொடங்கி, தொடர்ந்து இருபத்து ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார், திரு. வெற்றிச்செழியன். அவரிடம், பள்ளி நடத்துவது ஒரு தொழிலாக அவருக்கு உரிய வருமானத்தைப் பெற்றுத் தருகிறதா என்று கேட்டபொழுது,

“எனது சொந்த ஊர் கோயில்பட்டி அருகே உள்ள காமநாயக்கம்பட்டி. என் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தம்பி. நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாமக்கல், சேலம் பகுதிகளில்தான். ஏனென்றால் அப்பா செயல் அலுவலராக (Executive officer) பணியாற்றினார். அவருக்கு அடிக்கடி பணியில் இடமாற்றம் நிகழும். அதனால், இடம் மாறிக் கொண்டே இருந்தோம்.

10 ஆம் வகுப்பு வரை சேலத்திலும், 12ஆம் வகுப்பு மதுரையிலும் படித்தேன். இதற்கிடையில், அண்ணன் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு குன்றத்தூர் பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை வைத்திருந்தார். நானும் அவருடன் இணைந்து பலசரக்கு கடையை பார்த்துக்கொண்டேன். எப்படியாவது வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் பல தொழில்களை செய்ய தொடங்கினோம். பிறகு தம்பியும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு எங்களுடன் தொழிலுக்கு வந்தார்.

பிறகு துணி வணிகம் செய்தோம். அதாவது, தவணை முறையில் துணிகளை விற்றல். அடுத்து புக் பைண்டிங், பொருட்களை பாக்கெட் செய்து விற்பது, பஜ்ஜி கடை, இனிப்பகம், விறகு கடை முதலிய தொழில்களை செய்து வந்தோம். இவற்றிற்கிடையில், தொலைதூர கல்வி முறையில் நான் பட்டப்படிப்புகளை படித்தேன். என்னை தொடர்ந்து அண்ணனும், தம்பியும் படித்தார்கள். பிறகு தோட்டக்கலை வடிவமைப்பு மற்றும் கட்டட வேலைக்கு ஒரு பொறியாளரிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன். படிக்கும் காலங்களில் ஆசிரியர் பணி மீது எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அதனால் அண்ணன், நான், தம்பி மூவரும் இணைந்து குன்றத்தூரில் திருவள்ளுவர் கல்வி நிலையம் ஒன்றை தொடங்கினோம்.

Also read: அன்று ஸ்கெட்ச் பேனா வாங்கக் கூட காசு இல்லாத முகிலன், இன்று ஓவியப் பேராசிரியர்!

பிறகு 1993-ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்காக திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தேன். அந்த வேளையில், இந்திய பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் சார்பில் வெள்ளி விழா கட்டுரை போட்டி நடைபெற்றது. தமிழ் மொழி, இனம், நாடு எதிர்நோக்கும் சிக்கல்களும், தீர்வுகளும் போன்ற தலைப்புகள் அப்போட்டியில் இடம்பெற்று இருந்தன.

நான் அதில் “தமிழ் மொழி, கல்வி மொழியாக எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அனுப்பினேன். தேசிய அளவில் நடைபெற்ற அப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன். பின்பு தான், தமிழ்வழிப் பள்ளிகள் பற்றியும், அவற்றின் நன்மைகள், அதில் இருக்கும் சிக்கல்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு செய்யத் தொடங்கினேன். இந்த ஆய்வுதான் தமிழ்வழிப் பள்ளி தொடங்க எனக்கு உந்துதலாகவும், உதவியாகவும் இருந்தது.

நான் மாணவனாக இருந்தபொழுது, மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கல்விப் பணி ஆற்ற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தற்போது, தாய்மொழிக் கல்வி என்பது எல்லாப் பகுதி மக்களுக்கும் அவசியமானது என்பதை உணர்ந்தேன். எனவே தான், 1994-ல் மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலமாக பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியை தொடங்கினேன்.

எங்கள் பள்ளியில் மழலைக் கல்வி முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை மொத்தம் ஏழு நிலை மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விளிம்பு நிலை குடும்பங்களில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வருபவர்கள். இத்துடன், நான் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆளுமைத் திறன், நுண்ணறிவு, மன வளம் ஆகியவை மேம்பட தனிப்பயிற்சிகள், பயிலரங்குகள், பொழிவுகள் முதலியவற்றை நடத்தி வருகிறேன். மேலும், அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று கதை சொல்லி வருகிறேன். இவைகளில் கிடைக்கும் வருமானத்தை பள்ளிக்காக செலவிடுகிறேன். இதுவரை காட்டுப் பள்ளிக்கூடம், மழலையர் மணிப் பாடல்கள், நம்பிக்கை நாற்றுகள் முதலான நூல்களை எழுதி இருக்கிறேன்.

எங்கள் பள்ளியில் தமிழை மட்டும் அல்லாமல் தமிழரின் மரபு சார் உணவு வகைகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றின் நன்மைகள் பற்றியும் விளக்கி வருகிறோம். மேலும், கடந்த 15 ஆண்டுகளாக பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து பள்ளியில் உணவுத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.

2014ஆம் ஆண்டு, எங்கள் பள்ளி உணவுத் திருவிழாவில் காட்சிப்படுத்திய உணவு களையும், தெரிந்த பிற உணவுகளையும், உணவு சார்ந்த கட்டுரைகளையும், பட்டியல்களையும் இணைத்து “நலம் தரும் நமது பண்பாட்டு உணவுகள்”(செய்முறை விளக்கக் கையேடு) என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டு உள்ளோம்.

மாணவர்களுக்கு திருக்குறளின் முதன்மையை உணர்த்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் திருக்குறள் ஓக இருக்கை கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும் என்பதற்காக அரசின் பொதுப் பாடத்திட்டத்துடன் வாழ்வியல் கல்வியையும் இணைத்து கற்பித்து வருகிறோம். மேலும் சமூகத்துடன் இணைந்து வாழ்தல், தேவைக்காக போராடுவது, சமூக வளர்ச்சிக்கு வித்திடுவது முதலிய சமூகத்திற்குத் தேவையான வற்றையும், மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம். பிறகு இசை, நடனம், நாடகம், சிலம்பம் முதலான தமிழர் கலைகளை அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

மேலும், பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டும் வருகிறேன். கடந்த மே மாதம் சிங்கப்பூரில் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது. நான் அங்கு சென்று மழலை மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு அந்நிலை மாணவர் களுக்கு எவ்வாறு கற்பிப்பது என்ற கற்பித்தல் முறைகளை அவர்களுக்கு பயிற்சி அளித்தேன்.

கல்விக்கு மையமானவர்கள் குழந்தைகள். சமூக வளர்ச்சிக்கு உதவுவது அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி. ஆகவே, அக்கல்வியை சரியான வழியில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. அனைத்து நிலை மக்களும் கல்வி நிலையங்களோ, பள்ளிக்கூடங்களோ, கல்லூரிகளோ, இதர கல்வி நிறுவனங் களையோ தொடங்கி நடத்தலாம். அவை சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் என்று எண்ணுகிறேன்.

பள்ளிகள் நிரந்தர வருமானம் அளிப்பவை. இப்போது பள்ளிகள் தொடங்குவது என்பது மிக எளிதாகிவிட்டது. சிறிய அளவில் வீடுகளிலேயே நடத்த விரும்பினால் மாண்டிசோரி, கிண்டர் கார்டன் உள்ளிட்ட முன்பருவ பள்ளிக்கூடங்கள் போதுமானவை.

Also read: புத்தகம் எழுதி பிராண்ட் மதிப்பை உயர்த்தலாம்

தொடக்கப் பள்ளியோ அல்லது உயர் கல்வி பள்ளியோ அமைக்க வேண்டுமென்றால் அதற்கு அரசு ஏற்கனவே முடிவு செய்த அளவிற்கு இடம் வேண்டும். பேரூராட்சி என்றால் ஒரு ஏக்கர், ஊராட்சி என்றால் மூன்று ஏக்கர், நகராட்சி என்றால் எட்டு மனைகள் மாவட்டத் தலைநகர் என்றால் ஆறு மனைகள், மாநகராட்சி என்றால் நான்கு மனைகள் இருக்க வேண்டும். பிறகு பள்ளிக்கூடம் அருகில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது.

வீடுகள் அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது பத்து கிலோ மீட்டர் இடைதொலைவிலோ பள்ளிகளை அமைக்கலாம். உண்டி உறைவிடப் பள்ளிகள் மிகச் சிறந்தவை. ஏனெனில், மாணவர்கள் அங்கேயே தங்கி படிக்கும்பொழுது அவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

அறிவு என்பது பாடநூலில் இருப்பவை மட்டும் இல்லை. சுற்றுப்புறத்தில் நடப்பவைகளை அறிந்துக் கொள்வதும் தான். மேலும், கூட்டாக பகிர்ந்து கற்றல், விளையாடுதல் முதலியவை அவர்களின் ஆளுமைத் திறனை வளரச் செய்கிறது. கல்வி என்பது எல்லை அற்றது. எனவே படிப்பை முடித்த இளைஞர்கள் விடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்.

இவர்களில் பெரும்பாலானோர் இணையதளங்களில் முடங்கி விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் அவர்கள் நூல்கள் வாங்கி படிக்க வேண்டும். மற்றும் நூலகங்களுக்கு செல்ல வேண்டும். இளைஞர்கள் அடையும் உயர்வு மற்றும் வளர்ச்சி என்பவை சமூகம் கொடுத்தது. அதனை மறக்காமல் இச்சமூகத்திற்கு முடிந்த தொண்டுகளை அவர்கள் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

– இளங்கதிர் யோகி

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]