Thursday, October 29, 2020

ஓவியங்களில், டிசைன்களில் பயன்படுத்தப்படும் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வோம்

ஓவியத்துக்கு அடிப்படைக் கலைக் கூறுகளாக கோடு, வடிவம், இடப்பரப்பு, வண்ணம், தகை நேர்த்தி, இழைநயம் போன்றவைகள் எவ்வாறு இன்றி அமையாதவை ஆக இருக்கின்றனவோ, அவற்றைப் போலவே, ஓவியத்தின் பண்புக் கூறுகளாக சமநிலை (பேலன்ஸ்),...

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

அன்று ஸ்கெட்ச் பேனா வாங்கக் கூட காசு இல்லாத முகிலன், இன்று ஓவியப் பேராசிரியர்!

சென்னை, போரூர் அருகே உள்ள கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரியில் ஓவியப் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார், திரு. முகிலன். அவர் ஓவியத் துறையே அவர் ஏன் தேர்ந்து எடுத்தார் என்பது குறித்தும் ஓவியம் கற்றுக் கொள்வதால் கிடைக்கும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து அவரிடம் கேட்டபோது,


”எனது சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர். நான் ஒரு விவசாயக் குடியில் பிறந்தவன். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவன். நான் சிறுவனாக இருந்தபோது ஸ்கெட்ச் பேனா வாங்குவதற்குக் கூட வீட்டில் பணம் இருக்காது. ஒரு முறை என் மாமா “இவன் நன்றாக ஓவியம் வரைகிறானே!” என்று சொல்லி ஐந்து ஸ்கெட்ச் பேனாக்களும் ஒரு நோட்டும் வாங்கிக் கொடுத்தார். ஒரே இரவுக்குள் அந்த நோட்டு முழுவதையும் வரைந்து முடித்து விட்டேன். அந்த அளவிற்கு ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன்.


மதுரையில் உள்ள ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொருளியல் எடுத்து படித்தேன். பிறகு ஓவியத்தை முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினேன். அதற்காக சென்னை தரமணியில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தேன். அந்த சமயத்தில் என் அப்பா இறந்து விட்டார்.


என்னதான் குடும்பப் பொறுப்பை அண்ணன் ஏற்றுக் கொண்டாலும் என் படிப்பு, கை செலவுகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்பொழுது என் உறவினரும் தோழனுமான மணி முருகன், நான் தங்கி இருந்த விடுதியில்தான் தங்கி இருந்தான். அவன் செலவிற்கு என அவர்கள் வீட்டில் தரும் பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து உதவுவான். நானும் கேட்பவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுப்பேன். அதில் கிடைக்கும் வருவாயை என் செலவிற்கு வைத்துக் கொள்வேன்.


படிப்பை முடித்து விட்டு மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஏழு ஆண்டுகள் வேலை செய்தேன். குடும்பத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் மற்றும் வேறு சில காரணங்களால் அந்த வேலையை விட்டு விட்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போதே “பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரம்” என்னும் நூலிற்கு கார்ட்டூன்கள் வரைந்து கொடுத்தேன். அது தமிழ்நாட்டில் வெளிவந்த மிகவும் பிரபலமான நூல்களில் ஒன்று நான் வரைந்து கொடுத்த கார்ட்டூன்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.


பிறகு மாணவர்களுக்கு கலை ஆர்வத்தையும், அரசியல் ஆர்வத்தையும் ஏற்படுத்த எண்ணினேன். மற்ற கற்பித்தல் செயல்பாடுகளை விடவும் ஓவியங்களின் ஊடாக மக்களின் வாழ்வு, அரசியல், சமூக நிலை, கலாச்சாரம், கலைகள் ஆகியவற்றை எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. எனவே கல்லூரியில் ஓவியப் பேராசிரியராக பணி புரிய முடிவு செய்தேன். என்னைப் பொறுத்த வரையில் ஒரு ஓவியம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் “அது மக்களுக்கான ஓவியமாக இருக்க வேண்டும்” என்பேன். எண்ணெய் ஓவியங்கள், முப்பரிமாண ஓவியங்கள், கார்ட்டூன்கள் என பல வகையான ஓவியங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்.


மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள பாடத் திட்டத்தில் உள்ள ஓவியங்களை மிகவும் நுட்பமாக கற்றுத் தருகிறேன். அவர்களை ஊக்கப்படுத்த, என்னோடு சுதந்திரமாக உரையாடச் செய்வேன். ஒரு தோழனைப் போல அவர்களுடன் பழகுவேன். வின்சன்ட் வான்கா, டேவிட், ஆஞ்சலோ போன்ற தலை சிறந்த ஓவியர்களைப் பற்றி சொல்லிக் கொடுப்பேன். உள்நாட்டு ஓவியர்களைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறேன்.


ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் சேரும் ஓவியம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிதமாகத்தான் இருக்கிறது. அந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும்தான் உள்ளது. மாணவர்களின் ஓவியம் வரையும் ஆர்வத்தை கண்டறிந்து அவர்களை அந்தத் துறையில் ஊக்கப்படுத்த வேண்டும். மாறாக எதிர்மறையாக பேசி அவர்களின் ஆர்வத்தை மழுங்கடிக்கக் கூடாது.


சிவில், பொறியியல், மருத்துவம், கணக்குப் பதிவியல் படிக்கும் மாணவர்களுக்கு இருப்பது போலவே ஓவியம் கற்கும் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. இவர்கள் தொழில் முறை ஓவியர்களாக வேலை செய்யலாம்.


ஒரு நிறுவனத்தில் பகுதி நேர பணியாளராகவும் (Free lancer) வேலை செய்யலாம். விளம்பர நிறுவனங்களில் வேலை செய்யலாம். கேட்பவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுத்து வருவாய் ஈட்டலாம். வீட்டிலேயே ஓவிய வகுப்புகள் எடுக்கலாம். ஓவியப் பேராசிரியர்களாக பணியில் சேரலாம். அனிமேஷன் (Animation) படங்களுக்கு டிசைன் (design) அமைத்துக் கொடுக்கலாம். இன்னும் ஓவியங்களைக் கொண்டு புதிய புதிய சாதனைகளையும் படைக்கலாம். புது வகையான ஓவியங்களையும் உருவாக்கலாம்.


நானும் கல்லூரியில் பணி புரிவது மட்டுமல்லாமல் வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டிற்கு அருகாமையில் உள்ள மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுக்கிறேன். அதிலும் வருவாய் கிடைக்கிறது.
இப்படி ஓவியக் கலை பணம் ஈட்டுவதற்கான பல வாயில்களைக் கொண்டு உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஓவியக் கண்காட்சிகளில் பங்கு பெறலாம்.அதன் மூலம் நாம் சிறந்த ஓவியர்களாகவும் அங்கீகரிக்கப்படலாம். மக்களுக்கான ஓவியங்களை வரையும் சிறந்த ஓவியர்களை என் வகுப்பறையில் இருந்து உருவாக வேண்டும் என்பது எனது இலட்சியம். அது நிச்சயம் நடந்தேறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு” என்றார்.

-இளங்கதிர் யோகி

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

Don't Miss

மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி?

இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய்...

கோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்!

கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்!...

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...

உலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது?

உணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...

மனிதன் படைப்பிலேயே சிறந்தது எது?

மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.