Latest Posts

அக்செஞ்சர் வளர்ச்சிக்கு ரேகா செய்த முயற்சிகள்!

- Advertisement -

வேலைவாய்ப்புக்கான எந்த கதவும் பெண்களுக்காக எளிதில் திறந்து விடப்படாத அந்த காலக்கட்டத்தில் தனக்கான தனி முத்திரையைப் பதித்தே தீர்வது என்ற விடா முயற்சியோடு, முன்னேற்றம் ஒன்றே முதல் குறிக்கோள் என்பதை முன் நிறுத்தி வெற்றி கண்டவர்தான் அக்செஞ்சர் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை மேலாண் இயக்குநர் ரேகா எம். மேனன்.

சேவியர் தொழில் மேலாண்மை (எக்ஸ்.எல்.ஆர்.ஐ) நிறுவனத்தில் 1981 ஆம் ஆண்டில் மேலாண்மைப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளிவந்து வேலை தேடிய அந்த காலங்களில் பெண்களுக்கு மேலாளர் பொறுப்பு அளிப்பதில் பெரிய நிறுவனங்கள் கூட தயங்கியே நின்று கொண்டிருந்தன. அவருக்கு விருப்பமான தயாரிப்பு நிறுவனங்களில் (எப்.எம்.சி.ஜி) அத்தகைய பணி வாய்ப்புகள் ஏதும் பெண்களை வரவேற்கவில்லை.

அந்த சூழலில் தான் கனரக வாகன உற்பத்தியாளரான ஏய்ஷர் குட் எர்த் என்ற நிறுவனத்தில் பணி ஏற்றார் ரேகா மேனன். பின்னர், அசோக் லைலாண்டுக்கு இடம் பெயர்ந்தார். முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கென கழிப்பறைக் கூட தனியாக அங்கே இல்லை. தேவைப்படும் போது மேலாளரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு அவருடைய குடியிருப்புப் பகுதிக்கு சென்று வரவேண்டிய நிலை இருந்தது.

Also read: மணல், செங்கல், சிமென்ட், கம்பி – இவற்றை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகளைக் கட்டித் தருகிறோம்!

இத்தகைய தற்காலிகத் தடைகளை எல்லாம் தாண்டி தற்போது உலகின் முன்னணி ஆலோசனை மற்றும் சேவைத் துறையில் அழுத்தமாக கால் பதித்துள்ள அக்செஞ்சர் நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு தலைமை ஏற்று வழி நடத்துகிறார் மேனன். கடந்த 15 ஆண்டுகளாக அக்செஞ்சர் இந்தியாவின் முதுநிலை மேலாண் இயக்குநராக புதிய தடம் பதித்துள்ள அவர் 60 வயதை எட்டியுள்ளார் என்றால் அது அவருடைய அகவையின் முதிர்ச்சி என்பதை விட அனுபவத்தின் முதிர்ச்சி என்றே கொள்ளவேண்டும். இந்நிறுவனத்தின் சாதனைகளைப் பற்றி அவரிடம் கேட்டால் அதற்கு காரணம் “நான்” என்பதை விட “நாம்” என்பதையே முன் நிறுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்.

கடந்த 2004-ஆம் ஆண்டில் அக்செஞ்சர் $41 பில்லியன் வருவாய் ஈட்டிய போது இந்நிறுவனத்தின் பொறுப்கை ஏற்று எதிர்கால ஏற்றத்தை உறுதி செய்துள்ளார். எனவே இவரது பெயர், பார்ச்சுன் இந்தியா இதழில், வணிகத்தில் வெற்றிக்கொடி கட்டிய ஆற்றல்மிகு பெண்மணிகளின் பட்டியலில் 16-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து 9-ஆம் முறையாக இதற்கான பெருமைப் புள்ளியைத் தக்க வைத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் உலகத்தில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை காலக் குறிப்பறிந்து பயன்படுத்திக்கொண்ட அக்செஞ்சர் இந்தியா பல்வேறு சேவைத் தளங்களில் தடம் பதித்து வெற்றிக் கண்டது. தொடக்க காலத்தில் நிறுவனங்களுக்கான பின்புல செயல்பாடுகளை மட்டும் குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்து கொண்டு வந்திருந்த அக்செஞ்சர் இந்தியா புதிய வீச்சுடன் தன் சேவைத் தளத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டது.

அதன் தொடர்ச்சியாக, புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களுக்குத் தேவையான செயல்சார் திட்டமிடல், ஆலோசனை, கணினி மயப்படுத்துதல், தொழில்நுட்பம், இயக்க செயல்பாடு ஆகிய தளங்களில் ஏற்கனவே களங்கண்ட இன்ஃபோசிஸ், விப்ரோ போன்றவை. இவை மட்டுமின்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐபிஎம் மற்றும் மெக்கன்சி ஆகியவற்றுடனும் போட்டியிட்டு வெற்றி முத்திரை பதித்ததில் மேனன் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு.

பெங்களூரில் தம்முடைய தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் மேனன் அவர்களிடம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைத் துறையில் மிளிரும் தலைமைப் பெண்மணிகளில் ஒருவராக அவர் போராடி உயர்ந்ததைப் பற்றி அறிய முற்படும் பொழுது, இத்தகைய சாதனைகள் எல்லாம் தம் நிறுவனத்தின் ‘அணி வெற்றியே தவிர தனி வெற்றியல்ல’ என்று உரக்கக் கூறுகிறார்.

இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்தியாவை மையப்படுத்தி இயங்கும் நிறுவனங்களைப் போல பன்னாட்டு நிறுவனமான அக்செஞ்சர், சேவை வழங்கு மையங்களை வெற்றிகரமாக இயக்க முடியாது என்று பலரும் கருதிய காலக்கட்டத்தில் அதனைத் தங்குதடையின்றி சாதித்துக் காட்டியதில் அக்செஞ்சருக்குப் பெரும் பங்குண்டு. இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக தொழில்நுட்பப் புதுமைகளை உருவாக்கித் தரக்கூடிய பணிகளை அக்செஞ்சரின் சேவை மையங்கள் செயல்படுத்தின. இதற்குக் காரணம் எங்களுடைய சிறப்புத் திறன்கள், நுட்பமான அறிவு, இந்தியாவில் உருவாக்கக்கூடிய புதுமையான மென்பொருள் ப்ரோகிராம்களே ஆகும். இது எங்களுடைய வெற்றிக்கு அடிப்படை மாற்றமாக அமைந்தது என்று மேனன் பெருமையோடு குறிப்பிடுகிறார்.

வளர்ச்சி நோக்கம் உள்ள நுட்பத் துறைகளான செயற்கை நுண்ணறிவு, டேட்டா பகுப்பாய்வு, தொகுப்புத் தொடரி (பிளாக் செயின்), மேகக் கணினி தொழில்நுட்பம் (க்ளவுட்), பாதுகாப்பு சார்ந்த தேவைகள், பொருட்களின் இணையம் (Internet of Things) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சேவைகளை அளிக்கத் தொடங்கியது அக்செஞ்சர். இந்தியாவில் வினைத்திறன் வீச்சு பெற்ற நிறுவனங்களான கூகுள், ஊபர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் ஐடி சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை அக்செஞ்சர் திறம்பட நிர்வகித்து வருகிறது.

இத்தகைய செயல் திட்டத்தின் மூலம் அக்செஞ்சரின் உலகளாவிய செயல்பாடுகளில் இந்தியாவை ஒரு முக்கிய சந்தையாக ஒளிரச் செய்திருக்கிறார், மேனன். 2014-ஆம் ஆண்டில் அக்செஞ்சரின் இந்திய பணியாளர்கள் பெற்றிருந்த காப்பு உரிமைகளின் எண்ணிக்கை 175 என்ற எண்ணிக்கையை வளர்த்தெடுத்து 2018 நிதியாண்டு (செப்டம்பர் முதல் ஆகஸ்டு வரை) 320-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. உலகளவில் அக்செஞ்சரின் வருவாயில் 60 விழுக்காட்டுக்கும் மேலான பங்கு அதன் புதிய வணிகப் பிரிவுகளான க்ளவுடு, டிஜிட்டல் மற்றும் கணினி பாதுகாப்பு தொடர்பான சேவைகளிலிருந்து கிடைத்ததாகும். மேலும், அக்செஞ்சரின் இந்தியா உள்ளிட்ட வளர்ச்சி சந்தையின் வருவாயில் 2018 நிதியாண்டில் அதன் முந்திய ஆண்டை விட 15 % வருவாய் பெருக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

“தொடக்கத்தில் எங்களுக்கு இருந்த இயல்பான வேலைகளுடன் டிஜிட்டல் வணிக வழி வளர்ச்சி என்பதை மெய்ப்பித்துக் காட்டுவது பெரும்பாடாக இருந்தது. எனினும் டிஜிட்டல் வணிகத்தில் எந்த அளவுக்குக் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்பதை சாதித்துக் காட்டியதில்தான் அக்செஞ்சரின் வெற்றி நிலைநாட்டப்பட்டது” என்கிறார் மேனன்.

டிஜிட்டல் பெருவளர்ச்சியின் பயன் எங்களுக்கு கிடைக்கின்றது. ஏனென்றால் புதியனவற்றை சோதனை செய்து கற்றல் மேம்பாட்டில் நாங்கள் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் புதுமை உருவாக்கத் துறையில் நாங்கள் முன்னணியில் இருப்பதற்கு அது பெரிதும் உதவுகிறது” என்று கூறுகிறார் மேனன்.

மிக வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உடனடியாக ஈடு கொடுப்பது இடர்ப்படும் நிலையில் உள்ளது. இதனை உணர்ந்த எங்கள் நிறுவனம் புதிய தொழில் தொடர்புகளுக்கு இவர்களுடன் இணைந்து அக்சன்சர் வென்ச்சர்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. அப்பிளைட் இன்டலிஜென்ஸ் எனப்படும் பயன்பாட்டு நுண்ணறிவு கணினி இணைய பாதுகாப்பு சைபர் செக்யூரிட்டி ஆகிய முன்னேறிய துறைகளில் புதிதாக ஈடுபடும் தொழில் முனைவோர் அமைப்புகளுடன் பங்குதாரராக கை கோர்ப்பது இந்த வென்ச்சர்ஸ் அமைப்பின் செயல் திட்டமாகும். இத்தகைய புதிய தொழில் தொடங்குநர்களின் திறன் பற்றிய நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டவுடன் அவருடைய தொடர் வளர்ச்சிக்காக பன்னாட்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இவ்வாறாக ஏறத்தாழ 200 தொடக்கநிலை தொழில் நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம் பன்னாட்டளவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய தொழில் தொடங்குநர்கள் அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எங்களுடைய வணிகத்திற்கும் நாங்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இதன் மூலம் போட்டியைச் சமாளித்து நாங்கள் முன்னணியில் உள்ளோம்.

இவ்வகையில் நுகர்பொருள் நிறுவனங்கள் முதல் தானியங்கி உதிரிபாகங்கள் நிறுவனங்கள் வரை 14 வகையான தொழில் துறைகளுக்குத் தேவையான தீர்வுகளை அளிப்பதில் நாங்கள் பெரும் பங்களிப்பு செய்து வருகிறோம். நம் நாட்டைப் பொறுத்தவரை அமைப்பு வழியான சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டால் நமக்கு மிகப்பெரிய முன்னேற்ற வாய்ப்பு காத்திருக்கிறது. ஏனெனில் உலகிலேயே மிக வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. என்று அவர் மேலும் கூறினார்.

Also read: நீர் சுத்திகரிப்புப் பணிகளை சிறப்பாக செய்து கொடுக்கிறோம்! – ‘குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ்’ திரு. ஜி. சண்முகம்

போட்டியைச் சமாளித்து முன்னணியில் எம் நிறுவனத்தை தக்க வைக்கும் நோக்கத்துடன் உலக அளவில் பல நிறுவனங்களுடன் கூட்டிணைவு செய்தும் அவற்றை வாங்கியும் (மெர்ஜர் அண்ட் ஆக்குவிசிஷன்) வளர் முயற்சிகளில் நாங்கள் இறங்கி உள்ளோம். எடுத்துக்காட்டாக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 90 நிறுவனங்களை கைக் கொள்வதன் மூலம் 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு அதில் அக்சன்சர் முதலீடு செய்துள்ளது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.6 பில்லியன் அளவுக்கு புதிய நிறுவனங்களை கைப்பற்றி உள்ளது ஏன் இவ்வாறு பெரிய அளவில் நிறுவனங்களைக் கையகப்படுத்த வேண்டும் எனில், புதிதாக அவற்றை உருவாக்குவது என்பது மிகவும் அதிக காலம் பிடிக்கும் அல்லது என்பது மிகவும் கடினமானது. எனவே முன்னரே தொடங்கி இயக்கத்தில் உள்ள நிறுவனங்களை வாங்கி அவற்றை நிர்வகித்தல் சிறந்த முறையாகத் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக படைப்பாக்கத் திறனில் ஏற்பட்ட இடைவெளியை இட்டு நிரப்பும் நோக்கத்துடன் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த வடிவமைப்பு மற்றும் புத்தாக்க நிறுவனமான மேட்டர் மற்றும் சந்தைப்படுத்துதலில் சார்ந்த படைப்பாக்கத் திறன் மிக்க நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஒயர் ஸ்டோன் ஆகியவற்றை நாங்கள் கையகப் படுத்திய போதும் அவற்றைத் தொடர்ந்து அவர்கள் போக்கில் சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளதால் அவர்களின் படைப்பாக்கத் திறனை தொடர்ந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டோம்.

எங்களைப் பொறுத்தவரை தரவுச் சுரங்கம் (டேட்டா மைனிங்) வணிக முத்திரைப் (பிராண்டிங்) பெயர், சந்தைப்படுத்துதல், நுட்ப செயல்திட்டங்கள், கணினி ஆக்கம் ஆகியவற்றில் நாங்கள் செயல்பட்டு வந்தாலும் படைப்பாக்கத்தில் எங்களுக்கு சற்று குறைதிறன் அல்லது இடைவெளி இருந்தது என்பது உண்மைதான். எங்களுடைய நிறுவன கையகப்படுத்தும் முயற்சியில் புதிய நிறுவனங்களை வாங்கியதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய இணையவழி விளம்பர நிறுவனமாக நாங்கள் உருவாகியுள்ளோம்” என்று மேனன் கூறுகிறார். மேலும், அதேபோன்று உயர்நிலைப் பாதுகாப்பு தீர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இஸ்ரேலை சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெகலான் நிறுவனத்தை அக்சன்சர்ஸ் இந்தியா அண்மையில் கையகப்படுத்தியது, ஏனெனில் இணைய பாதுகாப்பு அல்லது கணினிப் பாதுகாப்பு முறைகளை உருவாக்கிக் கொடுக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. எங்களுடைய நிறுவனத்தின் செயல் திட்டம் பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், செயல்திறன் இடைவெளிகளைச் கண்டறிந்து அவற்றை உலகின் மிகச்சிறந்த திறன்களைக் கொண்டு சரி செய்து அவற்றிற்கு தீர்வு காணுதல் என்பதாகும். அக்சன்சர் நிறுவனத்தின் ஆலோசனை, தொழில்நுட்பப் பிரிவுகளின் வல்லுநர்களைக் கொண்டு வாடிக்கையாளர் நிறுவனங்கள் மேலும் செயல்திறன் மிக்கதாகவும் சிக்கனமாகவும் இயங்குவதற்கு வழி செய்கிறோம். இதற்கேற்ப தொழில்நுட்பத் தீர்வுகளை உரிய வாடிக்கையாளர் நிறுவனங்களுக்காக நாங்கள் செய்து கொடுத்தாலும் சரி அவர்களே பொறுப்பேற்று செய்வதானாலும் அவற்றையும் அனுமதிக்கிறோம் அவர் களுக்கு உரிய தீர்வுகளை நாங்கள் உருவாக்கி கொடுக்கிற அதேவேளையில் நாங்கள் உருவாக்கும் எல்லாத் தீர்வுகளையும் அவர்கள் மீது திணிக்க விரும்புவதில்லை.

நிர்வாகத் திறனும் தனிப் பண்புகளும் மிகுந்த மேனனுடன் மிக நீண்ட காலம் இணைந்து பயணிக்கும் அக்சன்சரில் பெரும் பொறுப்புகளில் 15 ஆண்டுகளுக்கும் இருப்பவர்கள் மேனனைப் பற்றிப் பெருமதிப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். மாற்றங்களை மிகச் சரியாக புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்து கொள்ளும் திறன் மிக்கவராகவும் ரேகா மேனன் தனித்துயர்ந்து நிற்கிறார். தொழில்துறை முன்னுரிமை சார்ந்த தேவைகள், வாடிக்கையாளர் தேவைகள் அல்லது எங்கள் நிறுவனப் பணியாளர்களுடைய கோரிக்கைகள் ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை கூர்ந்த மதியுடன் புரிந்துகொண்டு அவற்று தேவைக்கேற்பக் கையாள்வதில் சிறந்தவர் அக்சன்சர் நிறுவனத்தின் தனித்துவத்தைத் தக்க வைப்பதிலும், அதன் புதுமை ஆக்கம் சார்ந்த திறனை நிலைப்படுத்துவதிலும், அனைவரையும் அரவணைத்து செல்வதிலும், நன்னெறிப் பொறுப்புள்ள தலைமைக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் ரேகா மேனன் என்று அவருடன் பணிபுரியும் பிற இயக்குநர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 1.7 இலட்சம் பொறியாளர்கள்\பணியாளர்களைக் கொண்டு இயங்கும் அக்செஞ்சர் இந்தியா நிறுவனத்தின் 40% பணியாளர்கள் பெண்களே.

அக்செஞ்சர் பெற்ற காப்புரிமைகள்
2014 – 175
2015 – 205
2016 – 275
2017 – 260
2018 – 320

கடந்த 3 ஆண்டுகளில் 85% நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

– ‘ஆக்கம்’
மதிவாணன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]