Monday, September 27, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

பூமிதான நிலங்கள், பஞ்சமி நிலங்கள் – என்ன வேறுபாடு?

காந்தியடிகளின் சீடரும், காந்திய தலைவரும் ஆன திரு. ஆச்சார்ய வினோபாபாவே, சிந்தனையில் உபரி நிலங்கள் விவசாயம் செய்யும் நிலமற் றோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான், பூமிதான இயக்கம்.

- Advertisement -


ஏராளமாக நிலம் வைத்திருக்கும் பண்ணையார்கள், ஜமீன்கள், நிலக் கிழார்கள் தங்களிடம் உள்ள ஒரு பகுதி நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள். அவ்வாறு பெறப்பட்ட நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் மற்றும் கூலி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள், பூமி தான இயக்கத்தினர்.


தமிழகத்தில் திரு. வினோபாபாவே, 1956 களில் ஓராண்டு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து நிறைய நிலங்களை தான மாகப் பெற்றார். அப்படிப் பெற்ற நிலங்கள் தமி ழகம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான ஏக் கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக் கபட்டு இருக் கிறது.


மீதி இருந்த கொஞ்ச நிலங்கள் பகிர்ந்தளிக்கப் படாமல் பூமி தான போர்டு இடமே உள்ளது. கொஞ்ச நிலங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சட்ட சிக்கல்கள், குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கூட கையகப்படுத்த முடியாமல் இருக்கிறது.


பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் உள்ள விவரம் தெரிந்தவர் களிடம் விசாரித்தால், அவர்களாலேயே அடையாளம் காட்ட முடியும். அல்லது மேனுவல் கால ஈ.சி பார்க்கும் போது பூமிதான போர்டுக்கு நிலங்களை தான பாத்திரம் எழுதி கொடுத்த பதிவு அதில் காட்டப்பட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறி இருந்தால் கிராம நிர்வாக அலுவலக அ- பதிவேடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


பூமிதான நிலங்களை நிர்வகிக்க பூமிதான போர்டு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிதான போர்டுக்கு நிலக் கிழார்கள் கிரயப் பத்திரம் செய்து கொடுத்து அது கிரயப்பத்திரம் ஆகி போர்டு பெயருக்கு தனிப் பட்டா ஆனதும் மேற்படி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப் பார்கள். இப்படி கிரயப் பத்திரம் செய்து கொடுப்பதற்கு என தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.


நிலங்களைப் பெறும் பயனாளிகள் அனைத்து வகை சமுதாயத்தைச் சார்ந் தவர்களாக இருந்தார்கள். பூமி தான நிலங்கள் ஒடுக்கப்பட்ட (எஸ்சி, எஸ்டி) மக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப் பட்டது என்பது தவறான கருத்து.


எஸ்சி, எஸ்டி மக்களுக்கு கொடுக்கப்பட்டது Depressed Class நிலம் அல்லது பஞ்சமி நிலம் என்பர். அந்தக் காலக் கட்டத்தில் பஞ்சமர் என்று ஐந்தாம் வர்ண மக்களைக் குறிப் பிடுவதாக இருந்த பெயர் அடிப்படையில் பஞ்சமி நிலம் என பெயர் வழங்கத் தொடங்கியது.


பஞ்சமி நிலத்துக்கும், பூமிதான நிலத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கலெக்டராக இருந்த திரு. ஜேம்ஸ் டிரமென்ஹீர் முயற்சியில், அப்போது மிகமிகக் கீழான நிலையில் நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அள வில் வழங்கப்பட்ட நிலமே பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது.


பூமி தான நிலத்தை தானமாகப் பெற்ற பயனாளிகள் மேற்படி இடத்தை அடமானம், விற்பனை, தானம், ஒத்தி போன்ற எந்த வித முயற்சிகளிலும் சட்டப்படி ஈடுபட முடியாது. தொடர்ந்து சில ஆண்டுகள் பூமி தானம் பெற்ற விவசாயிகள் நிலங்களை உழாமல், பயிரிடாமல் இருந்தால் அதனை பூமிதான போர்டு மீண்டும் கையகப் படுத்திப் வேறு விவசாயிகளுக்கு கொடுக்கும்.


பூமி தான நிலங்களின் பட்டா, பூமி தானம் பெற்றவர்களின் பெயரில் இருக்காது. எப்பொழுதும் பூமிதான நிலத்தின் ரெவின்யூ பட்டா, பூமிதான போர்டு பெயரில்தான் இருக்கும். கோவில் நிலங்கள் போல காலமெல்லாம் அனுபவித்துக் கொள்ளலாம். பட்டா எப் பொழுதும் கோவில் பெயரில் இருப்பதைப் போல பூமிதான போர்டு பெயரில்தான் இருக்கும்.
மேற்படி பூமிதான போர்டு பெயரில் இருக்கும் பட்டாவிற்கான நிலத் தீர்வையை ஆண்டு தோறும் பூமிதானம் பெற்ற விவசாயிகள்தான் செலுத்த வேண்டும். பூமிதானம் பெற்றவரின் வாரிசுகள் மேற்படி நிலத்தை வாரிசு உரிமையில் அனுபவ உரிமையை பெறலாம். அதற்கு தங்கள் பெயரை பூமிதான போர்டு ஆவணங்களில் சேர்க்க விண்ணப்பித்து சேர்த்துக் கொள்ளலாம்.


பூமிதான நிலங்களில் சட்டச் சிக்கல்களும், குழப்பங்களும் எப்படி உரு வாகின்றன என்று புரிந்து கொண்டாலே, இன்றைய இளம் தலைமுறையினர் பூமிதான நில சிக்கல்களில் இருந்து பாதுகாக்கப் படுவார்கள்.


பல ஊர்களுக்கு வினோபாபாவே சென்ற போது, ஏற்கனவே சிக்கல்கள் இருந்த நிலங்கள், பாகப் பிரிவினை, வாரிசுரிமைச் சிக்கல் இருந்த நிலங் களையும் ஆர்வக் கோளாறில், பூமி தான போர்டு பெயரில் தானம் கொடுத்து விட் டார்கள். காலப் போக்கில் இந்த நிலங்களில் உரிமை கோருபவர்கள் அவற்றின் மீதான உரிமை வழக்கு களைத் தொடங்கி அவை நீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும். இதனால் பூமிதான போர்டால் கையகப்படுத்த முடியாமலும், பட்டா பெயர் மாற்ற முடியாமலும் இருக்கும்.


பூமி தான போர்டுக்கு தானம் கொடுப்பவர் கிரயப் பத்திரம் போட்டு விடுவார். ஆனால், அனுபவத்துக்கு நிலத்தை ஒப்படைக்காமல் இருப்பார். மேடையில் எல்லோர் முன்னிலையிலும் தானம் கொடுத்து விட்டு பிறகு திரும்பப் பெறும் நிலைக்கு தங்கள் வாரிசுளால் உந்தப்பட்டு வழக்கு போட்டவர்களும் இருக்கிறார்கள்.


ஒரு சில இடங்களில் பூமிதான போர்டு பெயரில் பத்திரம் ஆகி இருக்கும். ஆனால் பட்டா பெயர் மற்றம் செய்யாமல் இருந்து விடுவார்கள். மேற்படி பட்டா, போர்டுக்கு தானம் கொடுத்தவர் பெயரிலேயே நின்று விடும். இதன் காரணமாக இரட்டை ஆவண குழப்படிகள் உருவாகி இருக்கும்.


கணினி ஈசி வராத, மேனுவல் ஈ.சி. காலத்தில் பூமிதானப் பத்திரப் பதிவு நடந்து இருக்கும். அதனை சோதிக்காமல் கணினி கால ஈ.சி மட்டும் பார்த்து விட்டு மேற்படி நிலங்களுக்கு ரெவின்யூ பட்டா தனி நபர் பெயரில் இருக்கிற தெம்பில் வாங்கி விடுவார்கள்.


அதாவது பூமிதான போர்டுக்கு தானம் அளிக்கப்பட்டு, முழுமையாக போர்டு கைக்கு களத்திலும், ஆவணங்களிலும் மாறாமல் இருக்கும் இடங்களில், இந்த செய்தி தெரியாத அப்பாவி மக்கள் தவறுதலாக சொத்தை வாங்கி விட்டு தவிக்கின்றனர்.


எனவே சொத்து வாங்குவோர், பூமிதான நிலங்கள் அருகில் இருக்கிறது, அல்லது இது பூமிதான நிலமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலே நன்றாக ஆவண ஆய்வு, கள ஆய்வு செய்து முடிவு எடுங்கள்.


பூமிதான போர்டுக்கு நிலக்கிழார், நிலங்களை தானம் கொடுக்கும் பொழுது, போர்டுக்கு பத்திர அலுவலகத்தில் கிரயம் எழுதி கொடுப்பர். அதனால் அந்த பரிமாற்றம் ஈ.சி.யில் வரும். அதுவே போர்டு ஏழை விவசாயிக்கு நிலத்தை வழங்கும் போது எந்த கிரய பத்திரமும் சார்பதிவகத்தில் பதியப் படுவது இல்லை. அதனால் மேற்படி பரிமாற்றம் ஈ.சி. யில் (வில்லங்கச் சான்றிதழ்) வராது.


பூமி தான நிலங்களை ஏழை விவசாயிக்கு ஒப்படைக்கும் போது காந்தி – வினோபாபாவே படம் போட்ட தனி முத்திரைத் தாளில் பதிவு செய்யாமல், நிலம் சில நிபந்தனைகளுடன் ஒப்படைக் கப்பட்டு இருக்கும் தொனியில் ஷரத்துகள் எழுதப்பட்டு இருக்கும்.


மேற்படி நிலத்தை யார் தானம் அளித்தார்களோ, அவர்களின் பெயரும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். தானம் அளிக்கப்பட இருக்கும் சொத்து விவரம் அதில் தெளிவாக இருக்கும்.


பூமிதான போர்டு நிலங்களை கண்காணிக்க, பராமரிக்க கதர்த்துறை அமைச்சரின் கீழ் சமூக சேவகர்கள், சர்வோதய சங்கத்தினர்கள், பூமிதானம் நிலம் கொடுத்த நிலக்கிழார்களின் வாரிசுகள் ஆகியோரைக் கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கமிட்டி நியமிக்கப்படுகிறது.


2006 – க்கு முன் பூமிதான போர்டின் தலைமையகம் மதுரையில் இயங்கியது. அப்பொழுது போர்டு வருவாய்த் துறையின் நில சீர்திருத்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு தலைமையகம் சென்னைக்கு மாற்றபட்டு உள்ளது.


பூமிதான போர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியும். யாருமே அனுபவிக்காமல் பூமிதான நிலங்கள் வீணாகக் கிடப்பதை பல ஊர் களில் நான் கண்டு உள்ளேன். அவற்றை எல்லாம் முறையாகப் பிரித்து நிலமற் றவர்களுக்குக் கொடுத்து பயன்படச் செய்யலாம்.

யகம் மதுரையில் இயங்கியது. அப்பொழுது போர்டு வருவாய்த் துறையின் நில சீர்திருத்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு தலைமையகம் சென்னைக்கு மாற்றபட்டு உள்ளது.


பூமிதான போர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியும். யாருமே அனுபவிக்காமல் பூமிதான நிலங்கள் வீணாகக் கிடப்பதை பல ஊர் களில் நான் கண்டு உள்ளேன். அவற்றை எல்லாம் முறையாகப் பிரித்து நிலமற் றவர்களுக்குக் கொடுத்து பயன்படச் செய்யலாம்.

-சா. மு. பரஞ்சோதிபண்டியன்
8110872672

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.