Latest Posts

நிலங்களுக்கு L கட்டுமானம், ஃபென்சிங் ஏன் தேவை?

- Advertisement -

வீட்டு மனைகளை முதலீட்டுக் காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் மனை/நிலங்களுக்கு “L” out கட்டுமானம் & ஃபென்சிங் ஏன் அவசியம்?

வீட்டு மனைகளை முதலீட்டுக்காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் எல்லைகளில் “L” கட்டுமானம் கட்டாயம் கட்ட வேண்டும்.

சுற்றிலும் சுவர் கட்டி ஆர்ச், கேட், மர காப்புகள் (Tree Guard) எல்லாம் கட்டி சில பெரிய மனை விற்பனை நிறுவனங்கள் மனைப் பிரிவுகளை அமைத்து இருக்கும். அது போன்ற இடத்திற்கு இந்த கட்டுமானம் தேவைப்படாது.

நடுத்தர மக்களுக்கா என்று உருவாக்கப்படும் மனைப்பிரிவுகள் பெரும்பாலும் 2 அடி உயர கருங்கற்களை வைத்து மனைகளை அத்து கட்டி பிரித்து தனித் தனி மனைகளாக உருவாக்கி இருப்பார்கள்.

இத்தகைய மனைபிரிவுகளை விற்று முடித்தவுடன் ப்ரோமோட்டர்களின் பராமரிப்பு குறைந்து விடும். அப்பொழுது அங்கு இருக்கும் ஆத்துக் கற்கள் மாடு முட்டி விழுந்து விடும். அல்லது கற்கள் காணாமல் போய்விடும். திருடப்பட்டு விடும்.

சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து வந்து உங்கள் மனைகளை பார்க்கும் போது அந்த இடத்தில் மனை பிரிவுகள் இருந்த இடமே இருக்காது. மனையை கண்டு பிடிக்கவே சிரமமாகிவிடும்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து சென்றால் மனையை கண்டு பிடிக்க சர்வேயரை கொண்டு போய் புதியதாக அளந்து எடுக்க வேண்டிய நிலைமை ஆகி விடும். அதிலும் சர்வே தவறுகள் & குழப்பங்கள் வந்து விட வாய்ப்பு இருக்கிறது.

செல்போன் வாங்கினால் எப்படி ஒரு ஸ்க்ராட்ச் ப்ருஃப் வாங்கி ஒட்டிக் கொள்வோ மோ அது போல் மனைகள் வாங்கிய பிறகு அதன் எல்லை கள் அழியாமல் இருக்க “லி” சிut கட்டுமானம் அவசியம்.

மனை பிரிவுகளில், நம் மனைகளை ஒட்டி வீடுகள் வரும் என்று நீங்கள் உணரும் போது, அல்லது மனை பிரிவில் வீடுகள் கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று உணரும் போது மேற்படி இடத்தில் கட்டாயம் கம்பி வேலி ஃபென்சிங் போட வேண்டும்.

அப்படி போடாமல் இருந்தால் உங்கள் இடத்தில் அரை அடி முதல் 1 அடி வரை நீள வாக்கில் உங்கள் எல்லைகள் ஆக்கிரமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

பக்கத்து மனையில் வீடு கட்டுபவர்கள், உங்கள் மனையில் செங்கற்கள், ஜல்லி, மணல் கொட்டி வைப்பார்கள். ஆடு மாடு கட்டுவார்கள். வேலி போட்டு வைப்பதால் இது போன்ற தேவையற்ற, பின்னர் சிக்கல்களை எற்படுத்தும் உள்நுழைவு தடுக்கப்படும்.

எனவே மனைகளை வாங்கும் போது “L” out கட்டுமானமும், ஃபென்சிங்குக்கும் போட முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன் (8110872672)

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news