Latest Posts

மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!

- Advertisement -

நிலத்திற்காக அரசுக்கு தீர்வை (வரி) கட்டுகிறவர்களின் ‘ஏ’ பதிவேட்டிலும், தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை (வரி) கட்டாமல் நில ரிசர்வேசனையும், வரிச் சலுகையையும், அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை ‘பி’ ரெஜிஸ்டரிலும் அரசு வட்டம் (தாலுகா) கணக்கில் பராமரித்து வந்தது. ஜமீன் கிராமங்களில் பர்மனன்ட் செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் இரயத்து கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் ‘ஏ’ பதிவேட்டு கணக்குகளை பராமரித்து வந்தனர்.

அதேபோல் ஜமீன் கிராமங்களிலும், இரயத்து கிராமங்களிலும் இலவச நிலங்களையும், நில ஒதுக்கீடுகளையும், தனி நபர் பெயராலும் மற்றும் கோயில்கள் பெயராலும் அனுபவித்து வந்தவர்களின் பெயர்களை தாலுகா கணக்கின் ‘பி’ பதிவேட்டில் பராமரித்து வந்தனர்.

1953 களில் இனாம் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு தனி நபர் பெயர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் கிராமங்களை ஒழித்து, அதில் குடிவார உரிமையில் யாரெல்லாம் அந்த நிலத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற உரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கியது அரசு.

அப்படி இனாம்களை ஒழிக்கும் போது அங்கே இரயத்துகள் யாரும் இல்லாத நிலையில் மேற்படி நிலங்களை ‘அனாதீனம்’ என்று வகைபடுத்தி வைத்தது. மேலும் இனாம் ஒழிப்பின் போது ஆன்மீக மடங்கள், ஆதீனங்கள் பெயரில் இருக்கும் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தற்போதைய ‘ஏ’ பதிவேட்டு கணக்கு பட்டா கொடுக்கப்பட்டு தீர்வை மட்டும் கட்டும் நிலங்களாக மாற்றி இருக்கிறார்கள்.
நிறைய பேர் கேட்கிறார்கள், ”மானியங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. பிறகு ஏன் இன்றும் ‘கோயில் மானியம்’ என சொல்கிறீர்கள்”, என்று. மானியத்தை, இனாம் நிலத்தை அரசு கைப்பற்றவில்லை. அதனை வரி அற்ற மானியமாக இருந்த நிலையில் இருந்து, வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். அதனால்தான் இன்னும் பேச்சு வழக்கில் மானியம் என்று சொல்லப்படுகின்றது.

பூசாரி மானியம், தலையாரி மானியம், வெட்டியான் மானியம் என்று வரி கட்ட வேண்டாத நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்து வரி கட்டும் மானியங்களாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது ‘பி’ பதிவேட்டு கணக்கை முடித்து, அனைத்தையும் ‘ஏ’ பதிவேட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. ஆக இப்பொழுது மானியமோ, இனாமோ (வடமொழியில் மானியம் மற்றும் உருது மொழியில் இனாம்) கிடையாது. அனைத்து நிலங்களும் தீர்வை செலுத்த வேண்டிய நிலங்களே.

இடம் வாங்கப் போகும் போது, மேற்படி நிலங்கள் இனாம் நிலங்கள் என்று சொல்லப்பட்டால், அல்லது மானியம் என்று பேச்சு வழக்கில் சொல்லப்பட்டால் அது ‘ஏ’ பதிவேட்டுக் கணக்குக்கு ‘பி’ பதிவேட்டில் இருந்து வந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால், தற்போது நிலம் விற்பவருக்கு, அந்த நிலம் எந்த வழியில் வந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த இனாம்கள் அல்லது மானியங்கள் பற்றி அறிந்து கொள்வோம். இனாம்கள் எல்லாம் வெள்ளையர்கள் கொடுத்தது அல்ல; அதற்கு முன் இருந்த இந்திய அரசர்கள் தானமாகக் கொடுத்ததை, வெள்ளையர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

எப்படி என்றால், பொதுவாக இனாம்கள் ஆதீனங்களுக்கும், மடங்களுக்கும் அதிக அளவிலும், மசூதிகளுக்கும் சர்ச்களுக்கும் அவற்றை விடக் குறைந்த அளவிலும் என்று பல லட்சம் ஏக்கர்கள் கொடுக்கப்பட்டு ‘பி’ பதிவேட்டில் பதிந்து இருப்பது முதல் வகை இனாம்.

தனிப்பட்ட முறையில் ராணுவ வீரர்களுக்கு, படைத் தளபதிகளுக்கு, ஆசை நாயகிகளுக்கு, தேவதாசிகளுக்கு, கலைஞர்ளுக்கு என்று கிராமங்களை இனாம்களாக கொடுத்து இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்ட அரசர்களுக்கும், நொடிந்து போன அரச குடும்பங்களுக்கும் கிராமங்களை இனாமாக கொடுத்து இருக்கிறார்கள்.

கிராமத்தில் ஊழியம் செய்யும் நாவிதர், தச்சர், கருமான், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி போன்ற சேவைகளை செய்வதற்கு சேவை மானியம் என்ற பெயரில் நிலங்களை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள்.

இனாம்களின் வகைகள்:

தேவதாயம்தமிழகத்தில் இந்தச் சொல் இன்றைக்கும் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் தேவதானம் என்றும், கேரளாவைச் சேர்ந்த மலபார் பகுதிகளில் தேவசம் என்றும் சொல்வார்கள். ஏக்கர் கணக்கான நிலங்களை கோவில் பெயரில் வைத்துக் கொண்டு பட்டர்கள், குருக்கள், பூசாரிகள் மற்றும் கோவில் வழிபாடுகளில் பொறுப்பு எடுத்துக் இந்த நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை அனுபவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம், திருவரங்கம், திருப்பதி, இராமேசுவரம், மதுரை போன்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு பரந்து விரிந்த இனாம் நிலங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ கோவில்களுக்கும் இனாம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சிறிய கோயில்களுக்கும் கூட இனாம் நிலங்கள் இருக்கின்றன.

தர்மதாயம்
வேத பாடசாலைகள் அமைக்க, கோவிலுக்கு விளக்கு எரிக்க, கோவில் சார்ந்து கிணறு மற்றும் குளம் வெட்ட, பக்தர்களுக்கு சத்திரம், அன்னதானம் செய்ய, மண்டபங்கள் கட்ட அறக்கட்டளைகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. தர்மதாயம் அதன் முக்கிய நபர் பெயரில் இந்த இருக்கும்.

பந்த் விருத்தி                                                                                            பத்தொன்பது பிராமணர்களுக்கு இனாமாக வழங்கப்படுவதை குறிக்கும். பந்த் விருத்து இனாம்களை தமிழகம் முழுதும் அதிக அளவில் பார்க்க முடியும்.
ஸ்தோத்திரியம்
வேதம் கற்று, வேதம் பரப்பும் பிராமணர்களுக்காக கொடுக்கப்படும் நிலங்களை ஸ்தோத்திரியம், ஸ்மிருதியம் என்பார்கள். இத்தகைய இனாம்களை திருவைகுண்டம் அருகில் பார்த்து இருக்கிறேன்.

அக்ரஹாரம்
அக்ரஹாரம் அனைத்தும் மானியமாக கொடுக்கப்பட்டதுதான். முதலில் சொன்ன பந்த் விருத்தியும், ஸ்தோத்திரியமும் தனிப்பட்ட பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டவை. அக்ரஹாரம், குறிப்பிட்ட பிராமண குழுக்களுக்கு தானமாக வழங்கபடுவது ஆகும். அக்ரஹாரம் இனாமை பின்வருமாறு பிரித்து வழங்கி உள்ளனர். அவை,

சர்வ அக்ரஹாரம் – நூறு சதவீதம் வரி இல்லாதது.
பிலுமுக்த அக்ரஹாரம் – வரி ஒருமுறை கட்டினால் போதும்.
ஜோடி அக்ரஹாரம்: குறைவான வரி. ஆனால், தொடர்ந்து கட்ட வேண்டும்.
கைரதி
இது முஸ்லிம் உலமாக்களுக்கு, முஸ்லிம் அரசர்கள் கொடுத்த தனிப்பட்ட இனாம்.

ஜாகிர்
இது முஸ்லிம் படைத்தளபதிகளுக்கு, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். ஜாகிர் இனாம்கள் தமிழகத்தில் பரவலாக இருக்கின்றன.

அல்தாங்க் இனாம்
இதை சிவப்பு முத்திரை இனாம் என்றும் சொல்வார்கள். இது முஸ்லிம் மசூதிகளும், அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அனுபவித்துக் கொள்ள கொடுக்கப்பட்ட இனாம்.

தேஷ்முக் மற்றும் தேஷ்பாண்டே இனாம்
இந்த இனாம் நிலங்களை மும்பையில் பார்க்கலாம். தேஷ்முக் வருவாய் துறையினருக்கு, தேஷ்பாண்டே காவல் துறையினருக்கு கொடுக்கப்படும் இனாம்.

அமாம் மற்றும் கட்டுபாடி இனாம்
இந்த இனாம் நிலங்களை சித்தூர், திருப்பதி பகுதிகளில் பார்க்கலாம். ராணுவ வீரர்களுக்கு இனாமாக கொடுப்பப்பட்டவை.

தேசபந்தம் இனாம்
நீர்க்காவல், நீர்ப்பிடிப்பு காவல், மடை காவல் பார்க்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். தமிழகத்தில் இந்த இனாம் பரவலாக சிறிய பரப்பளவுகளில் கொடுக்கப்பட்டு உள்ளன. கிராம தலைவர், கிராம கணக்கர், தலையாரி, வெட்டியான்களுக்கு கொடுக்கப்படுவதை களிங்குல மானியம் என்பர். கிராம மருத்துவர், கருமான், தச்சர், வண்ணார், ஜோசியர் ஆகியோருக்கு கொடுக்கும் மானியம் தேசபந்த மானியம்.
இப்படி பல மானியங்கள், பத்திர பதிவுகளில் ஆவணமாகி, பிறகு மானிய முறைகள் ஒழிக்கப்பட்டு அவை எல்லாம் வருவாய் கணக்கில் பட்டாவாகி இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பெங்களூரில் இன்னும் ‘ஏ’ கணக்கு தனியாகவும், ‘பி’ கணக்கு தனியாகவும் இருப்பதைக் காணலாம். ‘ஏ’ கத்தா ‘பி’ கத்தா என்று அங்கு சொல்வதைக் கேட்கலாம். பொதுவாக ஒரு சொத்து வாங்கும் போது அதன் பூர்வீக வரலாற்றையும், தற்போதைய சொத்து வரலாற்றையும், தொடர்புப் படுத்திப் பார்க்கும் போதுதான் நமக்கு உண்மையான தன்மை தெரிய வரும்.

– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்
8110986111

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]