ஜேசி பென்னி, கேமார்ட், சியர்ஸ் போன்ற பெரிய, பெரிய நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வால்மார்ட் முன்னணிக்கு வருவதற்குச் சின்ன யோசனைதான் காரணம். வால்மார்ட்டை உருவாக்கிய சாம் வால்டன் தனது யோசனையில் நம்பிக்கை வைத்திருந்தார். பெரிய கண்டுபிடிப்புத்தான் தேவை என்று காத்திருக்கவில்லை.சாம் வால்டன் சொல்வார். நான் ஏதாவது ஒரு பொருளுக்கு ஒரேயொரு டாலர் அதிகமாகத் தர வேண்டும் என்றாலும் அதன் பின்னணியை யோசிப்பேன். யாரோ ஒருவருடைய இயலாமை காரணமாகத்தான்...
பொதுவாக இந்திய தொழில் முனைவோருக்கு, மகன்கள் பிறக்காமல் மகளோ அல்லது மகள்களோ மட்டும் பிறந்து விட்டால், எதிர்காலத்தில் இந்த தொழில்களை எல்லாம் யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி பிறந்து விடும். நம்முடைய நாட்டில் மகள் என்றால் இன்னொருவர் வீட்டுக்குப் போகிற பெண் என்ற நினைப்புதான் பெரும் பாலான பெற்றோருக்கு இருக்கிறது. மகள் மட்டும் பிறந்துள்ள சில தொழில் குடும்பங்களில் மகளை வாரிசாக்கி, அவரை அதற்கேற்ப சிறிது சிறிதாக நிர்வாகத்துக்கு கொண்டு...
பயண ஏற்பாடு மற்றும் சுற்றுலாத் தொழில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் தொழில்களில் ஒன்றாகும். சில நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கு சுற்றுலாத் தொழிலையே நம்பி இருக்கும் நிலையும் உள்ளது. மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை வசூலித்து, சுற்றுலா அழைத்துச் செல்லும், சிறிய அளவில் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் முதல், பன்னாட்டு அளவில் பயண மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தரும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. கண்டிப்பாக வரிசையில்...
இருபத்தி நான்கு ஆண்டு கால இசைப் பயணத்தில் கிட்டார் வாசிப்பாளராக, மேடை இசையமைப்பாளராக, மெல்லிசைப் பாடகராக ஒலிப்பதிவாளராக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவர், திரு. ஸ்டீபன் ராயல். திரைப்பட                 இயக்குநர் சஞ்சய்ராம் உதவியுடன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இனி அவர் கூறியதிலிருந்து; "எனக்கு சொந்த ஊர் எல்லப்பட்டி. மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ளது. நான், என் தாய் தந்தைக்கு...
இன்று நிறைய பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களில் சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என கேட்கின்றனர். அவர்களின் சிந்தனைக்காக சில தொழில்களின் பட்டியல் இதோ:                            அழகுக்கலை பார்லர் மற்றும் பயிற்சி மையம் பெண்கள், ஜிம், கிரச், நர்சரி பள்ளி, நர்சரி (செடிகள்/ கன்றுகள்) விற்பனை, டிடிபி...
தமிழ்நாட்டில் சிறு, குறுந் தொழில்கள் நலிவடைய என்ன காரணம்? அவ்வாறு நலிவு அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆராய்ந்து திரட்டிய சில முதன்மையான வழிகாட்டல்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. தொடங்கும் முன் சந்தை ஆய்வு செய்ய வேண்டும். தொடங்கிய பின் முழுக் கவனம் செலுத்த வேண்டும். 100% கவனமும், அக்கறையும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். பணம் இருக்கிறது; கடனாக கிடைக்கிறது; என்பதால் எந்த தொழிலையும் தொடங்கக் கூடாது. எந்த...
அந்த உணவகத்தின் உரிமையாளர் மலர்முகிலனுக்கு, உணவகத்தில் இருந்து தொலைபேசி வந்தது. பேசியவர் தலைமை சமையல்காரர். ''சார், நீங்க வச்சிருக்கிற சூப்பர்வைசர், எங்களை எல்லாம் மோசமாக நடத்துகிறார், அவர் இருந்தா எங்களால வேலை செய்ய முடி யாது, நாங்க எல்லாம் வேலையை விட்டுப் போறோம்.'' ''நீங்க எல்லாம் என்றால்..?'' ''அவரைத் தவிர மற்ற எல்லோரும்..!'' ''ஒருவரை வேலைக்கு சேர்ப்பதும், வேலையை விட்டு அனுப்புவதும் என்னுடைய வேலை, அதை நீங்கள் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்? ''நேற்று, பணியாளர்...
தமிழ்நாட்டில் உள்ள பெரிய மீனவ கிராமங்களில் நொச்சிக்குப்பமும் ஒன்று. இது சென்னை மெரினா கடற்கரையை யொட்டி அமைந்துள்ளது. மீன்பிடித் தொழிலில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஈடுபடுகின்றன. துறைமுகப் பணி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த வேலைகளில் படித்த இளைஞர்கள், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிற்றுண்டி கடை நடத்து வோர், விளையாட்டுப் பொருட்களை விற்கும் சிறு வியாபாரிகள், கூலித் தொழி லாளர்கள், இப்படி... இப்பகுதி மக்களை பிரிக்கும்போது,...
பத்திரிகை உலகில் திரு.சாவித்திரி கண்ணனை அறியாதவர்கள் அரிதாகவே இருப்பர். 1985-ம் ஆண்டில் இத்துறையில் கால் பதித்து கடந்த 29 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். ஊடகப் பணி தவிர, சமூக நோக்கோடு அவ்வப்போது அவர் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்டன. எழுதுவதோடு நின்றுவிடாமல், பிணியின்றி மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில், ஏராளமான இயற்கை உணவு முகாம்களை...
நாற்பத்தி இரண்டு சிறு மற்றும் குறுந் தொழில்கள் செய்வதற்கான பயிற்சியைத் தருகிறது, சிப் சிஸ்டம் நிறுவனம். இந்த நிறுவனம், சென்னை, மேற்கு மாம்பலத்தை முதன்மையிடமாக கொண்டு                 செயல்பட்டு வருகிறது. திருச்சியில் ஒரு கிளையையும் தொடங்கியுள்ளது. அண்மையில் புதிதாக தொடங்கியுள்ள தொழில் பயிற்சிகளைப் பற்றி அதன் தொழில் நுட்ப இயக்குநர் திரு எம். கார்த்திகேயன் கூறியதாவது; "செல்பேசி பழுது பார்த்தல், கணினி...