கடந்த ஃபெப்ரவரியில், மெம்பிஸ் நகரில், ஒரு கண்காட்சி மையம் நடத்தப்பட்டது. ஏராளமான வேளாண் துறை மற்றும் வர்த்தக வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு சார்லஸ் பாரோன் என்பவர், பங்கேற்றவர்களின் உணவுத் தட்டுகளில் துருவிய முட்டைகளை வைத்துப் பரிமாறினார்.
விதைகளின் விற்பனைச் சந்தை அவரது குடும்பத் தொழிலாகவே மாறிவிட்டது. குறைந்த லாபத்திற்கு இயற்கை விதைகளை உற்பத்தி செய்ய, மிகக் கடினமாக உழைக்கிறார் பாரோன்.
பாரோன், உழவர்களின் வர்த்தக நெட்ஒர்க் (எஃப்பீஎன்) நிறுவனத்தின் கூட்டு நிறுவனர். இவரது கூட்டு நிறுவனர் க்ளென்னர் பெர்கின்ஸ். ஐந்து ஆண்டுகள் கடந்த இந்த நிறுவனம், மக்காச் சோளம் மற்றும் சோயா பீன்ஸ் விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம். இப்போது பெரும்பாலான உழவர்கள் மரபியல் வழியில் மேம்படுத்தப்பட்ட விதைகளைத்தான் வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனை உடைத்து, இயற்கை விதைகளின் மரபை மாற்றாமல், வலுவூட்டி விற்பனை செய்வதன் மூலம், மரபு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த மரபு மாற்றப்பட்ட விதைகளில் களைகள் வளர்வதைத் தடுக்கும் ஆற்றலும், பூச்சிகளை நெருங்க விடாமல் தடுக்கும் ஆற்றலும் மரபியல் பண்பாக இணைக்கப்படுகின்றன.. இதனால் இத்தகைய விதைகள் பேட்டன்ட் உரிமையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கச் சந்தைகளை ஒருங்கிணைத்து இத்தகைய மரபு மாற்றப்பட்ட விதைகள் ஓரளவுக்கு தங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு அமெரிக்க சந்தைகளில் உழவர்கள் மரபு மாற்றப்பட்ட விதைகளுக்காக 22 பில்லியன் டாலரை செலவு செய்துள்ளனர். இது 2010 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட செலவை விட, 35 விழுக்காடு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இது அமெரிக்காவின் நிலங்கள் அதிகரித்து விட்டன என்ற பொருளை உணர்த்தவில்லை. மாறாக, இத்தகைய மரபு மாற்றப்பட்ட விதைகளின் வல்லாதிக்கம் அதிகரித்து இருப்பதையே காட்டுகிறது.
ஆனால் மரபு மாற்றப்படாத விதைகள் உள்ளூர் மொத்த விற்பனையாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் ஆன்லைனில் செய்யப்படவில்லை.
1990-களின் நடு ஆண்டுகளில் மன்சான்டோ (இப்போது பேயர் ஏஜி உரிமையாளர்) அல்லது டவ்டூபான்ட் இன்க் போன்ற நிறுவனங்களிடம் இருந்தே பேட்டன்ட் செய்யப்பட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை வாங்கவேண்டி இருந்தது. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டியிடும் அருகருகே உள்ள நிறுவனங்கள்.
தற்போது, எப்பீஎன் தகவலின் படி, இந்த இரண்டு நிறுவனங்களும் அமெரிக்கச் சந்தையில் 72 விழுக்காடு மக்காச் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் விதைகளை விற்பனை செய்கின்றன.
மேலும் பல தனித்தனியான விதை நிறுவனங்களும் அவரவர்களின் போட்டித் தயாரிப்புகளுக்காக, இதே மரபு மாற்றப்பட்ட விதைகளுக்கான பேட்டன்ட் உரிமம் பெற வேண்டியுள்ளது.
“மேற்சொன்ன முதன்மை நிறுவனங்கள் இரண்டும், இதற்கான நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளன” என்கிறார் பாரோன்.
இதற்கு இவரது தீர்வு, மரபு மாற்றப்படாத விதைகள். இதன் மூலம் இத்தகைய முதன்மை நிறுவனங்களுக்கு கடினமான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார். இதற்கு உழவுத் தொழில்நுட்பம், வேதியியல் தீர்வுகள், நவீன இனப்பெருக்க முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான் என்கிறார் பாரோன்.
மரபு மாற்றப்படாத இயற்கை விதைகளின் விலையை குறைவாகவே பாரோன் வைத்திருக்கும் காரணம், இத்தகையை விதைகளை தங்கள் நிறுவனம் தேர்ந்தெடுத்த பயிர் வளர்ப்பவர்கள் மூலம், நேரடியாக உற்பத்தி செய்து, எந்த இடைத் தரகர்களும் இல்லாமல், கொள்முதல் செய்வதுதான்.
இப்போது எப்பீஎன் நிறுவனத்தின், மரபு மாற்றப்படாத இயற்கை மக்காச் சோளம் விதைகள், எஃப்2எஃப் என்ற ஜெனட்டிக்ஸ் நெட்ஒர்க்கின் பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பை (பேக்) விதை 115 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மரபு மாற்றப்பட்ட விதை ஒரு பேக், 270 டாலர் ஆகும். இரண்டு மடங்குக்கும் அதிகம். இருந்தாலும் எப்பீஎன் நிறுவனம் மரபு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரானது அல்ல.
முறையான பேட்டர்ன் உரிமை கிடைத்தால், அடுத்த சில ஆண்டுகளில், எஃப்பீஎன் மூலம் மரபு மாற்றப்பட்ட விதைகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். உழவுத் தொழில்நுட்பத்தில், மேலும் பல தொழில் முனைவோர்கள், முதலீடு செய்ய முன்வந்திருப்பது தன்னை மகிழ்ச்சி படுத்துவதாகவும், உழவர்களுக்கான மேலும் பல கருவிகள் உருவாக்கப்படுவதை தான் வரவேற்பதாகவும் சொல்கிறார்.
எஃப்பீஎன் நிறுவனம், கிட்டதட்ட 200 மில்லியன் டாலர் முதலீடுகளை, டிமாசெக், க்ளைனர் பெர்கின்ஸ், ஜிவி (முன்னாள் கூகிள் வெஞ்சர்ஸ்) உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து ஈர்த்துள்ளது.
உழவர்கள் மற்றும் இவர்களின் உறுப்பினர்கள், அவர்களது சொந்த வேளாண்மைத் தகவல் அறிவுகளைப் பதிவேற்றி, அதற்குப் பதிலாக, நிறுவனத்தினரின் மதிப்பீட்டுத் தகவலைப் பெறுமாறு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Also Read: சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இயற்கை உணவகம்!
இதனால் நாடு முழுவதும் 8000 உழவு உறுப்பினர்கள் தங்களது தகவல்களை அறித்தும், பெற்றும் பயனடைந்து வருகின்றனர். இது பென்சில்வேனியா பரப்பளவு நிலத்திற்கு ஈடானது ஆகும். இந்த மாபெரும் தகவல் வங்கி, விதைத் தொழிலுக்கு வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவந்துள்ளது.
உழவர்கள் ஒரே பொருளுக்கு ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் வெவ்வேறு விலைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இடம், சூழல், காலம் மற்றும் இதர அம்சங்களைப் பொறுத்து, சில இடங்களில் இரண்டு பங்கு அதிக இலாபம் தருவதாகவும் அமைகிறது.
நூற்றுக்கணக்கான உண்மையான பண்ணைகளின் செயல்திறன்களையும் இவர்கள் சரிபார்த்து, தொழிலறிவை வளர்த்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு பாரோன் ப்ரோகிராம் மேலாளராக கூகிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
உழவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் எல்லா மேம்பாட்டுத் தகவல்களையும் பெற முடியும் – மகசூலைப் பெருக்குவது உட்பட. உழவர்களின் உற்பத்தி பெருகினாலும், அமெரிக்க வேளாண்மை வருமானம் உலகளவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக 46 விழுக்காடாக சரிந்து விட்டது.
காரணம் மக்காச் சோளம் மற்றும் சோயாபீன்ஸின் விலை தொடர்ந்து சரிந்து வருவதுதான்.
எஃப்பீஎன் உறுப்பினர்களுக்கு பல்வேறு இடங்களின் விலை விவரங்கள் கொடுக்கப்படுவதால், இவர்களுக்கு வேளாண்மை உற்பத்திகளின் விலையை முடிவுசெய்யும் உரிமை கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.
அமெரிக்கா கார்ப்பரேஷன் வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்காவின் மரபு மாற்றப்பட்ட விதைகளின் சில்லறை விற்பனையாளர்களில் பாதிக்குப் பாதி பேர், கடந்த ஆண்டில் எஃப்பீஎன் வளர்ச்சியால், தங்கள் விற்பனையையில் இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
பேயரின் மற்றும் டவ்டூபான்ட் – இன் இயற்கை விதை சலுகை, அவர்களின் உழைப்புக்கு தகுந்த வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது.
பெம்பிஸ் பகுதியில் ஒருங்கிணைந்த பல உழவர்கள், மரபு மாற்றப்பட்ட தெரியாத விதைகளுக்குப் பதிலாக, இந்த ஆண்டு முதல், இயற்கை விதைகளுக்கு மாறப் போவதாக அறிவித்துள்ளனர். சிலர் ஏற்கெனவே இயற்கை விதைகளுக்கு மாறிவிட்டனர்.
Also Read: ஜி.எஸ்.டி. தொடர்பான கேள்விகளும், பதில்களும்
டிரன்ட் டப்ஸ் என்பவரின் குடும்பம் அர்கான்சஸ் என்ற இடத்தில் 3000 ஏக்கரில் பயிரிட்டு வருகிறது. இவர்களது வசந்த கால மக்காச் சோளப் பயிராக எஃப்2எஃப் ஜெனட்டிக்ஸ் நெட்ஒர்க் விதைகளையே பயிரிட்டுள்ளனர். இதனால் அவரது விதைச் செலவு பாதிக்கும் மேலாகக் குறைந்து விட்டது. மேலும் இது மரபு மாற்றப்படாத சோளமாக இருப்பதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.
“நாம் தேர்ந்தெடுக்கும் விதையின் விலை வெளிப்படையாக சரியானதாக இருந்தால், மகசூலிலும் நம்மால் சேமிக்க முடிவதை வெளிப்படையாகக் காண முடியும். இதுதான் நான் கையாளும் மிகப்பெரிய சவால்” என்கிறார் டாப்ஸ்.
– ஆனி லினியா