வணிகர்களுக்கான ஜிஎஸ்டி விளக்கத் தொடர்

குறைக்கப்பட்ட வீடுகளுக்கான ஜிஎஸ்டி
வீடு வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்கவும், வீட்டு வசதி துறையை உயர்த்தவும், ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் 24/02/2019 அன்று நடைபெற்றது அந்த நேரம் வீட்டு வசதிக்காக ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு மற்றும் முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம்.

ஜிஎஸ்டி வரி விகிதம்

மலிவான பிரிவிற்கு வெளியே வாழும் குடியிருப்புகளுக்கு உள்ளீட்டு வரி வரவு இல்லாமல் 5% வரி விதிக்க வேண்டும். இது தற்பொழுது 12% உள்ளது.
அதேபோல் மலிவு விலை வீடுகளுக்கான வரி விகிதம் 8% இருந்து 1% ஆக குறைக்கப்பட உள்ளது. இதற்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது. இந்த வரி விகிதங்கள் 01/04/2019 முதல் நடைமுறை படுத்தப்படும்.

மலிவு விலை வீடு எது?

மாநகராட்சி நகரங்களில் 90 சதுர மீட்டர் (968 சதுர அடி) பரப்பளவில் உள்ள ஒரு குடியிருப்பு வீடு அல்லது பிளாட்
பெரு நகரங்களில் 60 சதுர மீட்டர் (645 சதுர அடி) பரப்பளவில் உள்ள ஒரு குடியிருப்பு

வீடு அல்லது பிளாட்

நகரம் அல்லது பெரு நகரம் ஆகிய இரண்டிலும் ரூ. 45 லட்சம் வரை மதிப்பு உள்ள குடியிருப்புகளுக்கு மட்டும் இது பொருந்தும்.

பெருநகரங்கள் என்பது சென்னை பெங்களூர், தில்லி என்சிஆர் (ழிசிஸி) (டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத், குர்கான், பரிதாபாத்), ஜதராபாத், கல்கத்தா மற்றும் மும்பாய் (முழு ழிவிஸி) ஆகிய இடங்களை குறிக்கும்.

டிடீஆர், ஜெடீஏ வரி விலக்கு

டிடீஆர் (TDR), ஜெடீஏ (JDA) நீண்டகால குத்தகை, பிரிமியம் போன்ற எஃப்எஸ்ஐ (FSI) மேம்பாட்டு உரிமை ஜிஎஸ்டி செலுத்தும் குடியிருப்புகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். இந்த திட்டத்தின் விவரங்கள் ஒரு அலுவலர் குழுவால் நிர்வகிக்கப்பட்டு ஜிஎஸ்டி கவுன்சிலால் இந்த நோக்கத்திற்காக குறிப்பாக அழைக்கப்படும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும்.

சிபாரிசுகளின் நன்மைகள்

புதிய வரி விகிதங்கள் கோட்டுபாடு அடிப்படையில் ஏற்கப்பட்டதால் கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1% ஆக குறைக்கப்பட்டதால், வீடு வாங்குபவர் நியாயமான விலையை பெறுகிறார்.

வாங்குபவர் அல்லது நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படுகிறது. 1% ஜிஎஸ்டி ஆக இருப்பதால் உள்ளீட்டு வரி வரவு அளிக்காமல் இருப்பது ஒரு சிக்கலாக இருக்காது.
திட்டத்தின் முடிவில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவு நீக்கப்பட்டு வீடு வாங்குபவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

துறைக்கான பணப்புழக்க சிக்கல், வளர்ச்சி உரிமைகள், நீண்ட கால குத்தலை (பிரிமியம்), எஃப்எஸ்ஐ போன்றவற்றில் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது.

கட்டிட அமைப்பாளர்கள் அல்லது வணிகர்களுக்கான வரி விகிதம் மற்றும் இணக்கம் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளது.

– சு. செந்தமிழ்ச் செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here