இனி எல்லாம் மின்சார வண்டிகளே !

FILE - In this Saturday, June 24, 2017, file photo, a Tesla car recharges at a charging station at Cochran Commons shopping center in Charlotte, N.C. On Monday, Sept. 11, 2017, Tesla Inc. announced that more charging stations are on the way. The stations will be installed at places such as supermarkets and shopping centers, and in cities like Chicago and Boston. (AP Photo/Chuck Burton, File)

இன்றைய உலகில் மின் வண்டிகளுக்கு மிகப்பெரிய சந்தை ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தையை இன்னும் பெரிதாக்க உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சைனா திட்டமிட்டு உள்ளது. இது தானியங்கி வண்டிகளை உருவாக்கும் மிகப்பெரிய நிறுவனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில், சைனாவில் வண்டிகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களான டயோட்டா மோட்டார் & ஜெனரல் மோட்டார் மற்றும் சைனா நாட்டின் உள்நாட்டு நிறுவனங்களான பிஒய்டீ மற்றும் பீஏஐசி மோட்டார் போன்ற நிறுவனங்கள் எல்லாம், தாங்கள் புதிதாக உற்பத்தி செய்ய விரும்பும் மின்னாற்றல் வண்டிகளுக்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்து உள்ளன.

தனி மின்வண்டிகள் – ஹைபிரிட் வண்டிகள்

இந்த ப்ராஜெக்டின் படி, புதிய ஆற்றல் வண்டிகள் (என்இவி) அல்லது எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இணைந்து இயங்கும் ஹைபிரைட் வண்டிகள், முழுக்க முழுக்க மின்கலத்தில் (பேட்டரி) செயல்படும் வண்டிகள் மற்றும் ஃபியூயல் செல் ஆட்டோக்களுக்கான ப்ராஜெக்ட்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

அந்த நாட்டு அரசு, 2019 முதல், சைனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்லது உள்நாட்டில் பயன்படுத்தப்படும் வண்டிகள் பசுமையானதாக (சுற்றுச் சூழலுக்கு ஏற்றதாக) ­இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளது.

எரிபொருளில் இயங்கும் வண்டிகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில், முழு உலகத்திற்கும் ஆகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளன. அனைத்து உலக நாடுகளும் கரியமில மாசுவைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில், சைனாவில் கரியமில மாசுவை அதிகளவில் ஏற்படுத்தும் வண்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் சரி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைத் தடுப்பதில், அரசின் போதுமான புள்ளிகளைப் பெறாத நிறுவனங்களின் மீதும் சரி, சைனா அரசு எச்சரிக்கையும், தண்டமும் (ஃபைன்) விதித்து வருகிறது.
பசுமை வெறியில் சைனா

இதனைப் பற்றி கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், ‘ஆற்றல் மற்றும் போக்குவரத்துக்கான சைனா நடுவத்தின் இயக்குநர் யுன்ஷி வாங்க், குறிப்பிடும் போது, “இது இதர உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரி மட்டுமல்ல, இது உலகளவில் ஒரு நடைமுறை மாற்றத்தை (கேம் சேஞ்சர்) ஏற்படுத்தும் என நம்புகிறார்.

இது உலகளவில் அதிகளவில் மாசு ஏற்படுத்தும் அமெரிக்காவைக் குறிவைத்து சொல்லப்பட்டது என்கிறார்கள் வர்த்தக வல்லுநர்கள். தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், மைலேஜ் தேவையைக் கருத்தில் கொண்டு, மாற்று எரிபொருளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து பின்வாங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், சைனா மின் வண்டிகளைக் கொண்டு எதிர்கால உலகை அமைப்பதில் மரண வெறியில் (டெட் – சீரியஸ்) ஈடுபட்டு உள்ளது.

இதன் மூலம், எரிபொருள் இறக்குமதிக்காக, மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பது குறைவதோடு, கரி மாசுவால், சைனா நகரங்கள் புகைவதில் இருந்து தப்பிக்கவும் முடியும். அதோடு உள்நாட்டில் வண்டி உற்பத்தி செய்யும் நிறுமங்களுக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தையையும் ஏற்படுத்த முடியும் என சைனா நம்புகிறது.
வரப்போகும் மின்-சந்தை

சைனாவின் சந்தையைப் பொறுத்தவரை, மின் வண்டிகளை உற்பத்தி செய்து, தங்களது இலக்கை பெருமளவில் எட்டி வருகின்றன. வரப்போகும் 2025 முதல், ஆண்டுக்கு சராசரியாக, ஏழு மில்லியன் மின் கார்களை விற்பனை செய்ய சைனாத் தலைவர்கள் விரும்புகின்றனர்.

அல்லது தாங்கள் உற்பத்தி செய்யும் கார்களில் 20 விழுக்காடு மின் கார்களாக இருக்க வேண்டுமென அறிவுறுத்துகின்றனர். இந்த கார்கள் எரிபொருள் / மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் கார்களாகவோ அல்லது மின்கலத்தில் (பேட்டரி) இயங்கும் கார்களாகவோ இருக்கலாம்.

சைனாவில் கடந்த ஆண்டு விற்பனையான வண்டிகளில் நாற்பது விழுக்காடு பங்காற்றி இருக்கும், உலகின் மிகப்பெரிய வண்டி உற்பத்தி நிறுவனமான ஓல்ஸ் வேகன் ஏஜி, தமது நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளில், சைனா முழுவதும் நாற்பது உள்ளூர் புதிய மின் வண்டிகளை உற்பத்தி செய்யும் மையங்களை அமைக்கப் போவதாக அறிவிப்பு கொடுத்து உள்ளது.

இது அரசின் இலக்கை (டார்கெட்) எட்டும் வகையில் செயல்படும் என்றும் அறிவித்து உள்ளது. சைனா அரசின் பசுமை இலக்குப் புள்ளிகளின் (கிரடிட்ஸ்) படி, 300 கிமீ செல்லும் தனி மின் வண்டிக்குக் கிடைக்கும் பசுமை இலக்குப் புள்ளிகளை விட எரிபொருள் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இணைந்து இயங்கும் ஹைபிரிட் வண்டிகளுக்கு சற்றுப் புள்ளிகள் குறைவாகக் கிடைக்கும்.

இந்த விதிமுறைகள் அனைத்து வண்டி உற்பத்தியாளர்களுக்கும் பொருந்தும். தனி எரிபொருளில் செயல்படும் வண்டிகளுக்குப் பசுமை இலக்குப் புள்ளிகள் இல்லை.

பீஎம்டபிள்யூ ஏஜி நிறுவனம் கூட சைனாவில் அதிகளவில் கார்களை விற்பனை செய்து உள்ளது. இந்நிறுவனம் கூட, இரண்டு வகை தனி மின் கார்களையும், சில வகை ஹைபிரிட் கார்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது.

இருந்தாலும் சைனாவில் சில நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த இந்த பசுமை இலக்குப் புள்ளிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனைப் பற்றி குறிப்பிடும் தானியங்கித் துறை ஆய்வாளர், “இன்னும் கூட வண்டிகள் உற்பத்தி நிறுவனங்கள் மின் வண்டிகளை உற்பத்தி செய்வதில் முழுவதும் தயாராகவில்லை” எனக் குறிப்பிடுகிறார்.

வாடிக்கையாளர்களின் வரவேற்பு:

தற்போது கார் உற்பத்தியாளர்களின் காட்சிக்கூடங்களில் (ஷோரூம்ஸ்) மின் வண்டிகளும் பெருமளவில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஆன்லைனில் கூட மின் வண்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மின் சைக்கிள் முதல், மின் பைக்குகள், மின் கார்கள், மின் மூன்று சக்கர சைக்கிள்கள் விதவித மாடல்களில் உள்ளன.

ஆனால் வாடிக்கையாளர்கள் இவற்றிற்கு வரவேற்பு கொடுக்கிறார்களா என்றால், பெருமளவில் இல்லை என்றே சொல்லலாம். காரணம், இன்றைய நவீன எரிபொருள் வண்டிகளை விட, மின் வண்டிகளின் விலை அதிகளவில் இருப்பதே. இந்த மின் வண்டிகளின் மின்கலன்களுக்கே (பேட்டரிகள்) அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது.

ஆனாலும், பசுமையை நேசிக்கும் சிலர் மின் வண்டிகளை வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மின்கலன்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதால், மின் வண்டிகளின் விலையும், எரிபொருள் வண்டிகளுக்கு இணையாகக் குறையலாம் என துறைசார் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

– ஹெலன் ஜஸ்டின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here