ஜி.எஸ்.டி. தொடர்பான கேள்விகளும், பதில்களும்

நான் 150 லட்சத்திற்கும் குறைவாக வணிகம் செய்கிறேன். கலவை வரி திட்டத்தில் (Composition Scheme) கண்டிப்பாக சேர வேண்டுமா?  – ஆர். முருகன், நெய்வேலி

தேவை இல்லை. வியாபாரி உள்ளீட்டுவரி வழங்களுக்கு உண்டான வரி செலுத்தும் பட்சத்தில் கலவை வரி திட்டத்தில் இருந்து வெளியேறி இயல்பான முறையில் வரி செலுத்தலாம்.

நேர்மாறான வரி விதிப்பில் ஏதேனும் மாற்றம் உண்டா? – ரி. குணசேகரன், கணபதி

ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(4) -ல் கூறப்பட்ட நேர்மாறான வரி விதிப்பு (Reverse charge) 30.06.2018 வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(3) பிரிவு தொடர்கிறது. அதில் மாற்றம் ஏதும் இல்லை.

எல்யூடி(LUT) வாங்குவதில் ஏதேனும் மாற்றம் உண்டா? – சிவசுப்பிரமணியன், சிங்காநல்லூர்

ஆம், மாற்றம் உண்டு. தற்போது எல்யூடி (Letter of Undertaking-LUT) வாங்குவது எளிதாக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வலை வாயில் மூலமாக கணினியுடன் நேரடி இணைப்பில் தகவல்களை பதிவு செய்து DSC/EVC ஒப்பமிட்டு பெற்றுக் கொள்ளலாம். ஏஆர்என் (ARN-Application Reference Number) எண்ணைத்தான் எல்யூடி எண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பதிவு சான்றிதழில் திருத்தம் அனுமதிக்கப்படுமா? – உதயகுமார், திருச்சி

ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 28 -ன் படி ஜிஎஸ்டி வலை வாயில் மூலமாக திருத்தங்கள் ஜிஎஸ்டி அலுவலர் அனுமதி பெற்று செய்து கொள்ளலாம்.

பணி எடுத்து செய்பவர் (job worker) அவருடைய இடத்தில் இருந்து விற்பனை செய்ய முடியுமா? -முருகையன், திருச்சி

ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 143 -ன் படி முடியும். அவர் பதிவு பெற்றவராக இருத்தல் அவசியம். அல்லது முதன்மை உற்பத்தியாளர் அந்த இடத்தை கூடுதல் வியாபார இடமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

வாங்கிய விலையை விட ஜிஎஸ்டி -ல் குறைவாக விற்பனை செய்ய முடியுமா? அதன் வித்தியாசத்திற்கு உள்ளீட்டு வரி திருப்பம் வேண்டுமா? – நி. ராதாகிருஷ்ணன், கோபி

ஜிஎஸ்டி -ல் அவ்வாறு திருப்பம் வேண்டும் என்று சொல்லப்படவில்லை. குறைவாக விற்பனை செய்ய அனுமதி உண்டு.

எனது வெளிநாட்டு வாடிக்கையாளர் அவர்களுடைய பொருளை எனது நிறுவனத்தில் தயார் செய்வதற்காக மோல்டு (mould) மற்றும் பேடென்டிற்காக(patent) பணத்தை அந்நிய செலாவணியில் கொடுக்கிறார். அந்த மோல்டு என்னிடமே உள்ளது. இதற்கு பெறப்பட்ட பணத்தை ஏற்றுமதியாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது அதற்கு ஐஜிஎஸ்டி (Integrated Goods and Service Tax-IGST) உண்டா? – ஆர். முரளி கிருஷ்ணன், அம்பத்தூர்

நீங்கள் தயார் செய்த மோல்டு மற்றும் பேடென்ட் இந்தியாவை விட்டு செல்லாத வரைக்கும் அதை ஏற்றுமதியாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த பணத்தை முன்பணமாக உங்கள் பதிவேடுகளில் காட்ட வேண்டும். உங்கள் அயல்நாட்டு வணிகருக்கு அந்த பொருள் மாற்றம் செய்யாதவரை அதை ஜிஎஸ்டி வழங்கலாக கருத முடியாது. அதற்கு ஜிஎஸ்டி இல்லை.

எனது பொருளை மாற்றம் செய்து திரும்ப பெறுவதற்காக மூன்றாம் ஒருவருக்கு நான் பொருள் அனுப்புகிறேன். அவர் மேலும் சில பொருள்களை அதில் பயன்படுத்தி எனக்கு திருப்பி அனுப்புகிறார். இப்போது அவர் பயன்படுத்திய பொருள்களின் மதிப்பைக் கழித்துக் கொண்டு அவர் எனக்கு பணம் செலுத்தினால் போதுமா? இல்லை, அவர் முழுப்பணம் செலுத்தி நானும் முழுப்பணம் செலுத்த வேண்டுமா? – ஆர். முத்துக்குமார், ஆவடி

அவர் ஐடிசி (Input Tax Credit-ITC) எடுப்பதற்கு உங்களுக்கு முழுப்பணம் செலுத்தினால் சிக்கல் இல்லாமல் ஐடிசி எடுத்துக் கொள்ளலாம். அதே போல் நீங்களும் முழுப்பணம் செலுத்தி பொருளை பெற்றுக் கொண்டால் நீங்கள் ஐடிசி எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக உங்கள் பற்று சீட்டு, வரவு சீட்டு உங்கள் பதிவேட்டில் 180 நாட்களுக்குள் பணமாக கொடுக்காவிட்டால் நீங்கள் எடுத்த ஐடிசி -ஐ திரும்ப செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி விதி 16(2)(d) of the GST Act சொல்கிறது.

மின்வழி சீட்டின் குறிப்பிட்ட தவணைக் காலம் முடிந்துவிட்ட பின்னரும் பொருள் போய் சேரவில்லை என்றால் என்ன செய்வது? – ஷி. ராஜன், சேலம்

அந்த பொருளை மேற்கொண்டு எடுத்த செல்வதற்கான காலத்தை நீட்டிக்க ஜிஎஸ்டி ஆணையாளருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

தமிழ் நாட்டுக்குள்ளே இறக்குமதி பொருள்களைக் கொண்டு வருவதற்கு மற்றும் ஏற்றுமதி பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு மின்வழிச் சீட்டு உண்டா? – வீரப்பன், சின்ன சேலம்

இவை ஐஜிஎஸ்டி விதிகளின் கீழ் வருவதால் மின்வழி சீட்டு பயன்படுத்துவது நல்லது.

எனது ஜிஎஸ்டி பதிவை தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டா? – ராஜு, மதுக்கரை

ஆம். sub-section 10 of section 25 of the CGST/SGST Act -ன் படி அந்த அதிகாரிக்கு நோட்டீஸ் கொடுத்து தள்ளுபடி செய்யவும், பதிவு வழங்க அதிகாரம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here