ஒரு தாயும் அவருடைய மகளும் வரைபடமும்

குடும்பத் தலைவியான தாய் ஒருவர் மகளிர் மாத இதழ் ஒன்றை மிக ஆழ்ந்து படித்துக் கொண்டு இருந்தார் அறிவுத்திறன் மிக்க சுறுசுறுப்பான அவருடைய மகள்” அது என்ன? இது என்ன?” என்றவாறு கேள்விகளுடன் அந்த குடும்பத் தலைவியை மகளிர் மாத இதழை தொடர்ந்து படிக்க முடியாமல் தொந்திரவு செய்து கொண்டு இருந்ததால், தம் மகளின் தொந்திரவை தவிர்க்கும் பொருட்டு அருகில் இருந்த உலக வரைபடம் ஒன்றை தாறுமாறாக கிழித்து, அவைகளை ஒன்றிணைத்து முழுமையான உலக வரைபடமாக செய்யுமாறு பணித்து விட்டு தொடர்ந்து மகளிர் மாத இதழை படித்துக் கொண்டு இருந்தார். அந்த தாய்.

சுறுசுறுப்பான அறிவுத்திறன் மிக்க அவருடைய மகள் உடன் ஓரிரு நிமிடங்களில் அவைகளை ஒன்றிணைத்து முழுமையான உலக படத்தை “அம்மா! இதோ பார் நான் முழுமையான உலக வரைபடத்தை ஒருங்கிணைத்து விட்டேன்” என கொண்டு வந்து காட்டினாள். கிழிந்த துனுக்குகளை கொண்டு முழுமையான உலக வரைபடத்தை நாள் முழுக்க முயன்றாலும் ஒருங்கிணைக்க முடியாது. அதனால் நாமும் நம் மகளின் தொந்திரவு இல்லாமல் தொடர்ந்து மகளிர் மாத இதழை படித்து விடலாம் என எண்ணினால்.

இவ்வளவு விரைவில் ஒருங்கிணைத்து கொண்டு வந்து விட்டாளே என அந்த குழந்தையின் தாய்க்கு மிகவும் வியப்பாகி விட்டது. உலக வரைபடம் மிகச்சரியாக ஒருங்கிணைந்து இருந்ததை கண்டு” மகளே! எவ்வாறு இவ்வளவு விரைவில் கிழிந்த துனுக்குகளை கொண்டு முழுமையான உலக வரைபடத்தை ஒருங்கிணைத்து உருவாக்க முடிந்தது?” என வினவினார் அந்த தாய். அதற்கு அவருடைய மகள் “அது ஒன்றும் அவ்வளவு கடினமான பணியில்லையம்மா உலக வரைபடத்தை திருப்பி பாருங்கள்!” என்றாள் அவருடைய மகள்.

திருப்பி பார்க்கும் போது ஒரு முழுமையான மனிதனின் உருவப்படம் இருந்தது “அம்மா! நான் உலக வரைபடத்தின் மறுபுறமான பின் பகுதியில் இருந்த மனிதனின் படத்தை மிகச் சரியாக பொருத்தினேன், இந்த பக்கம் முழுமையான உலக வரைபடம் உருவாகி விட்டது அவ்வளவுதான்!” என அடுத்து தொந்திரவை கொடுக்க தொடங்கினால் தன் தாய்க்கு.

அவ்வாறே நம் வியாபார நடவடிக்கைகளின் போது தீர்வு செய்ய முடியாத அளவிற்கு நம் முன் எழும் எந்த ஒரு சிக்கலையும் அதன் மறுபுறத்தை பார்வையிட்டு எளிய வழியில் மிகச்சரியாக தீர்வு செய்ய முடியும் என்ற செய்தியை மனதில் கொள்ள வேண்டும்.

– வசந்தகுமாரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here