இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை வலைப் பின்னல் (1G ) 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பின்பு தொழில் நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தில் 2G, 3G மற்றும் தற்காலத்தில் நம் பயன்படுத்தும் 4G தொழில் நுட்பமும் மிக விரைவான இணையதள சேவையை வழங்கினாலும் அடுத்த தலைமுறை நெட் ஒர்க்குக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அவ்வாறான அடுத்த தலைமுறை நெட்ஒர்க் ஆக 5ஜி அமைந்து உள்ளது.
5G நெட்ஒர்க்
5G நெட்ஒர்க் நான்காம் தலைமுறை நெட்ஒர்க்கின் விரிவாக்கமாக செயல்படுகிறது., இது பல்வகைப்பட்ட (heterogeneous) நெட்ஒர்க்குகளின் தொகுப்பாக செயல்பட்டு மிகப் பெரிய வலைப் பின்னலாக தோற்றுவிக்கப்படுகிறது.
5G தொழில் நுட்பம் மூலம்,
> மிக விரைவாக 1Gbps தரவுகளையும், மென்பொருள்களையும், படங்களையும், வீடியோ காட்சிகளையும் தரவிறக்கலாம்.
> மிக அதிக தொலைவு வரை நெட்ஒர்க் சிக்னல்கள் கிடைக்கின்றன.
> தகவல் பதிவிறக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம் மிகக் குறைந்த நேரத்தில் (low latency) நடைபெறுகிறது
> அலைக்கற்றை (bandwidth) மற்றும் தகவல்கள் தொகுப்புமிக (payload) எளிதாக பயன்படுத்தப்பட்டு அதிக பயனர்களுக்கு சென்றடைகிறது .
> 5G அலைக்கற்றையின் வேகம் நான்காம் அலைக்கற்றையின் வேகத்தை விட ஆயிரம் மடங்காக செயல்படுகிறது .
> 5G தொழில் நுட்பத்தின் நேர தாமதம் 1 மில்லி வினாடிக்கு குறைவாகவே (low latency) உள்ளது .இதுதான் நெட்ஒர்க் ஸ்லைஸ் (network slice)தொகுப்பாக பயன்படுகிறது
> பயன்படுத்தும் திறன் 99.99 சதவிகிதம் 5G தொழில்நுட்பத்தில் கிடைக்கப்பெறுகின்றது . > மின்திறன் அளவு 90 % ஆக குறைக்கப்பட்டு திறன் சேமிக்கப்படுகிறது.
> நெட்ஒர்க் நெரிசல் உருவாகாமல் (congestion control) கட்டுப்படுத்தப்படுகின்றது.
> வலைப்பின்னல்களின் தொலைவுகளை (Location Awareness) கண்டுபிடிக்க 5G தொழில் நுட்பம் மிக அதிகமாக உதவுகின்றது.
5ஜி, ரேடியோ நெட்ஒர்க் (Radio Access Network) மூலம் அமைக்கப்பட்ட வலைப்பின்னல் ஆகும். இதிலும் பல அடிப்படை நிலையங்கள்(base station), நெட்ஒர்க் கோபுரங்கள் (Network Towers), gnodeB ரஎன்று சொல்லப்படுகின்ற அடுத்த தலைமுறை அடிப்படை நிலையமாக Next Generation nodeB செயல்படுகிறது. இதுதான் 5 Gதொழில் நுட்பத்தின் அடிப்படை நிலையமாகும்.
மேலும் 5நி தொழில் நுட்பத்தில் நெட்ஒர்க் மெய்நிகர் செயல்பாடு (Network Function Virtual) தொகுப்பு பல்வேறு வகையான நெட்ஒர்க் தொகுப்புகளை மெய்நிகர் வலைப்பின்னலாக (Virtual Network) தோற்றுவித்து ரேடியோ தொழில் நுட்ப வலைப்பின்னலாக பயனர்களுக்கு உதவுகிறது. இதுதான் IOT என்று சொல்லப்படுகின்ற தொழில் நுட்பத்தில் தானியங்கி வாகனங்களுக்கும் (Automatic Car), வேளாண் துறையில் பயன்படும் கருவிகளுக்கும், மருத்துவத்துறை, மற்றும் கணினி துறைக்கும் பயன்படுகின்றன. ஆகவே 5G யில் NFV மிக முக்கிய தொகுப்பு ஆகும்.
5G அமைப்பு
மேற்கண்ட 5G தொழில் நுட்பத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் நெட்ஒர்க் பிரிவில் பயனர் கருவிகள் (user devices) இணைக்கப்பட்டு உள்ள பிரிவில் அனைத்து வகை கணினிகளும், மொபைல் ஃபோன்களும், மற்ற நெட்ஒர்க் சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு, அவை enodeB மற்றும் ரேடியோ நெட்ஒர்க், க்ளவுட் கணினி மற்றும் எட்ஜ் கணினி (edge computing) க்ளவுட் மூலம் இணைக்கப்பட்டு மைய நெட்ஒர்க் (core network) உடன் இணைக்கப்பட்டு 5G அமைப்பு உருவாக்கப்படுகிறது .
5G மொபைல் எட்ஜ் கணினி (Mobile Edge Computing )
இந்த தொகுப்பின் மூலம் ஆன்லைன் நெட்ஒர்க் நெரிசல் குறைக்கப்பட்டு நெட்ஒர்க் செயல்பாடுகள் விரைவில் பயனருக்கு சென்று அடைகிறது.
இனி வரும் காலங்களில் 5G தொழில் நுட்பம் ஆற்றல் மிகுந்த (dynamic environment) சூழல் நுட்பமாக செயல்பட்டு பல்வேறு வகை வலைப் பின்னல்களை ஒருங்கே இணைக்கப் பயன்படும்.
நெட்ஒர்க் சிக்கல்களை (Network Complexity ) தீர்க்கப் பயன்படுகிறது,
பல தானியங்கு (automated ) தீர்வுகளுக்கும் இது மிக பெரிய அளவில் பயன்படும்.
– சி. இராம்பிரகாஷ், கணிப்பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரி, திருக்குவளை.