நாம் எப்படி நம் நேரத்தைச் செலவிடுவது என முடிவு செய்வதன் மூலம் நமக்குப் பயன் உள்ள நேரப் பொழுதுகளை அதிகரிக்கலாம். வீணாகக் கழிக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பதன் மூலம் நாம் அன்றாடம் ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை மிச்சம் பிடிக்கலாம்.
இரண்டு மணி நேரப் பயணத்தை வெற்றிகரமானவர்கள் எப்படிச் செலவழிக் கிறார்கள்? மடிக் கணினியில் (லேப்டாப்) தங்களது முக்கிய வேலைகளைச் செய்த வாறு பயணம் செய்கின்றனர். சிலர் வேலை தொடர்பான கோப்புகளைப் பார்வை யிட்டபடியோ அல்லது நல்ல புத்தகங் களைப் படித்தபடியோ, அந்த பயண நேரத்தை சரியாகப் பயன்படுத்துகின்றனர்.
நம் நேரத்தை நாம் எதன் மீது செலவ ழிக்க வேண்டும் என்பதைப் பகுத்தறிய முயல வேண்டும். நம் குறிக்கோள்கள், விருப்பங்கள் மற்றும் கனவுகளுடன் அதிகம் தொடர்புடைய செயல்களில்தான் நமது பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டும். நம் நேரம் நம் வர்த்தக இலக்கிற்குத் துணையாக இருக்கிறதா என்பதை மதிப்பிட முடியும். நாம் சற்று புகழ்பெற்ற தொழில் முனைவோராக இருக்கலாம். நம்மைத் தேடி பலர் பரிந்துரைக்காக அல்லது அற்ப செயல்களுக்கான உதவியை நாடலாம்.
அந்த நேரத்தில், அவர்கள் விரும்புவதை வாய்மொழியில் சொல்லாமல், ஒரு தாளில் எழுதித் தருமாறு சொல்லலாம். அவ்வாறு எழுதித் தந்தால், தேவைப்பட்ட நேரத்தில் நாம் அழைப்பதாகவும் சொல்ல வேண்டும்.
பெரும்பாலோர் எதனையும் எழுத்தில் எழுதித் தர விரும்புவது இல்லை. இதன் மூலம் தேவையில்லாத மற்றும் விரும்பாத நபர்களிடம் இருந்து நமது பொன்னான நேரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நம் வாழ்வின் முன்னுரிமைகளை மறு மதிப்பீடும் மறு நிர்மாணமும் செய்வது முக்கியமான ஒன்று. நாம் உண்மையிலேயே மிகவும் வெற்றிகரமானவர்களாக இருக்க விரும்பினால், நம் நேரத்தை நன்கு மேலாண்மை செய்வது மட்டும் முக்கியம் அல்ல; நம் குறிக்கோளுடன் தொடர்பு இல்லாதவற்றையும் மதிப்பிட வேண்டும்.
நாம் செய்ய வேண்டிய வேலைகள், சந்தேகங்கள், குப்பைகள் அல்லது அழுக்குத் துணிகள் நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது தொழிலகத்திலோ சேர்வதற்கு அனுமதிக்கக் கூடாது.
அசுத்தம், ஒழுங்கின்மை மற்றும் சந்தேகம் பயங்கரமானதாக மாறினால், நாம் அவநம்பிக்கை, முழுக்க நம்பிக்கையற்ற தன்மை அல்லது தோல்விகரமாக உணர் வோம். இத்தகைய ஒழுங்கின்மையால், வெற்றியாளர்களும் தங்கள் நன்னம் பிக்கையை இழக்க நேரிடலாம்.
ஒழுங்கின்மை நம்மை இறுக்கம் மற்றும் ஏமாற்றத்திற்குள் சிக்க வைப்பதோடு, நம் வாழ்வை அனுபவிப்பதற்கான நேரத்தை நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கும்.
அற்பமானதைத் தவிர்க்கவும் ஒழுங்கமை வுடன் இருக்கவும், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும், இப்போதே தொடங்கி விட வேண்டும்.
–ஆனி லினியா