ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படும் ‘தி பப்பி’ The Puppy – 1) என்ற சூட்கேஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. இரண்டு சக்கரங்களால் இயங்கும் இந்த சூட்கேஸ், உங்களைப் (சூட்கேஸ் உரிமையாளரை) பின்தொடர்ந்து வர சென்சார்களைப் பயன்படுத்துகிறது.
இந்த சூட்கேசை ஒருமுறை சார்ஜ் செய்தால், மணிக்கு 10 மைல் வேகத்தில், ஏறக்குறைய 30 மைல்கள் வரை இயங்குகிறது. இந்த சூட்கேசில் தனியாகப் பிரித்து மாற்றக் கூடிய லித்தியம் – அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் கடினமான பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், இது காலியாக இருக்கும் போதே ஒரு சில பவுண்டுகள் எடை கொண்டதாக இருக்கிறது.
மேலும், இந்த சூட்கேசில் விரல் ரேகையை ஸ்கேன் செய்யும் லாக் உள்ளது; மற்றும் செல்லும் வழியை, இருட்டிலும் தெளிவாகக் காட்டும் வெளிப்புற விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் விலை ஐநூறு பவுண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதர ஸ்மார்ட் லக்கேஜ்களில் நான்கு அல்லது ஆறு சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ள சூழ்நிலையில், இந்த பப்பி-1 இல், இரண்டே சக்கரங்களில், வேகமாக உரிமையாளரைப் பின்தொடர்ந்து வருகிறது.
இந்த சூட்கேசை, ரிமோட் கன்ட்ரோல் அல்லது ஸ்மார்ட் ஃபோனால், அறுபது அடி தொலைவில் இருந்தே இயக்க முடிகிறது. இந்த சூட்கேசை சைனாவில் உள்ள சாங்காய் ரன்மி டெக்னாலஜி நிறுவனத்தின், லக்கேஜ் உருவாக்கும் பிரிவின் உற்பத்தி மேலாளர் கிளார்க் வூ() என்பவர் உருவாக்கி உள்ளார்.
மேலும் இதே சூட்கேசை மேம்படுத்தி, சூரிய ஆற்றலால் இயங்கும் படி வடிவமைக்கப் போவதாகவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
– ஜஸ்டின்