மென்பொருள் தயாரிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மெஷின் லேர்னிங் கருவிகளை வர்த்தக நோக்கில் வழங்க முன்வந்து உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் மென்பொருள் மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்கிறது. அதோடு ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு, மொழி பெயர்க்கவும் செய்கிறது.
முக்கியமாக மாண்டரீன் மொழியில் இருந்து ஸ்வாஹிலி மொழிக்கு சிறந்த முறையில் மொழி மாற்றமும் செய்கிறது. மேலும் உலகின் சிறந்த சதுரங்கம் போன்ற விளையாட்டு வீரர்களை வெற்றி கொள்ளவும் செய்கிறது.
சந்தை நம்பிக்கை தருகிறதா?
பொதுவாக செயற்கை அறிவு, தகவல்கள் மற்றும் பழக்கத்தில் இருந்து (எக்ஸ்பீரியன்ஸ்) கற்றுக் கொண்டு, சில முன்கணிப்புகளை சிறப்பாக செய்கிறது. இது செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை இன்னும் ஆற்றல்மிக்கதாக மாற்றுகிறது.
இது பல்வேறு தகவல்களில் இருந்து, மனிதர்களை விட, அதிக சிக்கலான அல்லது நுட்பமான தொடர்புகளைக் கண்டறிந்து, இத்தகைய கணிப்புகளைச் செய்கிறது. எனவே மென்பொருள் தயாரிப்பாளர்கள் இத்தகைய மென்பொருகளை வர்த்தகரீதியாக தயாரித்து சந்தைப்படுத்தும் நம்பிக்கையில் உள்ளனர்.
ஆனால் பெரும்பாலான பணியாளர்களுக்கு இத்தகைய செயற்கை நுண்ணறிவு எந்திரங்களின் மீது இது நம்பிக்கை வைப்பது கடினமாக இருப்பதால், அவர்களை வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனங்கள், இத்தகைய செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களுக்காக பெரும் தொகையை செலவிடுவதற்கு முன்வருவது இல்லை.
உடல் நலப் பாதுகாப்பு, நிதித் துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளில் உண்மையும் கூட. மேலும் காப்பீட்டுத் துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் பயன்படுத்தப்படுவது ஒரு சில குழப்பங்களையும் ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
மனிதக் கண்ணோட்டம் – எந்திரக் கண்ணோட்டம்:
ஒரே வகை உடல்நிலையிலும், வயதிலும் உள்ள இரண்டு வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு மட்டும் ஏன் அதிக அளவு காப்பீட்டுத் தவணை வாங்கப்படுகிறது என்றும் அமெரிக்க காப்பீட்டுத் துறை கேள்வி எழுப்பி உள்ளது. ஐரோப்பாவில், பொதுத் தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், “செயற்கை அறிவின் (எந்திர அல்காரிதம்) முடிவுகள், ஒரு மனிதனின் வெளிப்படுத்தும் உரிமையைப் பாதிக்கிறது” என கருத்து தெரிவித்து உள்ளது.
ஒருவர் கடன் வாங்க முனையும் போது, அனைத்து விவரங்களும் சரியாக இருந்தும், ஒரு கணினி, “முடியாது” (நோ) என சொன்னால், அவருக்குக் கடன் கிடைப்பது இல்லை. இதனால் வங்கி ஊழியர்கள் மீண்டும் வேறு வகையான முறையில் விவரங்களைக் கொடுத்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டி உள்ளது.
கண்நோய்களை கண்டறியும் நிறுவனம்
ஆனால் ஐபிஎம் சர்வே, சுமார் 5000 வகையான வர்த்தகங்கள் இந்த செயற்கை அறிவைச் சார்ந்து செய்யப்படுவதாக சொல்கிறது. அங்குள்ள பணியாளர்களில் 82 விழுக்காட்டினர், இத்தகைய செயற்கை அறிவைப் பயன்படுத்தி, பணிகளைச் செய்வதில் ஆர்வமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் மென்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறையினர், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் எப்படி சிந்தனை செய்கிறது என்பதைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர். கூகிள் நிறுவனம், பெரும்பாலும் தங்களது முடிவு எடுக்கும் செயல்பாடுகளில் மெஷின் லேர்னிங் அல்காரிதம்களை பயன்படுத்தி வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள ‘மூர்ஃபீல்ட்ஸ்” கண் மருத்துவமனை, இந்த மெஷின் லேர்னிங் மென்பொருள் மூலமாக, ஐம்பது வெவ்வேறு வகையான கண் நோய்களைக் கண்டறியப்பட்டு வருகிறது. இது இங்கு உள்ள கண் மருத்துவ வல்லுநர்களுக்கு இந்த செயற்கை அறிவின் மீது இன்னும் அதிக நம்பிக்கையைக் கொடுக்கிறது.
– ஜஸ்டின் ராபர்ஸ்