இதற்கு கம்பெனி சட்டம் 2013 பிரிவு 366 முதல் 374 வரையிலும், மேலும் நிறுவனங்கள் (பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற) விதிகள், 2014. ஆகியவை நமக்கு வழிகாட்டுகின்றன. இதற்கு பங்குதாரர் நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும், பொறுப்புகளும் சேர்ந்த வணிகத்தை, பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றைத் தயாரிக்க வேணடும்.
பிரைவேட் லிமிடெட் ஆக விரும்பும் அந்த பங்குதாரர் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 2 கூட்டாளிகளாகவாவது இருக்க வேண்டும்.
கூட்டு நிறுவனத்தின் அனைத்து கூட்டாளிகளும் புதிய பிரைவேட் லிமிடெட்டில் பங்குநர்களாக மாறும் நாளில், இவர்கள் ஏற்கனவே வைத்து உள்ள நிறுவனத்தின் புத்தகங்களில் இருக்கும் மூலதன கணக்குகளின் அதே விகிதத்தில் பங்குகளாக மாற்றப்படும். இவ்வாறு மாற்றம் செய்வதற்கு பெரும்பாலான கூட்டாளிகளின் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
இதற்கு பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் கூட்டி அந்தக் கூட்டத்தில் பின்வரும் செயல்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
பங்குதாரர் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றம் செய்வதற்கு தேவையான அனைத்து ஒப்பந்தங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கையாளுவதற்கான அதிகாரத்தை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கூட்டாளிகளுக்கு வழங்க வேண்டும்.
அனைத்து கூட்டாளிகளின் மொத்த மூலதனத்தை பங்குகளாக பிரித்தல்.
பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றி அமைப்பதை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்பந்த பத்திரம் தயார் செய்தல்.
இவ்வாறு மாற்றி அமைப்பதைக் குறித்த அறிவிப்பினை நாள் இதழ்களில் விளம்பரமாக கொடுப்பதற்கான விளம்பரப் படிவம் URC 2 -க்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
முந்தைய மூன்று ஆண்டுகளில் அந்த பங்குதாரர் நிறுவனத்தின் சொத்துகளின் மதிப்பை மாற்றி அமைக்கவில்லை என உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
பதிவு செய்வதற்காக அங்கீகாரம் பெற்றவருக்கு ஞிஷிசி என சுருக்கமாக அழைக்கப்படும் டிஜிட்டல் சான்றிதழை (Digital Signature Certificate) பெற வேண்டும்.
இயக்குநர்களின் குழுவில் இடம் பெற இருக்கும் ஒவ்வொருவருக்கும் பான், ஆதார் பெற வேண்டும். அப்போதுதான் இயக்குநர்களுக்குத் தேவையான டைரக்டர் இண்டெக்ஸ் எண் (DIN) பெறுவதற்கான படிவம் DIR – 3 -ஐ வழங்க முடியும்.
புதிய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு RUN (Reserve Unique Name) அடிப்படையில் பெயரை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
படிவம் URC-2 இல் ஒரு ஆங்கில மொழி, ஒரு வட்டார மொழி வெளியிடப் பெறும் இரு நாள் இதழ்களில் இந்த பங்குதாரர் நிறுவனத்தை தனியார் நிறுமமாக மாற்றி அமைப்பதால் பாதிப்பு எவருக்கேனும் இருந்தால் அதனை 21 நாளில் அறிவிக்க வேண்டும் என்ற விளம்பரப்படுத்த வேண்டும்.
கம்பெனி சட்டம் 4 இன்படி பதிவு செய்வதற்கான பெயர் தயாராக இருக்கின்றது எனில் படிவம் URC-1 உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் கம்பெனி பதிவாளருக்கு வழங்க வேண்டும்.
டிஜிட்டல் படிவம் INC – 7 இல் நியமிக்கப்பட்டு உள்ள இயக்குநர்கள், பங்குநர்கள் பற்றிய விவரங்களை வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து படிமுறை 9 – இல் குறிப்பிட்டு உள்ள டிஜிட்டல் படிவம் INC – 7 இன் பின் இணைப்பாக முக்கிய மேலாண்மை பணியாளர்களை பற்றிய விவரங்களுக்கான டிஜிட்டல் படிவம் INC – 8 ஐ வழங்க வேண்டும்.
அவ்வாறே படிமுறை 9 – இல் குறிப்பிட்டு உள்ள டிஜிட்டல் படிவம் INC – 7 இன் மற்றொரு பின் இணைப்பாக பங்குநர்களின் உறுதி மொழிக்கான டிஜிட்டல் படிவம் INC – 9ஐ வழங்க வேண்டும்.
தொடர்ந்து மின் – படிவம் DIR – 12 இல் யார்யார் இயக்குநர்களாக நியமிக்கப் பட உள்ளனர் என்ற பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து இறுதியாக படிவம் INC – 22 இன் படி கம்பெனி உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நிறுவனத்திற்கான பதிவு அலுவலகத்தை சரிபார்ப்பதற்கான, பதிவு அலுவலக முகவரியை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இவ்வாறான படிமுறைகளுடன் படிவம் SPICE-32, e-MOA, e-AOA ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மேலே கூறியவாறான படிமுறைகளை சரியாக பின்பற்றினால் அந்த பங்குதாரர் நிறுவனமானது புதிய பிரைவேட் லிமிடெட் ஆக, பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவு சான்றிதழ் (Certificate of Incorporation (COI)) வழங்கப்படும்
– முனைவர் ச. குப்பன்