Saturday, June 12, 2021

இதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது?

இதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...

Latest Posts

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்!

வயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...

ஆன்லைன் வகுப்பு – கண்கள், காதுகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கொரோனா உலக அளவில் பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. தொழில், வணிகம், கல்வி, விளையாட்டு, உடல்நலம், சுற்றுலா என்று அத்தனையையும் பாதித்து உள்ளது. உலக் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த சூழ்நிலையை எப்படி வெற்றி கொள்வது என்று சிந்தித்து செயல்படத் தொடங்கி விட்டார்கள். இதற்கான மருந்து கண்டு பிடிக்கும் பணியும் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. சீனா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, குழந்தைகள் மாஸ்க் அணிந்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மற்ற நாடுகளில் வீட்டில் இருந்தபடியே இணையம் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் தனியார் பள்ளிகள் அத்தனையும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்துகின்றன. வேறு வழி இல்லாமல் குழந்தைகளும் இந்த முறைக்கு பழகி வருகின்றன. பெற்றோரும் உதவி வருகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையில் குழந்தைகள் நீண்ட நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. ஹெட்ஃபோன்களை காதில் மாட்டிய வண்ணம் இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் கண்களுக்கும், காதுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

  • காதுகளில் ஹெட்ஃபோன் மாட்டுவதற்கு பதிலாக கணினியுடன் ஸ்பீக்கர்களை இணைத்துப் பயன்படுத்தலாம். அளவான ஒலி அளவை வைக்க வேண்டும். காதுகளுக்குள் செருகிப் பயன்படுத்தும் இயர்ஃபோன்களை தவிர்க்க வேண்டும். பலர் இருக்கும் இடத்தில் மற்றவர்களுக்கு தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஹெட்ஃபோன் பயன்படுத்துவதாக இருந்தால் தரமான ஹெட்ஃபோனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
  • மொபைல் ஃபோன்களில் வகுப்புகளை கவனிப்பது மாணவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். எனவே டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப்கள் என்றால் திரை பெரிதாக இருக்கும். இயக்குவதும் எளிதாக இருக்கும்.
  • தொடர்ச்சியாக முன்று மணி நேரத்துக்கு மேல் நெருக்கத்தில் இருந்து மின்னணுத் திரையை பார்த்துக் கொண்டே இருந்தால் அது கண்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தும். எனவே நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை திரையை விட்டு எழுந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் திரையில் அமரலாம். அந்த பதினைந்து நிமிடங்களில் குழந்தைகளை சிறிது தூரம் நடக்கச் செய்யலாம். இது கண்களுக்கும், உடம்புக்கும் உற்சாகம் தரும்.
  • திரைக்கு முன் உட்காருவதிலும் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும். விழிகளில் இருந்து ஒரு அடி தொலைவில் உள்ள மேஜையின் மீது திரை வைக்கப்பட்டு இருக்க வேண்டும். உயரத்தை ஏற்றி இறக்கி சரி செய்து கொள்ளக் கூடிய, எளிதல் நகர்த்துவதற்கு ஏற்ற சுழல் (ரிவால்விங்) இருக்கை வசதியாக இருக்கும். விழிகள் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழ் மட்டத்தில் திரை இருக்க வேண்டும்.
  • ஏசி அறையாக இருந்தால், ஏசி காற்று நேரடியாக குழந்தைகளின் முகத்தில் படும்படி இருக்கக் கூடாது. இது நேரம் ஆக நேரம் ஆக கண்களில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து விடும்.
  • இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து விழிகளை அகற்றி, இருபது அடி தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை இருபது வினாடிகள் பார்க்க அது கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். பார்க்கும் பொருள் பசுமையான செடியாகவோ அல்லது மரமாகவோ இருப்பது புத்துணர்ச்சியை இன்னும் அதிகரிக்கும்.

– எவ்வி

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்!

வயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...

Don't Miss

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

உன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..!

தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன? மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன? என் திறமைகள் என்ன?; என்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.