ஜிஎஸ்டி-க்குப் பிறகு ஆடிட்டர்கள் இருந்தால்தான் கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
நிறுவனத்துக்கான ஜிஎஸ்டி எண் பதிவு பெறுதல், நிறுவனத்தின் விற்பனை, சேவைகள் குறித்த விவரங்களை ஜிஎஸ்டி இணைய தளத்தில் பதிவேற்றுதல், ஒவ்வொரு பொருளுக்கும் விதிக்கப்பட்ட வெவ்வேறு வகையான ஜிஎஸ்டி வரியின்படி அதற்கான விவரங்களை முறையாக மென்பொருளில் பதிவேற் றுதல், உரிய நேரத்தில் வரியை செலுத்துதல், தாமதமாகும் போது அதனால், ஏற்படும் சிக்கல்களை சட்ட ரீதியாக எதிர் கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளை ஆடிட்டர்கள் செய்ய வேண்டி இருக்கிறது.
Also read: ஜிஎஸ்டி- முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வேண்டும்
அத்துடன் நான்கு விதமான நிலைகளில் வரி விதிப்புகள் இருப்பதால் வரி சச்சரவுகள் தொடர்ந்து வருகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கு ஆடிட்டர்கள் போன்ற வணிகவியல் வல்லுநர்களே தேவைப் படுகின்றனர். இதனால் இந்தியாவில் சுமார் 2.60 லட்சம் ஆடிட்டர்கள் இருந்தாலும், இதைக் காட்டிலும் இரு மடங்கு அளவுக்கு ஆடிட்டர்கள் தேவைப் படுகின்றனர்.
– ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்