ஜிஎஸ்டி- முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வேண்டும்

நாட்டில் சுதந்திரம் பெற்ற தொடக்க காலங்களில் தொழில் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப உலகில் அனைவரும் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப் பட்டு உள்ளன. சிறு, குறு தொழில் களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனவே, தொழில் முனைவோர் தங்கள் சிந்தனைகளை உலகளாவிய சந்தையுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மக்களுக்கு பயன்தரக்கூடிய ஒரு தொழிலை தொடங்கினால் நிச்சியதாக அவர்கள் வெற்றி பெறுவார்கள். அதேநேரம் சமூகத்துக்கும் தங்களால் முடிந்த பங்களிப்பை தொழில் முனைவோர் செய்ய வேண்டும்.

Also read: புதிய ஜி.எஸ்.டி படிவங்களை பற்றிய ஒரு அறிமுகம்

ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து, மத்திய அரசிடம் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலை மாறி, மாநில அரசுகளுக்கும் உரிய சுதந்திரத்தை மீண்டும் மத்திய அரசு வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வுகளை மத்திய அரசு உரிய முறையில் வழங்கினால் இந்தச் சிக்கலை சரிசெய்து விடலாம்.

– அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டத்தில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here