இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கடினமாக உள்ளது. அதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டி உள்ளது. மேலாண்மை, தொழில்நுட்பம் போட்டிகளை சமாளிக்கக் கூடிய திறன் ஆகிய வற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் கூறினார்.
அவர் கூறியாதாவது, இந்தியாவில் தொழில்கள் முன்னேற்றம் அடைய பல வகையில் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும். தொலைநோக்கு சிந்தனை, சிறந்த மேலாண்மை தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் மாற்றம் செய்தால் தான் முன்னேற்றம் காணமுடியும்.
Also read: கடன் கேட்டு வருபவர்களுக்கு முன்வந்து உதவிய “எஸ் வங்கி” ராணா கபூர்
பொருளாதாரம், தொழில் முறையில் மாற்றம் செய்யவேண்டும் என்றால், தற்போதைய சூழ்நிலைக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். நவீன தொழில் நுட்பம், பணி கலாசாரம் ஆகியவற்றில் மேம்பாடு காண வேண்டும். பெரிய அளவிலான மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள். அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி என்பது உறுதியானதாக இருக்கும் என்றார்.
– மலர்