அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. அரசு நிறுவனங்களுக்கு தேவையான பேப்பர், பென்சில், மேசை, நாற்காலி முதல் அனைத்து வகையான பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக, Government e-Marketplace – GeM (ஜெம்) என்ற இ-மார்க்கெட் நிறுவனத்தை நடுவண அரசு கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கியது.
Also read: ஸ்டார் அப் செயல் திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தொடங்குவதற்கான விதிகள்
இந்த நிறுவனம் வணிக வாய்ப்புகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இது குறித்து ஜெம் நிறுவன அதிகாரிகள் கூறுயதாவது, தனியார் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போலவே ஜெம் நிறுவனம் செயல்படுகிறது. அரசு துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இது பாலமாக விளங்குகிறது.
தற்போது, நாட்டில் உள்ள அனைத்து நடுவண அரசு அலுவலகங்கள், 170 பொதுத் துறை நிறுவனங்களும் ஜெம் நிறுவனம் மூலமாகவே தேவையான பொருட்களை கொள்முதல் செய்கின்றன. பொருட்களை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன. இத்தகைய பொருட்களை வழங்க 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், சேவை நிறுவனங்கள், 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் ஜெம் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளன.
Also read: லெட்டர் ஆப் கிரடிட் தரும் பயன்கள்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளின் விலை ரூ.50 ஆயிரம் அல்லது ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதை உடனடியாக ஜெம் -ல் விற்க முடியாது. முதலில் தேவைப்படும் துறைக்கு அதை பரிசோதனை முறையில் வழங்க வேண்டும். அது பயனுள்ளதாக இருந்தால், gem.gov.in என்ற ஜெம் இணையதளத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஆர்டர் பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்றனர்.