Latest Posts

விளம்பர இதழ் நடத்த கைகொடுக்கும் பயிற்சிகளும், விருதுகளும்!

- Advertisement -

பெரிய நகரங்களில் ஒவ்வொரு ஏரியாவிற்கும் அந்த பகுதியை சார்ந்த விளம்பரங்களுடன் இலவச செய்தி இதழ் வாரம் ஒரு முறை வரும். இப்படி வெளிவரும் பல செய்தித்தாள்கள் சிக்கல்களால் நின்றுவிடுவதும் உண்டு. ஆனால், அவற்றில் புதுமைகளை புகுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்றும், தங்கள் பகுதி மக்களுக்கு செய்திகளுடன் பலவித விருதுகளையும் வழங்கி பலவித செயல்களை செய்து வருகிறார் திரு. சுகுமார் சுவாமிநாதன் அவர்கள்.

அவர் கூறியதாவது, “ஒரு செய்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். பிறகு சொந்தமாக தொழில் செய்ய விரும்பி அந்த நிறுவனத்தில் இருந்து விலகி பல நிறுவனங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைன் செய்து தரும் பணியை தொடங்கினேன். வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் வேலை செய்து தந்தேன். இருந்தாலும் விளம்பர இதழ் நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. எங்களுடைய பகுதியான சென்னை, கொளத்தூரில் தொடர்ச்சியாக இலவச இதழ்கள் வருவதில்லை. அதற்கு நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் புதுமையாக செய்தால் நிச்சயம் இதில் வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்தில் 2015ஆம் ஆண்டு முதல், கொளத்தூர் மெயில் என்ற மாத இதழை வெளியிட தொடங்கினேன்.

Also read: அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற, தமிழக மாணவி ‘நாசா’வுக்கு செல்கிறார்!

தொடக்கத்திலேயே ஒரு உறுதி எடுத்துக்கொண்டேன். மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள், அலுவலகமே இல்லாமல் முகவரி கொடுக்கும் விளம்பரங்கள், MLM என்று சொல்லப்படுகிற நெட்வொர்க் மார்க்கெட்டிங் போன்றவற்றை தவிர்த்து சரியாக இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனங்களில் இருந்து மட்டுமே விளம்பரம் பெற வேண்டும் என்ற உறுதி மொழி எடுத்து இன்று வரை அவற்றை பின்பற்றி வருகிறேன். மொத்தம் எட்டு பக்கங்கள் கொண்ட செய்தித்தாள் வெளியிடுகிறேன். அதில், அந்த பகுதி செய்திகளை வெளியிடுவதால் மக்கள் தங்கள் வட்டாரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றிய தகவல்களை வழங்குகிறார்கள். நாட்டில் நடப்பதை கொடுப்பதற்கு எண்ணற்ற செய்தி நிறுவனங்கள் உண்டு. ஆனால், வட்டார செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த இடத்தை கொளத்தூர் மெயில் நிறைவு செய்கிறது. இவற்றைத் தவிர பல்வேறு விருதுகளை சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருதும், இளைஞர்களுக்கு மற்றும் ஓவியம், கட்டுரை, கவிதை போன்றவற்றில் சிறப்பாக இயங்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு young star விருதும், சமூகத்திற்கு தொண்டு செய்து வரும் அனுபவமிக்க மனிதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த மனிதருக்கு ஐகான் ஆஃப் தி இயர் விருதும், கொலு போட்டி, கோலப் போட்டி, சமையல் குறிப்பு போட்டி போன்ற வற்றில் வெற்றி பெரும் பெண்களுக்கு அவர்களை உற்சாகபடுத்துவதறான விருதும், குறிப்பாக சிறந்த தம்பத்தினருக்கு சிறந்த தம்பதியார் மற்றும் குடும்பம் விருதும் கொடுத்து சிறப்பித்து வருகின்றோம். கடந்த ஆண்டு ஐகான் ஆஃப் தி இயர் விருது-2018 பிரேம் நாத் என்பவர் பெற்றார். 2014 ஆண்டு லிபியா நாட்டின் கடலில் நடந்த மீட்பு பணியில் 80 உயிர்களை காப்பாற்றிய இவர் கொளத்தூர் பகுதியில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சொல்லி கொடுக்கிறார். விருதுகள் மனிதர்களுக்கு உற்சாகம் தரும் என்பதால் இந்த பகுதி மக்கள் உற்சாகமாகவும், சிறப்பாகவும் செயல்படுகிறார்கள்.

Also read: டேட்டா சென்டர்களை இங்கேயே அமைக்க வேண்டும்!

அச்சு செய்திதாள் மட்டும் இல்லமால் யூடியூப் சேனல் வழியாக செய்திகளை கொடுக்கிறேன். வாட்சாப் வழியாக M.Paper என்று சொல்லப்படுகிற மொபைல் செய்திதாளும் அனுப்புவதால் அச்சு செய்தி தாள் பார்க்க முடியாதவர்கள் இவற்றை படிக்க தொடங்குகிறார்கள். இப்போது, எளிமையாக கணினி இயக்குவதற்கான பயிற்சியை கற்றுக் கொடுத்து வருகிறேன். உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பலருக்கு கணினியை இயக்க சிக்கல் இருப்பது உண்மை. அவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுப்பதால் பலர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கணினி பயிற்சி கொடுப்பதற்கு என்று தனியாக ஒரு அலுவலகம் எடுத்து உள்ளேன். M.Sc Psychology முடித்து உள்ளதால் Mind Power Training சொல்ல படுகின்ற நம்மால் ஒரு வேளையில் முழுமையாக கவனம் செலுத்தி செய்து வெற்றி பெற முடியும் என்பதற்கான பயிற்சியை கொடுத்து வருகிறேன். இவை மூன்று நாட்கள் நடைபெறும். இதன் மூலம் சிறுவர்களால் நன்கு படிக்கவும், மனதை ஒருமுகபடுத்தவும் முடியும்.

கொளத்தூர் மெயில் மூலம் மக்களுக்கு விருதுகள், எளிமையாக கணினி பயிற்சி, மாணவ-மாணவிகளுக்கு mind power training போன்றவை நடத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறேன். ஒரு இலவச செய்தித்தாள் நடத்துவதில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் எனக்கும் ஏற்பட்டது. இருந்தாலும், இந்த பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்று உள்ளதால் இந்த இதழுக்கு விளம்பரங்கள் வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்திவருவதால் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து உள்ளேன். இன்று கொளத்தூர் பகுதி மக்களின் மனதில் சிறந்த இடத்தை பிடித்து உள்ளேன். இவற்றை தக்கவைக்க இன்னும் கடுமையாக, அதே நேரம் நேர்மையாக உழைக்கவேண்டும் என்று செயல்பட்டு கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார் திரு. சுகுமார்.

– செழியன். ஜா

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news