டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் – ன் செயல் இயக்குநர், மாலா வசிராணி, ஊடகர்களுடன் பேசுகையில், ”எமது குருதி இயல் தொடர்பான கருவிகளை அண்மையில் அறிமுகம் செய்து உள்ளோம். சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ கல்வி நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டு வருவதன் காரணமாக, இந்திய சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இடத்தில் இருந்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் கூட்டிணைவுகள் மற்றும் தேசிய சுகாதார திட்டம் போன்ற திட்டங்களின் கீழ், அரசின் சுகாதார திட்டங்களை தமிழ்நாடு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது. 2018 தொழில் துறை அறிக்கைகளின்படி இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் தொழில்துறையானது, 5.2 பில்லியன் யுஎஸ் டாலர் (35,097.40 கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவைகளுள் பெரும்பாலானவை, இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையை மாற்றுகின்ற செயல்பாட்டின் முன்னணியில் டிரான்ஸ்ஏஷியா போன்ற நிறுவனங்கள் இருந்து வருகின்றன மற்றும் இந்தியாவில் இச்சாதனங்களை தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
கிராமப்புற பகுதிகளில் இரத்தவியல் மற்றும் உயிரி வேதியியல் பரிசோதனை திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேட் உடன் டிரான்ஸ்ஏஷியா நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறது. .
Also read:வேகமெடுக்கும் தமிழ்நாட்டு குளிர்பான நிறுவனம்
சுகாதார சேவைகளின் தரம் மற்றும் அவைகளை அணுகிப் பெறுவதற்கான அளவுகோலில் 176 நாடுகள் மத்தியில் இந்தியா 145-வது இடத்தில் இருக்கிறது. திறன்வாய்ந்த பணியாளர;கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உட்பட, தரமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிக்கு குறைவான அணுகுவசதி இருப்பது, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற 70 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்தியர;களுக்கு வலியும், ஏமாற்றமும் அளிக்கின்ற சிக்கல்களாக இருந்து வருகின்றன. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் எளிய விலையில் நோயறிதல் ஆய்வுகளை ஏதுவாக்குவதற்கு உள்நாட்டிலேயே மருத்துவ சாதனங்களை தயாரிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த டிரான்ஸ்ஏஷியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
1979 – ல் நிறுவப்பட்ட டிரான்ஸ்ஏஷியா பயோ-மெடிக்கல்ஸ் இன்-விட்ரோ டயக்னாஸ்டிக் நிறுவனம். இந்தியாவெங்கும் 65,000-க்கும் அதிகமான சாதனங்களை நிறுவி இருக்கிறோம். உயிரி வேதியியல், இரத்தவியல், இரத்தம் உறைதல், இஎஸ்ஆர், நோய்எதிர்ப்பியல், சிறுநீர் பகுப்பாய்வு, தீவிர சிகிச்சைக்கான கருவிகள், நீரிழிவு மேலாண்மை, நுண்ணுயிரியியல் மற்றும் மாலிகுலர் மூலக்கூற்று டயக்னாஸ்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் கருவிகளை வழங்கி வருகிறோம். 23 மண்டல அலுவலகங்கள் மற்றும் 350+ வினியோகஸ்தர்கள் என்ற வலையமைப்பை கொண்டிருக்கிறோம்.
1990-களில் காலக்கட்டத்தில் இரத்த பகுப்பாய்வு சாதனங்கள் மற்றும் ரீ-ஏஜென்ட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனம் நாங்கள். பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியதன் வழியாக, யுஎஸ்ஏ, யுகே, ஜெர்மனி, செக் குடியரசு, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் எங்கள் செயல்பாடுகளை பரவலாக்கி இருக்கிறோம்.” என்றார்.
– சீனி